பெண் சக்திக்கு விருது

By செய்திப்பிரிவு

ல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சியாக, 2022ஆம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனம். சாதனையாளர்களுக்கு துர்கா ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
பெண்கள் சமூகத்தில் அவர்கள் காண விரும்பும் மாற்றமாக இருக்க ஊக்குவிக்க ‘#இட்ஸ்டைம்ஃபார்மீ’ என்கிற தனித்துவமான பிரச்சாரத்தை நேச்சுரல்ஸ் தொடங்கியது. இது நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் சி.கே.குமரவேல் ஆகியோரின் முயற்சியில் விளைந்த பிரச்சாரம். இந்தக் கருப்பொருளில்தான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாற்றம் மற்றும் மாற்றத்தின் சாம்பியன்கள் என்பதற்காக விருதுகள் வழங்கப்பட்டன. நேச்சுரன்ஸின் புதிய இணையதளத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘#இட்ஸ்டைம்ஃபார்மீ’ பிரச்சார வீடியோ ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இசை கலை மற்றும் கலாச்சாரம், மாடலிங், பள்ளிக்கல்வி, தொழிலதிபர், சமையல் என்று பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா, நடிகை சிம்ரன், டாக்டர்.மரியாஜீனா ஜான்சன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நமிதா மாரிமுத்து, சமூகச் செயற்பாட்டாளர் ப்ரீத்தி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE