ஒரு வாசகர் Trilogy என்ற வார்த்தையின் பொருளை விளக்கக் கோரியிருக்கிறார். Tri என்றால் மூன்று. Triangle = முக்கோணம். Trident = திரிசூலம்.
கதைப் போக்கில் தொடர்புள்ள மூன்று படைப்புகளை trilogy என்று கூறுவதுண்டு. எழுத்தாளர் ஜெயகாந்தன் அக்னிப் பிரவேசம் என்று ஒரு கதை எழுதினார். அதில் கங்கா என்ற பாத்திரம்தான் கதாநாயகி. அந்தப் பாத்திரத்துக்குப் பிறகு நேர்ந்த கதியை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடர்கதையில் விளக்கினார். அதற்குப் பிறகு கங்காவின் வாழ்க்கை என்னவானது என்பதை “கங்கை எங்கே போகிறாள்?’’ என்று எழுதினார். இந்த மூன்று கதைகளையும் trilogy எனலாம். அதேபோல் அப்பு என்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து சத்யஜித்ராய் மூன்று திரைப்படங்களை trilogy ஆகப் படைத்திருக்கிறார்.
(Trio என்றால் set of three. Trioxide, triode. ஆனால் ஏனோ trilogy என்பதில் tri என்ற எழுத்துகளுக்குப் பிறகு o இல்லை).
Trilogy குறித்துக் கேட்டிருந்த வாசகரே prequel குறித்தும் விளக்கக் கோரியிருக்கிறார்.
Sequel என்பது ஏற்கெனவே கூறப்பட்ட ஒரு படைப்பின் தொடர்ச்சி. Prequel என்பது ஏற்கெனவே கூறப்பட்ட கதைக்கு முன்னதாக நிகழ்ந்தவை. பாகுபலி இரண்டாம் பாகம் என்பது (இரண்டாவதாக வெளிவருவதால்) sequel போலத் தோன்றினாலும் அது prequelதான். ஏனென்றால் மகனின் வாழ்க்கையை முதல் பகுதியும், தந்தையின் வாழ்க்கையை இரண்டாவது பகுதியும் கையாள் கின்றன.
ஒரு நண்பர் வீட்டுக்குப் போனபோது அவர் வீட்டுக் கூடத்தின் ட்யூப்லைட் எரியவில்லை. “நேத்துதான் புதுசா வாங்கிப் போட்டேன். ஆனால் deficient ஆன tube light ஆப் போயிடுச்சு’’ என்றார்.
யாருமே பேசும்போது ஓரிரு வார்த்தைகளில் தவறுவதுண்டுதான். ஆனால் defective என்பதறகும் deficient என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது நல்லது.
Defective என்றால் கோளாறு உள்ள என்று அர்த்தம். Deficient என்றால் போதிய அளவு இல்லை என்ற அர்த்தம்.
The television set is defective. His English knowledge is deficient.
Our education system is defective. His daily intake is deficient.
Television என்ற வார்த்தைக்கான அடிப்படை கிரேக்க மொழியா அல்லது லத்தீன் மொழியா என்று கேட்டிருக்கிறார் ஒருவர். இரண்டும்தான்! கிரேக்க மொழியில் Tele என்றால் தொலைவில் என்று அர்த்தம். லத்தீன் மொழியில் visio என்றால் காட்சி என்று அர்த்தம்.
இந்த வகை வார்த்தைகளை hybrid words என்பார்கள். இதுபோன்ற வார்த்தையின் ஒரு பகுதி ஒரு மொழியிலிருந்தும், மறுபகுதி வேறொரு மொழியிலிருந்தும் உருவானதாக இருக்கும். அப்படிப்பட்ட சில hybrid வார்த்தைகளைப் பார்ப்போமே.
Aquaphobia என்றால் தண்ணீரைப் பார்த்து பயம் என்று அர்த்தம். தண்ணீர் என்பதைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை ‘aqua’. பயம் என்பதைக் குறிக்கும் phobia என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது.
Genocide என்றால் இனப்படுகொலை. கிரேக்க மொழியில் genos என்றால் ‘இனம் அல்லது மக்கள்’. லத்தீன் மொழியில் cidire என்றால் கொல்வது என்று பொருள்.
Hyperactive என்றால் அளவுக்கு அதிகமாகச் செயல்படும் தன்மை என்று அர்த்தம். கிரேக்க மொழியில் hyper என்றால் ‘அதிகப்படியாக’ என்றும் லத்தீன் மொழியில் activus என்றால் ‘செயல்படு’ என்றும் பொருள்.
Liposuction என்றால் கொழுப்பை (கருவி மூலம் உறிஞ்சி) நீக்குதல் என்று அர்த்தம். கிரேக்க மொழியில் Lipos என்றால் கொழுப்பு. லத்தீன் மொழியில் suction என்றால் ‘உறிஞ்சுதல்’.
ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் renumeration என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். Remuneration என்பதற்குப் பதிலாக இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். Remuneration என்றால் செய்த வேலைக்காக அளிக்கப்படும் ஊதியம்.
Renumeration என்பதை ஒரு வார்த்தையாகவே அகராதிகள் கண்டுகொள்வதில்லை. என்றாலும் மீண்டும் எண்ணிப் பார்ப்பது என்ற அர்த்தத்தில் (அதாவது counting again) அதைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள்.
Enumeration என்றும் ஒரு வார்த்தை உண்டு. பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிடுவதை இப்படிச் சொல்வார்கள்.
டைகோனாட் என்பவர் யார் என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். இதுகூட இந்தப் பகுதியில் குறிப்பிட்டிருக்கும் hybrid வார்த்தைகளோடு தொடர்பு கொண்டதுதான். Astronaut (ஆஸ்ட்ரொனட்) என்று அமெரிக்க விண்வெளி வீரரைக் குறிப்பிடுவார்கள். ரஷ்ய வீரரை Cosmonaut என்பார்கள். சீன விண்வெளி வீரரை Taikonaut (டைகோனாட்) என்பார்கள். சீன மொழியில் Taikong என்றால் விண்வெளி. கிரேக்க மொழியில் Nautes என்றால் கப்பலில் பணிபுரிபவர் அல்லது கப்பல் பயணி என்று அர்த்தம்.
முன்பு ஒரு பகுதியில் collective nouns பற்றிக் குறிப்பிட்டோம். அது தொடர்பாக இன்னொரு சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.
Couple என்பதற்கு singular verb-ஐப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது plural-ஐப் பயன்படுத்த வேண்டுமா?
Couple என்றால் ஜோடி என்று அர்த்தம். பயன்பாட்டைப் பொருத்து அது singular-ஆகவோ, plural-ஆகவோ கொள்ளப்படுகிறது. The couple is participating in the contest.
The couple are going separately to different destinations.
போதாக்குறைக்கு அமெரிக்க-பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இதை வேறு மாதிரி அணுகுவதும் குழப்பத்தை அதிகரிக்கிறது. அமெரிக்கர்கள் ‘‘The faculty is meeting today’’ என்று சொல்வார்கள். ஆனால் பிரிட்டனில் பெரும்பாலும் ‘‘The faculty are meeting today’’ என்றுதான் சொல்வார்கள்.
இந்த இடத்தில் faculty என்பது என்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.
இவற்றில் எது சரியானது என்று சொல்லுங்கள்.
(1) அந்தக் கல்லூரியில் Marine Engineering என்கிற faculty கிடையாது.
(2) இவர்தான் எங்களுக்கு Civil Engineering நடத்துகிற faculty.
The faculty of Computer Engineering, The faculty of Arts என்றெல்லாம் குறிக்கும்போது ஒரு துறையையோ, துறைகளின் இணைப்பையோ குறிக்கிறோம். அந்தப் பாடத்தை நடத்துபவரை faculty என்று சொல்லக் கூடாது. Member of Computer Engineering faculty என்பது போலக் குறிப்பிடலாம்.
மீண்டும் collective noun-க்கு வருவோம். ஒர் அமைப்பின் பெயர் collective noun-ஆகப் பயன்படுத்தப்பட்டால் (The Legislative Assembly, The United States என்பதுபோல) அதற்கு singular verb-ஐத்தான் பயன்படுத்துகிறோம். ‘‘The Legislative Assembly is meeting today’’ என்பது சரி. அதன் உறுப்பினர்கள் சந்திக்கிறார்கள் எனும்படிதான் இருக்கவேண்டுமென்றால் The Legislative Assembly are meeting today என்பதைவிட “The Members of Legislative Assembly are meeting today’’ என்று கூறிவிடலாமே.
My furniture is very old என்றுதான் சொல்ல வேண்டும் - பலவித furniture item-களை நீங்கள் குறிப்பிட்டால்கூட. அப்படிச் சொல்ல ஏனோ மனம் ஒப்பவில்லையென்றால் “My pieces of furniture are very old’’ என்று குறிப்பிடலாமே.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
54 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago