‘நான்’,‘சலீம்’ படம் தொடங்கி, கொலை செய்வதை கதாநாயகனின் ஹீரோயிசத்தில் ஒரு பகுதியாக ஆக்கியிருப்பவர் விஜய் ஆண்டனி. ‘கொலைகாரன்’ என்றே தன்னுடைய படத்துக்குத் தலைப்பு வைத்தார். தற்போது அந்த சொல்லின் மீதுள்ள தீராத வாஞ்சையால் ‘கொலை’ என்று தன்னுடைய படத்துக்குப் பெயரிட்டுள்ளார். ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அந்தப் படத்தைத் தயாரித்த இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ‘விடியும் முன்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற பாலாஜி கே குமார் இயக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி என இரண்டு கதாநாயகிகள்.
பாலிவுட்டில் அம்ரிஷ்!
‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் - 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட தன்னுடைய துள்ளலான இசைக்காக ரசிகர்களைப் பெற்றுள்ள அம்ரீஷ் பாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார். த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு சமீபத்தில் இசையமைத்திருந்தார். இந்நிலையில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘நாகமதி’ என்கிற இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதைத் தெரிவித்துள்ளார்.
‘டான்’ தோற்றம்
பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துவரும் லைகா புரொடக் ஷன்ஸ் நிறுவனமும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸும் இணைந்து வழங்கும், ‘டான்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகியிருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற நடிகர்கள் இப்படத்தில் இணைந்ததும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு உருவான நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவரும் நேரத்தில் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. இது கல்லூரி வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் முழுநீள நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம் என்பதை ரசிகர்களுக்குச் சொல்லியிருக்கிறது.
டாப்ஸி தயாரிப்பில் சமந்தா!
தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது இந்திப் படவுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் டாப்ஸி. இவர் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ‘ஃப்ளர்’ என்கிற இந்திப் படத்தைத் தயாரித்து வருகிறார். அடுத்து கதாநாயகியை மையப்படுத்திய த்ரில்லர் கதை ஒன்றைத் தயாரிக்கிறார். அதில் நாயகியாக சமந்தா நடிக்க கால்ஷீட் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago