பள்ளி, கல்லூரிகளில் படிப்பை முடித்த பின்னர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் பலரின் ஆசை, கனவு, விருப்பம். ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்த வேலையை நாடிச் செல்வார்கள். சிலர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விரும்புவார்கள், சிலர் அரசுத் துறைக்குச் செல்ல ஆசைப்படுவார்கள். அரசுத் துறையில் நுழையும்போது அங்கே நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும். பின்னர்தான் வேலை கைவசமாகும். இப்படியான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அடிப்படையான கணிதம் மிகவும் அவசியம். அதிலும் வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு போன்றவற்றுக்குக் கணித அறிவு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
வழக்கமாக நமக்குத் தெரிந்திருக்கும் கணித அறிவைப் பயன்படுத்தி விரைவாகக் கணக்குகளைத் தீர்த்தால் மட்டுமே இத்தகைய தேர்வுகளை நாம் வெற்றிகொள்ள இயலும். ஏனெனில் பொதுவாகவே இந்தப் போட்டித் தேர்வுகளை, தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகள் என்பதைவிட நிராகரிப்பதற்கான தேர்வுகள் என்றே சொல்லலாம். ஏனெனில் ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவார்கள். அவர்களிலிருந்து ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அநேகரை நிராகரிக்க வேண்டும். ஆகவே நமது கணிதத் திறனை நாம் விரைவாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்தால் மட்டுமே நிராகரிப்பைத் தவிர்த்து வெற்றிபெற முடியும்.
நாம் அறிந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதப் பாடங்களை நாம் பழகிய வழியிலேயே போட்டால் பள்ளி, கல்லூரித் தேர்வுகளுக்கு அது உதவும். ஆனால் போட்டித் தேர்வுகளுக்கு அது மட்டும் போதாது. அவற்றை எளிய முறையில் விரைவாகப் போடும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு நமக்குத் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்.
எளிய முறையில் எப்படிக் கணக்குகளைப் போடலாம் என்பதைக் கற்றுக்கொண்டு அவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே போட்டித் தேர்வின்போது அவற்றை நாம் பயன்படுத்த முடியும். ஏனெனில் பள்ளி, கல்லூரிகளின் நாம் பயின்ற முறையானது நமது மூளையில் அழுத்தமாகப் படிந்திருக்கும் அந்த வழிமுறையே நமக்குச் சட்டென வரும். ஆகவே எளிய முறையில் கணிதம் போடுவதைக் கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவற்றைப் பயிற்சி செய்வதும்.
உதாரணமாக ஈரிலக்க எண்ணை 11 ஆல் எப்படிப் பெருக்குவது என்பதை நாம் பள்ளியில் படித்திருப்போம். அந்த வழியில் வகை எழுதி நம்மால் விடையைக் கொண்டுவர முடியும். ஆனால் அந்த மரபான முறை பள்ளியில் தேர்வுக்கு முக்கியம். ஏனெனில் பள்ளியில் விடையைப் போல் அதன் வழிமுறைக்கும் மதிப்பெண் உண்டு. ஆனால் போட்டித் தேர்வுகளில் விடை மட்டுமே போதுமானது.
ஆகவே விரைவான வழியே வெற்றிமேடைக்கு நம்மை அழைத்துச் செல்லும். இத்தகைய விரைவான வழிகளில் கணிதத்தைப் பயிற்றுவிக்க யூடிபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன. அவை எளிய ஆங்கிலத்தில் கணித வழிமுறையைச் சொல்லித் தரும். ஆனால் போர்டில் ஆசிரியர் எழுதிப் போடுவதுபோல திரையில் காட்சியும் வரும். அதைப் பார்க்கும்போதே உங்களால் வழிமுறையை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்த வீடியோக்களைப் பார்த்து நீங்களே பயிற்சி செய்துவந்தாலே எளிய முறையில் விரைவாக கணிதம் போடும் திறன் உங்களுக்கு வசப்படும்.
Techmath என்னும் யூடியூப் சேனலில் ஏராளமான வீடியோக்கள் கிடைக்கின்றன. சினிமா, வேடிக்கை, கேளிக்கை என எவ்வளவோ வீடியோக்களைப் பார்த்து மகிழ்வதுபோல் தேர்வுகளை வெல்ல இந்த வீடியோக்களைப் பார்த்து பயிற்சி செய்துகொள்ளுங்களேன். இணைப்பு: >https://www.youtube.com/user/tecmath
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago