எம்.ஜெய்சங்கர்
நிர்வாக இயக்குநர்
விஷன் ஆப்டிமம்
பைனான்சியல்
சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
வருமான வரி விலக்கு பெறுவதற்கான சேமிப்புத் திட்டங்கள் பல உள்ளன. இதில் தங்களுக்குத் தேவையான பொருத்தமான ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதில் ஒன்றுதான் பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டுத் திட்டமான ஈக்விடி லிங்க்டு சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்). வரி சேமிப்புக்கு மிகச் சரியான தேர்வாக இது கருதப்படுகிறது.
இந்த முதலீட்டுத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது பல்வேறு நிதித் திட்டங்களில் பரந்துபட்டு முதலீடு செய்யப்படும். திறந்த நிலையிலான இந்தத் திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது. உங்கள் முதலீட்டுக்கு மிகச் சிறந்த ஆதாயம் கிடைக்கும் அதேவேளையில் வருமானவரிச் சலுகையும் இத்திட்டத்துக்குக் கிடைப்பது கூடுதல் ஆதாயம் தருவதாகும். 1962-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் இஎல்எஸ்எஸ் முதலீடுகளுக்கு வரிச் சலுகை பெற முடியும். 80 சி பிரிவின் கீழ் வரி விலக்குச் சலுகை அளிக்கப்பட்டாலும் இதில் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை மட்டுமே விலக்கு பெற முடியும். ரூ.1.50 லட்சத்துக்கு மேலான முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு கோர முடியாது.
ஆனால் இந்த இஎல்எஸ்எஸ் முதலீட்டுத் திட்டத்தில்தான் மிகக் குறைவான இருப்புக் காலம் உள்ளது. அதாவது பிற முதலீட்டுத் திட்டங்களான பிபிஎப், என்எஸ்சி உள்ளிட்ட திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் கட்டாய இருப்புக் காலம் 3 ஆண்டுகளாகும். 80 சி பிரிவில் வரிவிலக்குப் பெறுவதற்கு உள்ள முதலீட்டுத்திட்டங்களை விட இது சிறந்தது. அதேசமயம் பண வீக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை முறியடிக்கும் வகையில் மிகச் சிறந்த ஆதாயத்தை ஈட்டித் தருவதாக இஎல்எஸ்எஸ் திட்டம் உள்ளது.
இத்தகைய பல சாதக அம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே மற்ற முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்த திட்டமாக இஎல்எஸ்எஸ் வரி சேமிப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது. இந்த முதலீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சமே இஎல்எஸ்எஸ் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இது இருப்பதுதான். இது நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டம் என்பதை உணர வேண்டும். பரந்து பட்ட முதலீடுகளை மேற்கொள்ளும் இந்த நிதியத்தின் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க வேண்டுமெனில் சற்று காத்திருக்கத்தான் வேண்டும்.
பிற நிதி முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் இஎல்எஸ்எஸ் திட்டமானது ஒருங்கிணைந்த வகையில் மூன்று ஆண்டுகள் இருப்புக் காலம் கொண்டதாகும். இதன் காரணமாகவே முதலீட்டாளர்களுக்கு முதிர்வுக் காலத்தில் மிக அதிகபட்ச ஆதாயம் கிடைக்க வழியேற்படுகிறது. இஎல்எஸ்எஸ் நிதித் திட்ட முதலீடுகளின் கடந்த காலங்களைப் பார்க்கும் போது 5 ஆண்டுகளுக்கு மேலான முதலீடுகள் 10 சதவீதம் முதல் 15 சதவீத ஆதாயத்தை அளித்துள்ளதைக் காண முடிகிறது. பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் உள்ள அபாயங்களுடன் ஒப்பிடுகையில் இஎல்எஸ்எஸ் முதலீட்டு நிதியத் திட்டங்களும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டதுதான்.
பிற பரஸ்பர நிதித் திட்டங்களில் உள்ள சந்தை அபாயங்கள் இதற்கும் உண்டு. குறுகிய காலத்தில் பார்த்தோமானால் சந்தையின் ஏற்ற, இறக்க சூழலில் இதுவும் பாதிக்கப்படும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது அத்தகைய அபாயங்களிலிருந்து மீண்டு லாபகரமானதாக மாறும். ஒருவேளை நீங்கள் இஎல்எஸ்எஸ் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவராயிருந்தால், அதை நீண்ட கால முதலீடாகக் கருதி முதலீடு செய்ய வேண்டும். இது போன்று முதலீடுகளில் ஒன்றாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நீண்ட கால முதலீட்டுத் திட்டமும் ஒன்றாகும். இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுக்கேற்ற சிறந்த பலனை அளிப்பதாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago