டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 2

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 2) அன்று பகுதி-1இல் முதல் 15 வினாக்களை வெளிட்டிருந்தோம். இது அடுத்த 15 வினாக்கள்:-

தமிழ்நாடு - 1


16. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

அ) தெருக்கூத்து

ஆ) பரத நாட்டியம்

இ) கதகளி

ஈ) கரகாட்டம்

17. களப்பிரர்கள் எந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தை ஆண்டதாக கருதப்படுகிறது?

அ) கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 6 ஆம் நூற்றாண்டு


18. யுனெஸ்கோவின் பாரம்பரியக் களமான மாமல்லபுர கடற்கரைக்கோயில் பல்லவர்களால் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

அ) கி.பி. 8 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 11 ஆம் நூற்றாண்டு

19. பல்லவ சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னன் யார்?

அ) நந்தி வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

20. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஆதித்ய சோழனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

அ) முதலாம் நரசிம்ம வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

21. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?

அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

22. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் தமிழ் மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட நாள் எது?


அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

23. 'நீராரும் கடலுடுத்த' பாடல் எங்கு கடவுள் வாழ்த்தாக பாடப்பட்டு வந்தது?

அ) மதுரை தமிழ்ச் சங்கம்

ஆ) கரந்தை தமிழ்ச் சங்கம்

இ) தருமபுரி ஆதீனம்

ஈ) குன்றக்குடி ஆதீனம்

24. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) பெ. சுந்தரனார்

25. புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் எந்த வருடம் வெளியிடப்பட்டது?

அ) 1891

ஆ) 1903

இ) 1956

ஈ) 1970

26. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் யார்?

அ) கே.வி. மகாதேவன்

ஆ) இளையராஜா

இ) ம.சு. விஸ்வநாதன்

ஈ) ஏ.ஆர். ரகுமான்

27. தமிழ்நாடு அரசு சின்னத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் எது?

அ) உழைப்பே உயர்வு

ஆ) வாய்மையே வெல்லும்

இ) தமிழ் வாழ்க
ஈ) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

28. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

அ) வரையாடு

ஆ) புலி

இ) யானை

ஈ) சிங்கம்

29. தமிழக அரசின் நாட்காட்டியாக திருவள்ளுவர் நாட்காட்டி எந்த வருடம் நடைமுறைக்கு வந்தது?

அ) 1969

ஆ) 1972

இ) 1977

ஈ) 1992

30. நாம் பயன்படுத்தும் கிரிகேரியன் நாட்காட்டியுடன் எத்தனை வருடங்களைக் கூட்டினால் திருவள்ளுவர் நாட்காட்டி கிடைக்கும்?

அ) 33

ஆ) 32

இ) 31

ஈ) 30

இந்த வினாக்களுக்கான விடைகள் விடைகள் மே 6 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படவுள்ள அடுத்த பகுதியில் இடம்பெறும்.

கடந்த பகுதியில் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்:

1. ஆ.1.3

2. இ. 10 வது

3. இ. 7.21கோடி

4. அ. 6வது

5. இ. 550/ச.கிமீ

6. ஈ. 80.33%

7. இ. 996/1000

8. அ. 1076 கிமீ

9. இ. 14 - 01 - 1969

10. இ. ஶ்ரீவில்லிபுத்தூர்

11. ஆ. மரகதப்புறா

12. அ. கபடி

13. ஈ. செங்காந்தள்

14. ஆ. பனை

15. ஆ. பலா

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE