திருமணமான கணவன் மனைவியை வன்புணர்வு செய்வது குற்றமாகுமா, ஆகாதா என்ற விவாதம் காலங்காலமாக நடந்துவருகிறது. இது தொடர்பாக வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன. மகளில் அமைப்புகள் ‘அதைக் குற்றமாகக் கருத வேண்டும்’ எனத் தொடர்ந்து போராடிவருகின்றன. இதேபோல் ஒரு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற விசாரணை அமர்வு இரு வேறு தீர்ப்புகளைக் கூறியிருக்கின்றன.
கணவன், மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்வது குற்றம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவைப் பல மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் அளித்திருந்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் வாதங்களை உயர் நீதிமன்றம் கேட்டிருந்தது. முழு வாதமும் முடிந்த பிறகு தீர்ப்புக்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ராஜீவ் சங்கர், ஹரி சங்கர் ஆகிய நீதிபதிகள் இருவர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் நீதிபதி ராஜீவ் சங்கர், இந்தியத் தண்டனைச் சட்டம் 375-ல் கணவன்மாருக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அதனால் கணவன் பாலியல் பலாத்காரம் செய்தாலும் அது குற்றமாகத்தான் பார்க்க வேண்டும். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளார். அதே நேரம் மற்றொரு நீதிபதியான ஹரி சங்கர், கணவனின் பாலியல் பலாத்காரத்தைக் குற்றமாகப் பார்க்க முடியாது. அதனால் அதற்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு சரியானதுதான். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்றதுதான் என்று கூறியுள்ளார். ஒரு அமர்வில் இரு வேறு தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago