ஆங்கிலம் அறிவோமே - 99: திருட்டு, கொள்ளை என்ன வித்தியாசம்?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

Southpaw என்றால் என்ன என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டுச் செய்திகளில் இந்த வார்த்தை அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

Southpaw என்றால் இடக்கைப் பழக்கம் கொண்டவர். குத்துச் சண்டை விளையாட்டில் இந்த வார்த்தை தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. வலது கையையும், வலது காலையும் முன்புறம் வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருப்பதை Southpaw stance என்பார்கள். அதாவது தற்காப்புக்கு வலப்பகுதியை வைத்துக்கொண்டு இடது கையால் குத்துவது இடது கைப்பழக்கம் கொண்ட குத்துச் சண்டை வீரரின் இயல்பு. (வழக்கமல்லாத என்ற அர்த்தத்திலும் Southpaw என்ற வார்த்தையைப் பயன்படுத்து கிறார்கள்). கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேனை Southpaw என்பார்கள்.

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வேறு சில idioms பற்றிப் பிறகு அறியலாம் என்று முன்னொரு பகுதியில் கூறியிருந்தேன். இப்போது அவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

A hot potato என்றால் இப்போது பரபரப்பாக நிலவிவரும் ஒரு பிரச்சினை.

The ball is in your court என்று உங்களைப் பார்த்து ஒருவர் கூறினால் அடுத்த நடவடிக்கையையோ தீர்மானத்தையோ எடுப்பது உங்கள் கையில் என்று பொருள்.

Beating around the bush என்றால் எது முக்கியமான விஷயமோ அதை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்துப் பேசுவது.

Best of both worlds என்றால் எல்லா சாதகமான சூழல்களும் என்று அர்த்தம்.

“I will cross the bridge when I come to it” என்றால் வரக்கூடும் எனும் பிரச்சினை குறித்து இப்போதே கவலைப்படப் போவதில்லை. வரும்போது பார்த்துக்கொள்கிறேன் என்கிறீர்கள்.

Do not cry over spilt milk என்றால் ’’நடந்தது நடந்து போச்சு அதைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்ததைப் பாரு’’ என்று அர்த்தம்.

Cutting corners என்றால் பணத்தைச் சேமிப்பதற்காக ஒரு காரியத்தை தப்பும், தவறுமாக செய்துவிடுதல்.

Every cloud has a silver lining என்றால் “நம்பிக்கையோடு இருங்கள். துன்பத்துக்குப் பின் இன்பம் வரும்” என்று அர்த்தம்.

‘Jump on the bandwagon’ என்று உங்களுக்கு யாராவது அறிவுரை கூறினால் பெரும்பான்மையோடு ஒத்துப்போ என்று பொருள்.

Last straw என்றால் தொடர் சிக்கல்களில் கடைசிச் சிக்கல் என்று அர்த்தம். அதற்குமேல் பிரச்சினை வராது என்றும் கொள்ளலாம். இதற்கு மேல் எந்தப் பிரச்சினையையும் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் பொருள் கொள்ளலாம்.

He is on the ball என்றால் அவர் சூழலைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்.

Once in a blue moon என்றால் அது அரிதாக நடக்கும் விஷயம் என்று பொருள்.

“Please see eye to eye with your Manager” என்றால் அவரோடு ஒத்துப்போக வேண்டுமென்று பொருள். தனியார் நிறுவனங்களில் வேறொருவரின் (அதாவது தனக்குக் கீழே பணிபுரிவோரின்) முயற்சிகளைத் தன்னுடையது என்று கூறிப் பேர் வாங்கிக்கொள்பவர்கள் உண்டு. இப்படிப்பட்டவர்களை

They steal someone’s thunder என்பதுண்டு.

நீங்கள் சொல்வதை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை அல்லது நான் அதனுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அதை “Taking with a grain of salt’’ என்பார்கள்.

ஃபிலிப் என்றால் என்ன? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டபோது ‘’கேள்வியை சரியாகக் கேளுங்க சார். Philip என்பது யார்? என்றுதான் அந்தக் கேள்வி இருக்க வேண்டும்” என்றார் ஒருவர்.

Philip, Fillip இரண்டையுமே தமிழில் ஃபிலிப் என்று ஒரேமாதிரிக் கூறுவதால் வந்த பிரச்சினை இது. இங்கே நாம் குறிப்பிடுவது Fillip பற்றி. ஒரு செயலுக்கு ஊக்கமோ உத்வேகமோ கொடுக்கும் வகையில் இருக்கும் ஒன்றை Fillip என்பார்கள். The reduction in car tax would provide a fillip to car sales.

`ஒரு கையில் ஓசை எழுப்ப முடியுமா என்று யாராவது கேட்டால் முடியுமே என்றபடி நீங்கள் ஒரு fillip (சொடுக்கு) போட்டு demo காண்பிக்கலாம் (என்றாலும் இதற்கு இரண்டு விரல்கள் வேண்டும் என்பது வேறு விஷயம்). லேசாகச் சுண்டி விடுவதைக்கூட fillip என்பார்கள். She filliped him over the nose.

Rob, steal என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொண்டவைதானே என்பது ஒரு வாசகரின் கேள்வி. Rob என்றால் கொள்ளை அடிப்பது. Steal என்றால் திருட்டுத்தனமாக ஒன்றை எடுப்பது. He robbed a bank and stole the money. அதாவது You cannot rob the money. Robbery மூலம் எடுக்கப்படும் பொருளைத்தான் ‘stolen’ என்பார்கள். (வங்கியைக் கொள்ளை அடித்துப் பணத்தைத் திருடினான் என்பதுதான் சரி. அதாவது வங்கி திருடப்படவில்லை. பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை. திருடப்பட்டது பணம். கொள்ளையடிக்கப்பட்டது வங்கி).

சிப்ஸ்

Resort என்றால் எந்த இடம்?

விடுமுறையில் தங்குமிடம் என்பதுபோல. குறிப்பாகச் சொல்வதென்றால் உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகத் தங்குமிடம்.

# Para என்பதற்கும் stanza என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Para (அதாவது paragraph) என்பது உரைநடைக்கானது. Stanza என்பது கவிதைகளுக்கானது.

# Indian team offbeat என்கிறது நாளிதழ் தலைப்புச் செய்தி. என்ன அர்த்தம்?.

இந்திய அணி நம்பிக்கையோடு இருக்கிறது. உற்சாகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

# SOMETIME - SOME TIME - SOMETIMES

Sometime என்பதை ஒற்றை வார்த்தையாக எழுதினால் அது வருங்காலத்திலோ, கடந்த காலத்திலோ உள்ள ஏதோ ஒரு தோராயமான காலகட்டத்தைக் குறிக்கிறது.

We should meet sometime.

It happened sometime before noon.

Some time என்று இரண்டு வார்த்தைகளாக எழுதினால் ‘கொஞ்ச நேரம்’ என்று அர்த்தம். Some books, some classes என்பதைப் போல.

Please call me when you have some time.

Sometimes என்றால் ‘சில சமயங்களில்’. அதாவது எப்போதும் அல்ல. Sometimes he acts like a fool.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்