வேலைக்கு வயது தடை அல்ல!

By வினு பவித்ரா

சென்ற ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘தி இன்டர்ன்’ படத்தில், ஆன்லைன் பேஷன் நிறுவனம் ஒன்றில் 70 வயதில் பயிற்சிப் பணியாளராகச் சேர்பவராக ராபர்ட் டீ நீரோ நடித்திருப்பார். அந்த நிறுவனத்தின் சிஇஓ, முதலில் இத்தனை வயதானவரை வேலைக்கு எடுக்க மறுக்க , பின்னர் அந்த மூத்தவர் தன்னை வேலைக்கு முற்றிலும் தகுதியானவராக நிரூபிப்பார். இளம் ஊழியர்களிடமும் மரியாதையைப் பெறுவதுதான் அந்தப் படத்தின் கதை.

உலகம் முழுவதும் வயோதிகத்தையும் வயோதிகர்களையும் எப்படிச் சமூகம் அணுகுகிறது என்பதைப் பற்றிய கதை அது. பெரும்பாலும் வயதான ஊழியர்கள் உற்பத்தித்திறன் குறைந்தவர்களாகவும், புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயக்கம் காட்டுபவர்களாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள்.

முன்னேறிய நவீன சமூகச் சூழலில் மனிதர்களின் ஆயுள்காலமும் ஆரோக்கியமும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் வேலைக்கான முன்னுரிமை வயது குறைந்தவர்களுக்கே அளிக்கப்படுவதால் வயது சார்ந்த பாகுபாடுகளுக்கும் வாய்ப்பு இழப்புகளுக்கும் வயோதிகர்கள் உள்ளாகின்றனர்.

முதியோர் சமூகத்தினரை வேலை ஆற்றலாக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது தொடர்பான ஒரு ஆய்வை ஸ்பெயினைச் சேர்ந்த நவரா பல்கலைக்கழகச் சர்வதேச ஆய்வு மையம் நடத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் வயதானவர்களுக்கு மேலும் வேலைவாய்ப்புகள் தேடுவதற்கான சூழ்நிலைகளும் சவால்களும் பெருகும் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை முதியோர் வேலை ஆற்றலை எப்படிப் பயன் படுத்துவது? எப்படி நிர்வகிப்பது? என்பதெல்லாம் வருங்காலத்தில் அந்நிறுவனங்கள் சந்திக்கப் போகும் சவால்கள். இது வெறுமனே சமூக சேவை அல்ல. சமூகத்தின் அடித்தளம் வரை வர்த்தகத்தைப் பாதிக்கப் போகும் சவாலான பிரச்சினை.

வயது தொடர்பாக என்னென்ன சவால்கள் ஏற்படும் என்பதை நான்கு பிராந்தியங்களில் இந்த ஆய்வறிக்கை ஆராய்ந்துள்ளது. அதைச் சார்ந்து சரியான நடைமுறைகளைப் பின்பற்று வதற்கான பரிந்துரைகளையும் இந்த ஆய்வறிக்கை தந்துள்ளது.

தலைமைத்துவம்

அனைத்துத் தரப்பிலிருந்தும் திறன்வாய்ந்த வேலைகளைப் பெறவும், சவாலான பணிகளை ஒப்படைப்பதற்கும் வயதான ஊழியர்களை எடுப்பதற்கான சில விதி தளர்த்தல்களை நிறுவனங்கள் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தால் வயதானவர்களின் அனுபவம் மற்றும் அறிவால் பயன்பெற இயலும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குவது சார்ந்து சமீப காலமாக விழிப்புணர்வு அதிகரித்த நிலையில் முக்கியமான முயற்சிகளும் முன்னேற்றங் களும் நடந்துள்ளன. இருப்பினும் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், இதற்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை நீங்கிய பின்னர், பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் வயதைக் கணக்கில் கொண்டு முக்கியமான முயற்சிகளை எடுத்தல் அவசியம்.

சட்ட அங்கீகாரம்

தற்போதைய சட்ட நடை முறை களைப் பொறுத்தவரை வயதானவர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பது அத்தனை சாதகமாக இல்லை. ஓய்வூதியம் தொடர்பான விதிமுறைகளால் வயதான ஊழியர்கள் தாமதமாகவே ஓய்வுபெறும் நிலை உள்ளது. இதனால் இளம் ஊழியர்களை அடுத்தடுத்து எடுக்க முடியாத நிலை உள்ளது. புதிய தொழில்நுட்பங்களைச் சார்ந்துள்ள நிறுவனங்களில் வயதான ஊழியர்களை எடுப்பதற்குத் தயக்கம் நீடிக்கிறது. ஏனெனில், அவர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடனடியாகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதில்லை என்ற எண்ணம் உள்ளது.

சமூகப் பொறுப்புணர்வு

வேலை நியமனம், பதவி உயர்வு போன்றவற்றில் சமத்துவ உணர்வு, ஒருங்கிணைவு மற்றும் பொறுப்புணர்வுடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பாமல் விலக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் கைவிட வேண்டும். வெவ்வேறு தலைமுறை ஊழியர்களுக்கிடையிலான நல்லுறவை நிறுவனங்கள் பேணி வளர்ப்பது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

34 mins ago

சிறப்புப் பக்கம்

44 mins ago

சிறப்புப் பக்கம்

55 mins ago

சிறப்புப் பக்கம்

59 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்