உச்சரிப்பு என்பதில் அடங்கி யுள்ள part of speech எது? இது மட்டும்தான் ஒரு வாசகரின் கேள்வி. அவர் குறிப்பிடும் part of speech என்பது noun என்பதை யூகிக்கும்போதே வேறொரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.
Pronunciation என்பதுதான் அந்த வார்த்தைக்கான சரியான எழுத்துகள். எனவே இதில் noun என்ற வார்த்தை இல்லை. பெண் துறவிதான் இருக்கிறார்.
மாறாக உச்சரி என்பதற்கான ஆங்கில verb வார்த்தையில் noun உண்டு! அதாவது pronounce.
“Jet என்றவுடன் ஜெட் விமான சர்வீஸ் நினைவுக்கு வந்தது. வேகமாகச் செல்வதை ஜெட் விமானம் என்றும் கூறுகிறோம். ஆனால், Jet black, Jet hair என்றெல்லாம் கூறுகிறார்களே, அதற்கு அர்த்தம் என்ன? வேகமான தலைமுடி என்றா அர்த்தம்?” இது மற்றொரு வாசகரின் கேள்வி.
அர்த்தம் அது அல்ல. படு கறுப்பான என்ற அர்த்தத்தில் Jet black என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
வாசகர் Jet என்ற வார்த்தையைக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து வேறு சில விமான சர்வீஸ்களின் பெயர்க் காரணத்தை அறிவது கூட மொழி மற்றும் பொது அறிவு தொடர்பான சுவாரசியங்களை அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போமா?
Nippon Airways என்பதில் உள்ள நிப்பான் என்பது ஜப்பானைக் குறிக்கிறது. King Fisher என்பது மீன் கொத்திப் பறவையைக் குறிக்கிறது.
QANTAS என்பது Queen’s land and Northern Territory Aerial Service என்பதன் சுருக்கம் (இப்படி சுருக்கத்தில்தான் ‘Q’வுக்குப் பிறகு ‘U’ வராமல் இருக்கும்). இது ஆஸ்திரேலிய ஏர்லைன்ஸ் ஒன்றின் பெயர்.
PINNACLE AIRLINES என்பது அமெரிக்காவில் இயங்கும் ஒரு விமான நிறுவனம். உச்சம் அல்லது சிகரம் என்ற அர்த்தத்தைக் குறிக்க Pinnacle என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது மிக வெற்றிகரமான கட்டம் எனலாம். They have reached the pinnacle of their career.
Cathay Pacific என்று ஒரு விமான சர்வீஸ் உண்டு. அது ஹாங்காங்கில் உள்ளது. சீனாவை ‘கடாய்’ (Catai) என்றும் குறிப்பிடுவதுண்டு. இதுதான் மருவி Cathay ஆகிவிட்டது. (ஹாங்காங் சீனாவில் உள்ளது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே).
Cebu Airlines என்ற ஒன்று பிலிப்பைன்ஸை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பிலிப்பைன்ஸின் ‘இரண்டாவது நகரம்’ என்று Cebu-ஐக் குறிப்பிடுவதுண்டு (அந்த நாட்டின் தலைநகரம் மணிலா).
ஜக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் விமான சர்வீஸ் ETIHAD. இது ஒரு அரபு வார்த்தை. கூட்டணி, ஒன்றுபட்ட உணர்வு என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வார்த்தை இது.
COPA Airlines- ம் இயங்குகிறது. ஸ்பானிய மொழியில் COPA என்றால் மணிமுடி என்ற அர்த்தம்.
ரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டது Alitalia Airlines. இத்தாலியின் தலைநகர் ரோம் எனும் பின்புலத்தில் பார்க்கும்போது Italy என்பதின் சற்றே மாறுபட்ட வடிவம்தான் Alitalia என்பது விளங்கியிருக்குமே.
Jet Black குறித்து அறிந்து கொண்ட நாம் வண்ணங்களை வர்ணிக்கும் வேறு சில வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே.
Bright colour என்றால் உங்களுக்குத் தெரியும். பளிச்சென்ற வண்ணம். இதையே bold என்று (தைரியமான என்ற அர்த்தத்தில் அல்ல. இது வண்ணம் தொடர்பானது) குறிப்பிட்டால் அந்த வண்ண உடையை தொலைதூரத்திலிருந்தே எளிதில் கண்டறியலாம் என்று அர்த்தம்.
Cool colour என்றால் அது பெரும்பாலும் வெள்ளை அல்லது மிதமான நீல நிறத்தைக் குறிக்கிறது. (பனிக்கட்டி, கடல் போன்றவற்றை இந்த வணணங்களுடன் தொடர்பு படுத்துகிறோம்). Chintzy என்றால் அதுவும் பளிச்சென்ற வண்ணம்தான். ஆனால் தரமான ரசனை உள்ளவர்களால் விரும்பக் கூடிய வண்ணம் அல்ல என்று அர்த்தம். Loud coloured உடைகளை அணிபவர்கள் கூட உயர்தர ரசனை கொண்டவர்கள் அல்ல என்று கருதப்படுகிறார்கள்.
Dusty என்று குறிப்பிட்டால் அது அவ்வளவு பளிச்சென்று இல்லாத நிறம் அதாவது கொஞ்சம் grey (சாம்பல்) வண்ணமும் அதில் கலந்திருக்க வாய்ப்பு உண்டு.
Fast colour என்றால் அந்தத் துணிகளைத் துவைத்தாலும் அவற்றின் வண்ணம் மங்கி விடாது என்ற அர்த்தம். Flamboyant coloured உடைகள் பளிச் வகையைச் சேர்ந்தவை. இளமைக்குத் தொடர்புள்ளவை. அலங்காரமானவை. Opelescent என்றால் அந்த வகை உடைகள் தொடர்ந்து தங்கள் நிறத்தில் ஓரளவு மாறுதலைக் கொண்டிருக்கும் (கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துப் போகும்!). பால் நிறம் கொண்ட என்றும் கூறுகிறார்கள். Pastel என்றால் கண்களை உறுத்தாத என்ற அர்த்தம்.
காஞ்சீபுரம் முத்துச் செட்டியார் என்பவர் பாடகி M.S.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகர். பட்டுப்புடவை வணிகர். இவர் தான் உருவாக்கிய ஒருவகை தனித்தன்மை கொண்ட நீலநிறப் புடவையை MS Blue என்றே அழைத்தாராம்.
“Stayed என்ற வார்த்தை எந்தச் செய்தியின் தலைப்பாக வந்தாலும் எனக்குக் குழப்பம் வருகிறது. கொஞ்சம் விளக்குங்கள்’’. ஒரு நண்பரின் வேண்டுகோள் இது.
சில சமயம் தமிழ் அர்த்தம் ஆழமாகப் பதிந்து விடுவதால் ஏற்படக் கூடிய குழப்பம் இது.
Stay என்றால் தங்குதல் என்ற அர்த்தத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்திருப்போம். I stayed at his house for four days. Please allow me to stay with you.
ஆனால் சட்டத்தின் கோணத்தில் stay என்ற வார்த்தை வேறொரு குறிப்பிட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு செயல் நடைபெறுவதை சட்டபூர்வமாக தற்காலிகமாக தடுப்பதை stay என்கிறார்கள். The Judge stayed prisoner’s execution என்றால் அந்தக் கைதியின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பைத் தற்காலிகமாக சட்டப்படி நிறுத்தி வைத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
URGE - PURGE - SURGE
Urge என்பது Urgent என்பதை அடிப்படையாகக் கொண்டதுபோல் தோன்றினாலும் அது சற்றே மாறுபட்ட அர்த்தம் கொண்டது. “நீ இதை செய்தே ஆகவேண்டும்’’ என்பது போல் அழுத்தமாக ஆலோசனைகளை அளிப்பது. She urged him to come and stay with her.
Surge என்பதை ஒரு வேகத்துடன் முன்னேறும் இயக்கம் எனலாம். அலைகள் Surge ஆகலாம். ஒரு பெரும் கூட்டம் Surge ஆகி உங்களை முன்னுக்குத் தள்ளிவிடலாம். Surge in sales என்றால் விற்பனையில் ஒரு திடீர் முன்னேற்றம் என்று அர்த்தம்.
Purge என்றால் ஒரு கசப்புணர்வில் இருந்து விடுபடுவது. Please help me to purge of my terrible guilt. முழுமையாக வெளியேற்றுதல் என்றும் இதற்கு அர்த்தம் உண்டு. Use these medicines to purge the impurities from your body. His jealousy was purged.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago