ஒரு நண்பர்“Swansong என்றால் என்ன? அன்னப் பறவை பாடுமா?’’ என்று வியப்பு கடலாய்ப் பெருக கேள்விக்குறிகளை அடுக்கியிருக்கிறார். பின் என்ன, அன்னம் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் என்பதே இலக்கியக் கற்பனை என்றிருக்க, அது பாடும் என்றும், அதற்குச் சிறப்பு சேர்க்கும்வகையில் Swansong என்றே அழைப்பார்கள் என்றும் நினைத்தால் ஆச்சரியம் தோன்றாதா என்ன?
ஆனால், Swansong என்பதன் அர்த்தம் வேறு. ஒருவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைத்தான் Swansong என்பார்கள். அதற்காக “என் கொள்ளுத் தாத்தா ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் கடைத்தெருவுக்குப் கிளம்பும்போது போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனார். அப்படியானால் அதுதான் அவர் Swansong-ஆ?’’ என்று அபசகுனமாகக் கேட்கக் கூடாது. ‘கடைசியாக’ என்றால் இறப்பதற்கு முன்னால் என்று அர்த்தம். இந்த இடத்தில் சில வி.ஐ.பி.க்கள் உதிர்த்த (அல்லது உதிர்த்ததாகக் கூறப்படும்) Swansongs-ஐப் பார்ப்போமோ?
பிரபல கணிப்பாளர் நாஸ்ட்ரடமஸ் “Tomorrow I will not be there after sunrise’’ (அவர் வார்த்தையைக் காப்பாற்றி விட்டார்!).
ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் படைத்த சர் ஆர்தர் கானன் டாயில் தனது 71-வது வயதில், இறப்பதற்குமுன் தன் மனைவியைப் பார்த்து ‘You are wonderful’ என்றார் (ஷெர்லக் ஹோம்ஸ் ஏனோ பிரம்மச்சாரிதான்).
பிரபல எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் “Nothing but death’’ (உங்களுக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாக அவர் கூறியதாம்).
பிரபல இசைக் கலைஞர் பீத்தோவன் “I shall hear in heaven” என்றார். (கேட்கும் திறன் இழந்தவர் அவர்).
“I want to be left in peace” என்றார் மேரி க்யூரி. “My God, what has happened?’’ என்று கேட்டார் இளவரசி டயானா.
19-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு நாடோடிக் கதை. அதில் இறந்தபடியே ஒரு அன்னப்பறவை பாடும் பாடலை Schwanengesang என்று குறிப்பிட, அது swansong ஆனதாம்.
(சில சமயம் இறப்பதற்கு முன் கடைசியாகச் செய்த செயலையும் swansong என்று குறிப்பிடுகிறார்கள்).
FOR, SINCE
“For, Since ஆகிய வார்த்தைகளை எப்போது பயன்படுத்த வேண்டும்? I am sick for four days. I am sick since four days. இந்த இரண்டில் எது சரி? அல்லது இரண்டுமே சரியா?”
கேள்வி கேட்ட வாசகருக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்தக் குழப்பம் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
காலத்தைக் குறிப்பதற்கு for, since ஆகிய இரண்டு வார்த்தைகளையுமே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் for என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை உணர்த்துவது. For two weeks, for 10 minutes, for 10 years. அதாவது எப்போதிலிருந்து தொடங்கி எப்போது முடிகிறது என்பதை for உணர்த்துகிறது.
Since என்ற வார்த்தை தொடுவது ஒரு குறிப்பிட்ட, தெளிவான குறிப்பான காலப்பகுதியை. (Since Monday, since first October, since 10 O’clock). தவிர அந்தக் குறிப்பிட்ட காலப் புள்ளியில் தொடங்கி இன்று வரை அது தொடர்கிறதும்கூட.
கீழே உள்ள வாக்கியங்களைப் படிக்கும்போது since என்பது இன்னமும் தொடர்வதைக் குறிப்பதைக் கவனிக்கலாம்.
I have been learning French since Januay 2014 (அப்போதிலிருந்து தொடங்கி இன்னமும் அதைக் கற்றுக்கொண்டுவருகிறேன்).
He played basketball for 20 years.
I have not seen you since last January.
We talked for 13 minutes.
For, since ஆகிய வார்த்தைகளுக்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. அவை காலத்தோடு தொடர்பில்லாதவை. கீழே உள்ள எடுத்துக்காட்டுகளைப் படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.
Is this the train for Bombay?
Since he did not study, he did not pass the examination.
This is for her.
Since you request, I will accept it.
Cloud
computing என்பதற்கும், மேகத்துக்கும் என்ன தொடர்பு என்பது ஒருவரின் வினா. எளிமையாக இப்படிச் சொல்லலாம். நம்முடைய கணினியில் நம் தகவல்களைச் சேமித்துக்கொள்வது வழக்கம். அப்படி இல்லாமல் இணையத்தில் எங்கோ இருக்கும் வழங்கிகளில் (servers) நம் தகவல்களைச் சேமிப்பதுதான் Cloud computing. பலவித வரைபடங்களில் இன்டர்நெட்டைக் குறிக்க மேகம் போன்ற வடிவத்தைப் பயன்படுத்துவதுண்டு. அதனால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
Cloud என்றால் மேகம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒருவித சந்தேகம், சிக்கல் அல்லது சோகத்தைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
A cloud on the horizon என்றால் வருங்காலத்தில் ஏதோ சிக்கல் உண்டாகக்கூடிய ஒரு விஷயம் என்று அர்த்தம். The only cloud on the horizon is the mathematics examination in January (மற்றபடி கவலையே இல்லை. இந்த கணிதத் தேர்வுதான் சங்கடம்.).
BENCH
நமக்கெல்லாம் Bench என்ற வார்த்தை தெரிந்த ஒன்றுதான். பொதுவாக மேஜையைவிட உயரம் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் உள்ள ஒன்று. பெரும்பாலான பள்ளிகளில் சிறுவர்கள் bench-ல் அமருவார்கள்.
ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்ப உலகில் ‘’நான் bench-ல் இருக்கேன்’’ என்றால் (I am on the bench) அதற்கு வித்தியாசமான ஒரு அர்த்தம் உண்டு. அதாவது ‘கைவசம்’ எந்த புராஜெக்டும் இல்லை. அலுவலகத்தில் சும்மாதான் இருக்கிறேன்’’ என்று அர்த்தம். ஆனால் இது ஜாலியான கால கட்டம் அல்ல. திக்திக் உணர்வை ஊட்டக் கூடியது. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ‘Bench’ல் இருக்கும்படி நேர்ந்தால் அவரை வேலையை விட்டு நீக்கிவிடும் வாய்ப்பு உண்டு.
Benchmark என்பது வேறு. அது ஓர் அளவுகோல். ‘வெறும் 60 மார்க் வாங்கிவிட்டு வந்திருக்காயே. பக்கத்து வீட்டு கார்த்திக் இதே சப்ஜெக்டிலே 75 மார்க் வாங்கியிருக்கானே’ என்று ஒரு தாய் கடிந்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் கார்த்திக்கின் மதிப்பெண்கள் Benchmark ஆகச் சொல்லப்படுகின்றன. அதாவது அந்த அளவுக்குத் தன் மகனும் மதிப்பெண் பெற வேண்டும் என்று எண்ணுகிறார் தாய். ஆக ஒப்பிடுவதற்கான ஓர் அளவுகோல் benchmark. ஒரு நிறுவனத்தின் விற்பனையை benchmark ஆகக் கொண்டு போட்டி நிறுவனங்கள் அந்த விற்பனையை அடைய முயற்சிப்பது இயல்பு.
வங்கி என்பதை Bank என்கிறோம். அந்த Bank என்ற வார்த்தைகூட bench என்பதிலிருந்து வந்ததுதான் தெரியுமா? இத்தாலிய மொழியில் Banca என்றால் மேஜை அல்லது Bench என்று அர்த்தம். அந்தக் காலத்தில் யூத இனத்தைச் சேர்ந்த வணிகர்கள் பெஞ்சுகளின்மீது பச்சை வண்ணத் துணியைப் பரப்பி அதன் மீதுதான் வங்கி தொடர்பான விஷயங்களில் இறங்குவார்கள். இந்தப் பரிவர்த்தனைகளை “Banca பரிவர்த்தனைகள்’’ என்று வணிகர்கள் குறிப்பிடத் தொடங்க, Banca என்பது நாளடைவில் Bank என்று ஆகிவிட்டது.
தமிழ்த் திரைப்படப் பாடல்களின் மொழியாக்கங்களைக் கொடுத்து ரொம்ப நாளாச்சே என்று ஆதங்கப்பட்டிருக்கும் வாசகர்களுக்காக இதோ சில தமிழ்த் திரைப்படப் பாடல்களின் முதல் வரிகள் ஆங்கிலத்தில். கண்டுபிடியுங்கள். (Cloud பற்றி இந்தப் பகுதியில் குறிப்பிட்டதால் இந்தப் பாடல் வரிகளிலும் cloud இடம் பெறுகிறது). விடைகள் அடுத்த இதழில்.
1. The cloud in the sky will shower flowers.
2. This is the time when the musical cloud drops honey.
3. The cloud searches for the milky moon.
4. Let the cloud thunder. Still there shall be dance.
5. The cloud darkens. The lightning laughs.
6. Has a white cloud turned into a woman?
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago