சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் உள்ள ஆளுமைத் தனித்தன்மைகளை (Personality) கண்டறியும் தேர்வுக ளைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இவற்றிலுள்ள மேலும் சுவாரசியமான பிற கோணங்களைப் பார்ப்பதற்கு முன்னால், சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் வேறு சில பிரிவுகளையும் அலசுவோம்.
இவற்றை ஒவ்வொரு பிரிவாகப் பார்க்கலாம்.
முதல் பிரிவு தொடர்புபடுத்துதல்.
தொடர்புபடுத்திப் பார்ப்பது என்பது மனித இயல்பு. பகுத்தறிவின் முக்கியமான அம்சம் அது. ஆனால் சரியான முறையில் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லையென்றால் விப ரீதங்கள் விளையும். இதனால் உறவு முறைகளும், நட்பும் பாதிக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, தேர்வுகளில் வெற்றி பெறாமலும் போகலாம்.
எடுத்துக்காட்டு
வழக்கறி ஞர் : நீதிமன்றம்
இந்தக் கேள்விக்கு நான்கு விடைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை
1) கதாசிரியர் : கதை
2) பரப்பளவு : நிலம்
3) ஹோட்டல் : சர்வர்
4) பேராசிரியர் : கல் லூரி
மேலே உள்ள நான்கில் எது சரியான விடை? அதாவது கேள்வியில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. அவற்றுக்கிடையே உள்ள அதே தொடர்பு நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடையிலும் இருக்க வேண்டும். இப்போது நான்கு விடைகளையும் பார்ப்போம். இரண்டாவது விடை தவறானது என்பது தெரிந்துவிடுகிறது. ஏனென்றால் அதில் மனித னே இல்லை.
வழக்கறிஞர் என்பவர் நீதிமன்றத்தில் பணி புரிபவர். இதே அடிப்படை எந்தப் பதிலில் இருக்கிறது என்று பார்ப்போம். கதாசிரியர் கதையை எழுதுகிறாரே தவிர கதையில் பணிபுரியவில்லை. நிலம், பரப்பளவு ஆகியவை இந்த அடிப்படையில் பொருத்தமானதாக இல்லை.
ஹோட்டலில் சர்வர் வேலை செய்கிறார். கல் லூரியில் பேராசிரியர் வேலை செய்கிறார். அப்படிப் பார்த்தால் இரண்டு விடைகளுமே சரியாக இருக்கிறதே என்கிறீர்களா? அவை எந்த வரிசையில் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
கேள்வியில் வழக்கறிஞர் முதலிலும், கல் லூரி பிறகும் உள்ளன. ஆனால் மூன்றாவது விடையில் சர்வர் முதலில் இல்லை. இரண்டாவதாகத்தான் இருக்கிறது. நான்காவது விடையான ‘பேராசிரியர்- கல்லூரி’ என்பதில் இந்த வரிசை சரியாக இருக்கிறது. எனவே அதுதான் சரியான விடை.
இப்போது கீ ழே உள்ள கேள்விக்கு விடையளியுங்கள்.
கொடி : நாடு
1) சிப்பாய் : யுத்தம்
2) சைவம் : பசு
3) குள்ள நரி : தந்திரம்
4) முல்லை : பாரி வள்ளல்
கீழே உள்ள விள க்கங்களைப் படிப்பதற்கு முன்னால், நீங்களே முயன்று கேள்விக்கான விடையைக் கண்டுபிடியுங்கள். பிறகு தொடர்ந்து படியுங்கள்.
கொடி என்று கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை மரம், செடி போன்ற வரிசையில் வரக்கூடிய கொடி அல்ல. அது தேசியக் கொடி. இப்படி வைத்துக் கொண்டால், நான்காவது விடை சரியானது அல்ல என்பது தெரிந்துவிடும். (ஒருவேளை நான்காவது விடை முல்லை : பரம்பு (பரம்பு என்பது பாரி வள்ளல் ஆண்ட நாடு) என்பதாக மாற்றிப் போடப்பட்டிருந்தால் அந்தப் பதிலை ஓரளவாவது பரிசீலிக்கலாம்.
எப்போதுமே பதில்களை அலசுவதற்கு முன்னால் கேள்வி பற்றிய தெளிவு இருக்க வேண்டும். கொடிக்கும், நாட்டுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்ன? கொடி என்பது அந்த நாட்டி ன் குறியீடு. (அதாவது இரண்டு நாடுகளுக்கு ஒரே கொடி இருப்பதில்லை) இந்தக் கோணத்தில் பார்த்தால், மூன்றாவது விடைதான் சரியானது என்பது உங்களுக்கு விளங்கி விடும். அதாவது தந்திரம் என்பதன் குறியீடு குள்ளநரி.
தொடர்புபடுத்துதல் தொடர்பாக இன்னொரு வகையிலும் கேள்விகள் அமையலாம். இதோ ஓர் எடுத்துக்காட்டு :
பெருமழை : தூறல். புயல் - ?
1) சுனாமி
2) சூறாவளி
3) தென்றல்
4) நாசம்
எதுபோ ன்ற விடை எதிர்பார்க்கப்படுகிறது என்பது புரிகிறது அல்லவா? பெருமழை என்பதற்கும், தூறல் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ. அதே தொடர்பு புயல் என்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடைக்கும் இருக்க வேண்டும்.
பெருமழையின் ஒரு மிகச்சிறிய தன்மையான வெளிப்பாடுதான் தூறல்.
பெருமழையின் விளைவு தூறல் அல்ல. எனவே புயலின் விளைவான நாசம் இதற்குச் சரியான விடையல்ல. எனவே நான்காவது விடையை நீக்கிவிடலாம்.
புயலின் மற்றொரு பெயர் என்று சூறாவளியைக் குறிப்பிடலாம். ஆனால் பெருமழையின் மறுபெயர் தூறல் அல்ல. எனவே இரண்டாவது விடையும் தவறு.
புயலைப் போல சுனாமியும் ஓர் இயற்கைப் பேரிடர். ஆனால் தூறல் இயற்கைப் பேரிடர் அல்ல. எனவே முதல் விடையும் தவறு என்றாகி விடுகிறது.
இப்போது மூன்றாவது விடை யைப் பார்ப்போம். புயலின் தன்மையான, ஏற்கக்கூடிய வடிவம் தென்றல். எனவே இதுவே சரியான விடை.
இப்போது இதே போன்ற இன்னொரு கேள்வி. விடை கண்டுபிடியுங்கள்.
கறுப்பு: கடற் கொள்ளையர் - வெண்மை : ?
அ) மதர் தெரஸா
ஆ) தேசியக் கொடியின் நடுவே
இ) சமாதானம்
ஈ) தீவட்டிக் கொள்ளையர்கள்?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க கடற்கொள்ளையர்கள் தங்கள் கப்பலில் கறுப்புக் கொடியைக் கட்டி இருப்பார்கள் என்று தெரிந்திருக்க வேண்டும் (அதில் மண்டை ஓடும், இரண்டு வாள்கள் குறுக்கு வாட்டிலும் இருக்கக் கூடும்). இந்தக் கோணத்தில் தான் நீங்கள் யோசிக்க வேண்டுமே தவிர, ‘மதர் தெரஸா வெள்ளை ஆடை அணிந்திருப்பார். கடற்கொள்ளையர்கள் கறுப்பு ஆடை அணிந்திருக்க வாய்ப்பு உ ண்டு’ என்று நினைத்து முத ல் பதிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
அதாவது விடையில் உள்ள தொடர்பை முதலில் யோசிக்காதீர்கள். கேள்வியில்தான் உங்கள் கவனமும், தெளிவும் முதலில் இருக்க வேண்டும்.
‘கடற்கொள்ளையர்கள். கப்பலில் கறுப்புக் கொடி’ என்று முதலில் நாம் தீர்மானித்தோம். ஆனால் அப்படிப் பார்த்தால் எந்த விடையும் ஒத்துவரவில்லை.
எனவே கேள்வியில் வேறு தொடர்பு இருக்கிறதா என்று பா ர்க்க வேண்டும். ‘கறுப்புக் கொடி, கடற்கொள்ளையர்களை உணர்த்துகிறது’. இந்த லாஜிக்கின்படிப் பார்த்தால், வெள்ளைக் கொடி சமாதானத்தை உணர்த்துகிறது. எனவே மூன்றாவது விடைதான் சரியானது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago