ஆங்கிலம் அறிவோமே - 100: இது வேறு வெறி!

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகருக்கு வெறி பிடிக்கவில்லை. “அப்படியானால் எங்களுக்கு?’’ என்று பிற வாசகர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம். இது வேறு வெறி.

It is very sweet. You are very nice. Your dress is very good. இப்படி எல்லாவற்றுக்கும் very என்ற வார்த்தையையே பயன்படுத்தப் பிடிக்கவில்லை. வேறு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவது என்பது அந்த வாசகரின் கேள்வி.

பல மாற்று வார்த்தைகள் உள்ளன நண்பரே. சொல்லப்போனால் பொருத்தமான, மாறுபட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களைச் சிறந்த மொழி வல்லமை படைத்தவர்களாகப் பிறர் நினைப்பது வழக்கம். எனவே very என்பதற்குச் சமமான பலவிதப் பயன்பாடுகளைக் கட்டாயம் அறிந்துகொள்ளுங்கள்.

It is very cold என்பதற்குப் பதிலாக It is exceptionally cold எனலாம்.

The horror movie was very scary என்பதற்குப் பதிலாக The horror movie was quite scary எனலாம்.

The food was very delicious என்பதற்குப் பதிலாக The food was incredibly delicious எனலாம்.

They felt very sorry என்பதற்குப் பதிலாக They felt terribly sorry என்று கூறலாம்.

The Himalayas is a very big mountain என்பதற்குப் பதில் The Himalayas is an enormously big mountain என்று கூறலாம்.

I am very impressed என்பதற்கு பதிலாக I am tremendously impressed என்று கூறுங்களேன்.

மற்றபடி I am very sorry என்பதற்கு பதிலாக I am extremely sorry என்று பலர் கூறக் கேட்டிருக்கலாம்.

verb என்றால் என்ன என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். Idiom என்றால் என்ன என்று முன்பு குறிப்பிட்டோம். அதாவது, வார்த்தைகளின் நேரடி அர்த்தத்துக்கு மாறாக வேறொரு பொருளை இது உணர்த்துகிறது. Close shave என்றால் மயிரிழையில் தப்பித்தல். Black sheep என்றால் குழுவோடு ஒத்துப் போகாதவன் குழுவுக்கு அவமானத்தைத் தேடித்தருபவன்.

Phrasal

Phrasal verb என்பதும் idiom போலவே பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு verbஐ ஒரு adverb அல்லது ஒரு preposition தொடர வேண்டும். அதே சமயம் idiom போலவே இது பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் அது phrasal verb. சில எடுத்துக்காட்டுகள் கீழே.

Carry on என்றால் continue தொடர்ந்து செய்.

Carry out என்றால் fulfil நிறைவேற்றுதல்

Carry over என்றால் வேறொரு இடத்திலோ பிறிதொரு நேரத்திலோ தொடர்தல்.

Diagnosis என்பதும் Prognosis என்பதும் ஒன்றுதானே என்பது வேறொருவரின் வினா.

Diagnosis என்ற வார்த்தை பெரும்பாலும் நோயைக் கண்டறிதல் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. The doctor’s diagnosis, after checking the patient, was measles.

Prognosis என்பது வருங்காலத்தைப் பற்றிய கணிப்பு. Studying your preparation for the examination, my prognosis is that you will get at least 90%.

JAM

பன், பட்டர், ஜாம் பற்றி அறிந்திருப்போம். ஜாம் என்பதை வேறு விதங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

I am in a jam என்றால் மிகவும் சங்கடமான ஒரு சூழலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

நெருக்கப்படுதல் என்ற அர்த்தமும் இதற்கு உண்டு. அதாவது squeeze. All the 20 of us were jammed in one room. The streets were jammed with tourists.

நகர முடியாமல் சிக்கிக் கொள்வதையும் jam என்பார்கள். நாம் அனுபவிக்காத Traffic jam-ஆ? The photo copies jammed. The windows are jammed.

என்பதற்கும், critic என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Cynic

Cynicism என்றால் எள்ளலாகவும் எரிச்சலாகவும் ஒன்றைப் பகிர்ந்துகொள்வது. Criticism எனறால் ஒன்றை விமர்சிப்பது. விமர்சனம் என்பது பாராட்டாகவும் இருக்கலாம், திட்டாகவும் இருக்கலாம். ஏனோ இப்போதெல்லாம் criticism என்பது எதிர்மறை விமர்சனம் என்றே ஆகிவிட்டது. (“சும்மா அவனை criticise பண்ணிகிட்டே இருக்கே. நல்லதா நாலு வார்த்தை சொல்லு’’).

“இதற்கு முன் வந்த அத்தனை தமிழ்ப் படங்களையும் போல இந்தப் படமும் கேவலமான ஒன்றுதான்” என்பதுபோல் ஒருவர் குறிப்பிட்டால் அவர் cynic. அவர் செய்வது cynicism. மாறாக அந்தப் படத்தின் குறைநிறைகளைக் குறிப்பிட்டால், அவர் critic. அவர் செய்வது criticism.

Cynic என்ற வார்த்தையின் பின்னணி கொஞ்சம் எதிர்பாராதது. கிரேக்க வார்த்தையான ‘Kuon’ என்பதிலிருந்து வந்தது cynic. அந்த கிரேக்க வார்த்தையின் பொருள் நாய். நாய்க்கு வசதிகளோ, சமூக அந்தஸ்தோ கிடையாது (விதிவிலக்குகளை விடுங்கள்). சமூகம் என்பது தவறான மதிப்பீடுகளால் ஏமாற்றப்படுகிறது என்று கருதுகிறார் Cynicism என்ற அமைப்பின் நிறுவனரான ஆண்டிஸ்தெனஸ் எனப்படும் கிரேக்க அறிஞர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் (cynics) கையில் பணம் வைத்துக்கொள்ளாமல், எதிலும் பெரிய ஆசை இல்லாமல் தெருக்களில் நடந்துகொண்டிருப்பது வழக்கம். யாரையும் இவர்கள் மதிக்க மாட்டார்கள். அதாவது பிறரது எந்த உண்மையான நோக்கத்தையும் நம்ப மாட்டார்கள். சக மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் சந்தேகப்படுவார்கள், கேள்வி எழுப்புவார்கள்.

பிரெஞ்சு வார்த்தையான critique என்பதிலிருந்து வந்ததுதான் ஆங்கில வார்த்தையான critic மற்றும் criticism.

“It does not matter how good I make a movie, he will criticise me.’’

# Knick knack என்றால் என்ன அர்த்தம்?

அற்பமான, மிகவும் விலை குறைவான பொருள்.

# Under fire என்றால் என்ன?

தாக்குதலுக்கு அல்லது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலை. He was under fire for backing the principal. She was forced to resign under fire.

# Sensex என்று மும்பை பங்குச் சந்தையைக் குறிப்பிடுவது ஏன்?

BSE Sensex என்பதுதான் அதன் முழுமையான பெயர். அதாவது Bombay Stock Exchange Sensitive Index.



- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

57 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்