சாதனை| செயற்கைக் காலுடன் 104 நாட்களில் 104 மாரத்தான்கள்!

By ஸ்நேகா

மெரிக்காவைச் சேர்ந்த ஜாக்கி ஹண்ட் ப்ரோர்ஸ்மா, செயற்கைக் காலுடன் 104 நாட்களில் 104 மாரத்தான்களை ஓடி சாதனை படைத்திருக்கிறார்!

தென் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக்கி ஹண்ட் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 26 வயதில் புற்றுநோய் காரணமாக அவருடைய இடது காலில் பாதி வரை அகற்றப்பட்டுவிட்டது.

“எல்லாமே ரொம்ப வேகமாக நடந்தது. புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட இரண்டாவது வாரம் என் கால் அகற்றப்பட்டது. உயிரா, காலா என்றால் உயிர்தானே முக்கியம்! காலை இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு என் மனம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. செயற்கைக் கால் மூலம் வெளியே செல்லும்போது என்னை யாரும் உற்றுக் கவனிக்கவில்லை என்பது ஆறுதலைத் தந்தது. என் கணவர் நீண்ட தொலைவு ஓடக்கூடியவர் என்பதால், அவரை உற்சாகப்படுத்துவதில் என் கவனத்தைத் திருப்பினேன். ஒரு நாள் நானும் ஓடுவேன் என்று நினைக்கவேயில்லை. 2016ஆம் ஆண்டு நீண்ட தொலைவு ஓடக்கூடிய செயற்கைக்கால் பொருத்திக்கொண்டேன். எனக்கும் ஓடுவதற்கான ஆர்வம் வந்தது. 10 கி.மீ. தொலைவு ஓடுவதற்காகப் பதிவு செய்தேன். அந்த ஓட்டம் கொடுத்த நம்பிக்கையால், அரை மாரத்தானில் பங்கேற்றேன். அதற்குப் பிறகு என் கால் குறித்து நான் கவலைப்படவே இல்லை. நானும் மற்றவர்களைப் போலத்தான், எதையும் இழந்துவிடவில்லை என்கிற எண்ணம் வந்தபோது, என்னை நானே ஒவ்வொன்றையும் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்திக்கொண்டேன். அப்படித்தான் தினம் ஒரு மாரத்தான் ஓடும் நிலைக்கு வந்துசேர்ந்தேன்” என்கிறார் ஜாக்கி ஹண்ட்.

2022 ஜனவரியில் தினம் ஒரு மாரத்தான் தொலைவை (42.2 கி.மீ) ஓட ஆரம்பித்தார். 100 நாட்களில் 100 மாரத்தான்களை ஓடுவதே ஜாக்கி ஹண்ட்டின் இலக்காக இருந்தது. 2020ஆம் ஆண்டு அலிசா அமோஸ் கிளார்க் 95 மாரத்தான்களை ஓடி சாதனை படைத்திருந்தார். கடந்த மாதம் மாற்றுத்திறனாளியான கேட் ஜேடன், 101 நாட்களில் 101 மராத்தான்கள் ஓடி, அமோஸ் கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். அதனால், ஜாக்கி ஹண்ட் 102 மாரத்தான்கள் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அரிசோனாவில் 104 நாட்களில் 104 மாரத்தான்களை ஓடி, சாதனை படைத்துவிட்டார்! அதிகாரப்பூர்வமற்ற வகையில் இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. கின்னஸ் நிறுவனம் ஜாக்கி ஹண்ட்டின் சாதனையைச் சரிபார்ப்பதற்குச் சில வாரங்கள் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு கின்னஸில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறுவார் என்று அறிவித்துள்ளது.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்