யூத் டியூப்: நாங்க சென்னை பேச்சுலர்ஸ்!

By கனி

“அட்ரஸ் இல்லாத லெட்டர்ஸ் நாங்க

அள்ளிக் கொடுத்தது மெட்ராஸ் தாங்க

டேலன்ட் இருந்தும் லூசர்ஸ் நாங்க

டேமேஜ் பண்ணுறது இங்கிலீஷ் தாங்க

வயித்துக்காக வாரம் முழுக்க நாயா உழைப்போம்

சொர்க்கம் பார்க்க வீக்எண்ட்ல பேயா பறப்போம்”

என விரிகிறது ‘சென்னை பேச்சுலர்ஸ்’ ஆல்பம். சென்னையில் பேச்சுலர் லைஃபை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை ஜாலியாகப் பதிவுசெய்கிறது இந்த ஆல்பம். ‘ஆகோ ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆல்பத்துக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

சொந்த ஊரைவிட்டு, எதிர்காலத்தைத் தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதை இந்த ஆல்பம் அழகாக விவரிக்கிறது. இந்த ஆல்பத்தை எழுதி இயக்கியவர் புஷ்பநாதன் ஆறுமுகம். சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கும் புஷ்பநாதனுக்கு சொந்த ஊர் திருச்சி. “சென்னையின் பேச்சுலர் வாழ்க்கையை ஒரு ‘மியூசிக் வீடியோ’வாக எடுக்கலாம் என்ற ஐடியா என் நண்பர்களுக்குப் பிடித்திருந்தது. இந்த ஆல்பத்துக்கான பாடல் வரிகளில் ஆரம்பித்து, காட்சிகள் வரை எல்லோமே எங்களுடைய சொந்த அனுபவம்தான். நண்பர்களுடனான உரையாடலில் இருந்ததுதான் இந்த ஆல்பம் உருவானது” என்று சொல்கிறார் புஷ்பநாதன்.

டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தில் சின்னாவும், திவாகரும் பாடியிருக்கின்றனர். வினோத் குமரனின் படத்தொகுப்பும், ஜெபா ரஞ்சித், கார்த்திக் ஆகியோரின் ஒளிப்பதிவும், அசாரின் நடன அமைப்பும் ஆல்பத்துக்கு கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. மதன், செந்தில், கதிர், புஷ்பநாதன், லல்லு, சின்னா, திவ்யா, வெற்றி உள்ளிட்டோர் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கின்றனர்.

“ ஆகோ ஸ்டுடியோஸ் சார்பாக ஏற்கெனவே நாங்கள் ‘முதிர் கன்னி’, ‘கனவுகள் விற்பவன்’ போன்ற குறும்படங்களை எடுத்திருக்கிறோம். இந்தக் குறும்படங்களுக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இதுதான் எங்களுடைய முதல் மியூசிக் வீடியோ. இந்த வீடியோவுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது” என்கிறார் புஷ்பநாதன்.

சென்னையின் அன்றாட வாழ்க்கையில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான ஆங்கிலம், வேலைவாய்ப்பின்மை, காதல், நட்பு, பசி, பொழுதுபோக்கு, நம்பிக்கை என எல்லாவற்றையும் இந்த வீடியோ தொட்டுச்செல்கிறது. அதனால், யூடியூபில் வெளியாகிய சில தினங்களிலேயே இந்த ஆல்பம் பத்தாயிரம் ஹிட்களை அள்ளியிருக்கிறது.

யூடியூபில் வீடியோவைப் பார்ப்பதற்கு:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்