ஆங்கிலம் அறிவோமே - 98: வார்த்தைகளால் என்ன பயன்?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர், ‘Words pay no debts’ என்பது பழமொழியா? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்.

பழமொழிதான். சமீபத்திய வெள்ளத்தில் தன் வீட்டுப் பொருள்களையெல்லாம் பறிகொடுத்த ஒருவர் கடன் வாங்கி வாழ்க்கையை ஒப்பேற்றுகிறார் எனும்போது வார்த்தைகளால் நீங்கள் ஆறுதல் கூறி என்ன பயன்? முடிந்த அளவில் பணமோ பொருளோ கொடுத்து உதவுங்கள். இதைத்தான் அந்தப் பழமொழி உணர்த்துகிறது.

வேறு சில பழமொழிகளையும் பாரப்போம். இவற்றுக்கான மொழிபெயர்ப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் நமக்கு எதையெல்லாம் உணர்த்துகிறது என்பதை யோசித்தபோது, எனக்கு பிரமிப்பாக இருந்தது.

A bamboo conduit makes a round jet of water. மூங்கில் குழாய் வழியாகப் பாயும் தண்ணீரும் வட்ட வடிவமாகத்தான் இருக்கும்.

He who fishes one, catches one. ஒரு மீனுக்குத் தூண்டில் போட்டால், ஒரு மீன்தான் கிடைக்கும்.

To deny all is to confess all. எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக மறுப்பது, அவற்றையெல்லாம் (மறைமுகமாக) ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

One of the days is none of the days. ‘ஏதாவது ஒரு நாள்‘ என்று கூறினால் அந்த நாள் வரவே வராது.

Trust in God but tie your camel. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்கள் ஒட்டகத்தைக் கட்டாமல் வைக்க வேண்டாம்.

Peace with a cudgel in hand is war. குறுந்தடியைக் கையில் ஏந்தியபடியே சமாதானத்துக்கு முயன்றால் அது நிஜத்தில் போர்தான்.

What the eye sees not, the heart craves not. கண்களால் காண முடியாதவற்றுக்கு இதயம் ஏங்காது.

Bad is never good until worse happens. மோசம் என்பது ஏற்கத்தக்கதல்ல - படுமோசம் என்பது நிகழும்வரை.

--------------------

Dominance என்றால்? Predominance என்றால்? இப்படி மிகச் சுருக்கமாகத் தன் வினாவைத் கொடுத்துள்ளார் ஒரு வாசகர்.

Dominance என்றால் பிறவற்றின் மீது (அல்லது பிறரின்மீது) ஆதிக்கம் செலுத்துவது. The worldwide dominance of dollar and euro.

Predominance என்றால் அதிக அளவில் இருக்கும் நிலை. The predominance of women can be seen in nursing profession. மற்றபடி dominance என்ற அர்த்தத்திலும், predominance பயன்படுத்தப்படுகிறது.

Supremacy, control, leadership, upperhand போன்ற வார்த்தைகளோடும் மேலே குறிப்பிட்ட இரண்டு வார்த்தைகளை (dominance, predominance) இணைத்துப் பார்க்க முடியும்.

   

டீ ஆற்றுவது பற்றிக் குறிப்பிட்டீர்கள், பால் பொங்குவதை Swelling என்று குறிப்பிடலாமா என்று யதார்த்தமாகக் கேட்டிருக்கிருக்கிறார் ஒரு வாசகர்.

வீங்குவதை swelling எனலாம். உடலில் ஏற்படும் வீக்கம் swelling. (நீர்க்கட்டியை edema என்றுதான் சொல்ல வேண்டும் என்று வாசக டாக்டர்கள் கறாராகக் கூறலாம்).

ஆத்திரம் பொங்கும்போதும் அது பொங்கி வெளிப்படும்போதும் outburst of anger எனலாம். ஆனால் பால் பொங்குவதை அப்படிக் குறிப்பிட முடியாது. (“பொறுத்தது போதும் பொங்கி எழு’’ என்று உத்தரவிட்டால் பால் பொங்கும் என்பதைக் கருணாநிதியே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்)

The milk boils அவ்வளவுதான். பால் பொங்கி வழிந்தால் the milk boils over.

--------------------

“Grand என்றால் விமரிசையாக என்று எழுதியிருந்தீர்கள். ஓர் ஆங்கிலப் படத்தில் ‘I am ready to pay two grands’ என்ற வசனம் வந்ததே’’ என்று ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார் ஓரு நண்பர்.

ஆயிரம் டாலர்கள் என்பதைத்தான் Grand என்கிறார்கள். முன்னொரு காலத்தில் Grand என்பதை விமரிசையாக என்று மட்டுமல்லாமல் ‘மிகவும் பெரிய’ எனற அர்த்தத்திலும் பயன்படுத்தினார்கள். அந்த விதத்தில் ஆயிரம் டாலர் என்பதை மிகப் பெரிய தொகை என்ற பொருளில் பயன்படுத்தினார்கள். Grand Canyon, Grand Slam போன்றவை நினைவுக்கு வருகிறதா?

ஆயிரம் டாலர்களைக் குறிக்க grand என்ற வார்த்தையை முதலில் அமெரிக்காவில் உள்ள கடத்தல்காரர்கள் பயன்படுத்தினார்களாம். நூறு டாலர் நோட்டை ‘C-Note’ என்று குறிப்பிடுவார்கள். இங்கே C என்பது ரோம எண்ணான C என்பதைக் குறிக்கிறது இதற்கு நூறு என்று அர்த்தம்.

BANKRUPTCY - INSOLVENCY

Bankruptcy, insolvency இரண்டு வார்த்தைகளுமே திவாலாவது தொடர்புடையவை. என்றாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

Insolvency என்பது திவாலான நிலை. அதாவது ஒருவரின் கடன்களை அடைக்கவே முடியாத அளவுக்கு அவரது வருமானம் குறைவாக இருந்தால், அவருக்கு நேர்ந்திருப்பது insolvency.

Insolvencyக்கான ஒரு தீர்வு Bankruptcy. அதாவது Bankruptcy என்பது ‘என்னால் என் கடனை அடைக்க முடியவில்லை’ என்பதற்கான சட்டபூர்வமான அறிவிப்பு. ஒரு insolvent நபர் bankruptcy கோரி நீதிமன்றத்தை அணுகுவார்.

அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் சட்டென்று உற்சாகமாக விளக்கத் தோன்றுவதுதானே இயல்பு? ஆனால் அந்த அர்த்தத்தைச் சொல்வதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அந்த வார்த்தை rather.

Rather என்ற வார்த்தைக்கான அர்த்தங்கள் பல.

ஒருவரது தேர்வு விருப்பத்தை rather குறிக்கலாம். I will rather die than accept this.

‘சற்றே’ என்பதைக்கூட rather என்ற வார்த்தை குறிக்கிறது. He is rather a rude man. Some of the monkeys are behaving rather oddly.

சில சமயம் நம் எண்ணம் அல்லது கருத்து அவ்வளவு உறுதியானதாக இல்லாதபோது verbக்கு முன்னால் rather சேர்ப்பதுண்டு. I rather think she loves me.

ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு அதற்கு மாறாக எதையோ சொல்ல வரும்போதும் rather பயன்படுத்தப்படுகிறது. There is no shortage of efficient staff. Rather, the problem is inefficient management. I walked, or rather jogged three miles. He seems angry rather than tolerant.

Appendix என்றால் என்ன?

ஒரு புத்தகம் அல்லது அத்தியாயத்தின் இறுதியாகக் கொடுக்கப்படும் அதிகப்படித் தகவல் அது. உடலில் உள்ள appendix (குடல்வால்) என்பது அதிகப்படியான (அதாவது தேவையில்லாத) உறுப்பு என்பது பரவலான கருத்து

# ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில் Nigger என்ற வார்த்தை அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டது. அப்படியென்றால்?

அந்தக் காலத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவரைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பண்பு நிறைந்தவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள்.

# Cognizant என்றால் என்ன பொருள்?

ஒன்றைப் பற்றிய புரிதல். அதாவது awareness அல்லது knowledge.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்