வாசகர் ஒருவரின் ஆலோசனைப்படி இந்த முறை சில தமிழ்ப் பழமொழிகளைக் கொடுத்திருக்கிறேன். அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்.
1. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.
2. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
3. கெடுவான் கேடு நினைப்பான்.
4. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
5. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
6. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
7. பதறாத காரியம் சிதறாது.
8. பழகப் பழக பாலும் புளிக்கும்.
9. வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
10. விதை விதைத்தவன் விதை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
“abstemious, facetious ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் என்ன?’’ இப்படி ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். கூடவே “இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மட்டும் உள்ள தனித்தன்மை ஏதாவது உண்டா?’’ என்றும் ஒரு துணைக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
முன்பு எதிலோ படித்திருக்கிறேன் நண்பரே. ஐந்து vowels-ம் (A,E,I,O,U) அடங்கிய சில வார்த்தைகள் உள்ளன. EDUCATION அவற்றில் ஒன்று. இந்த வரிசையில் நண்பர் குறிப்பிட்ட இரண்டு வார்த்தைகள் மேலும் சிறப்பானவை. ஐந்து vowels-ம் அதே வரிசையில் (அதாவது A,E,I,O,U என்ற வரிசையில்) அமைந்த வார்த்தைகள் இவை.
ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் abstemious என்ற வார்த்தைக்கு உண்டு. ‘குறைவான’ என்பதும் ஒரு அர்த்தம். தவிர அது abstinence என்ற வார்த்தையை உள்ளடக்கியது. abstinence என்றால் ஒருவருக்கு இன்பத்தை அளிக்கக்கூடிய விஷயத்திலிருந்து அவர் விலகி இருப்பது.
இப்போது facetious என்ற வார்த்தைக்கு வருவோம். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைக் கூட அர்த்தமற்ற நகைச்சுவையுடன் அணுகுவதையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.
Sorry if that sounds facetious, but it is a valid point. On befitting occasions he could be cheerful and even facetious among his inmates.
தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகள் இதோ. (அதே பொருள் கொண்ட வேறு பழமொழிகளும் இருக்க வாய்ப்பு உண்டு.)
1. Practice makes perfect.
2. Fools rush in where angels fear
3. Frost and fraud have foul ends
4. Do not look a gifted horse in the mouth.
5. Blood is thicker than water
6. Health is wealth
7. Haste makes waste
8. Familiarity breeds contempt
9. When love is thin, faults are thick.
10. As you sow, so shall you reap.
COMPLICITY
ஒரு நாவலைக் குறிப்பிட்டு “இதில் ஒவ்வொரு வாக்கியமும் 4, 5 வரிகளுக்கு நீளுகின்றன. எதற்காக இப்படிக் கரடுமுரடாக எழுதுகிறார்கள். எளிமை அழகுதானே’’ என்றார் ஒரு நண்பர். இதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இதில் Complex என்ற வார்த்தைக்குப் பதிலாக Complicity என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
Complex என்பதன் நீட்சியல்ல Complicity. சொல்லப்போனால் Complicity என்பது ஒருவிதத்தில் சட்ட மீறல். Complicity என்பது தவறான ஒரு செயலில் பங்கு வகிப்பது அல்லது ஒரு தவறான விஷயத்துக்குத் துணை போவது. I have proof of his complicity in the murder என்பதுபோல.
I cannot find any proof of her complicity in the theft. He acted with the servant’s complicity.
INGENIOUS - INGENUOUS - INDIGENOUS
தலைப்பில் உள்ள மூன்றாவது வார்த்தை Kalam was the brainchild behind the launch of the country’s indigenous missile development programme. இந்த வாக்கியத்தில் இடம் பெறுகிறது.
Indigenous (இன்டிஜினஸ்) என்றால் உள்ளூரிலேயே (அல்லது உள்நாட்டில்) உருவான என்று பொருள். Indigenous missile என்றால் வெளிநாட்டு உதவி இல்லாமல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஏவுகணை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. Native, aboriginal போன்ற வார்த்தைகளை இதற்கு இணையாகச் சொல்ல முடியும்.
இயல்பாகவே அமைந்த (innate, natural) என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. Reactions indigenous to human beings.
அடுத்ததாக ingenious (இன்ஜீனியஸ்) என்ற வார்த்தை. இதற்கு புத்திசாலித்தனமான அல்லது வளமான கற்பனைத் திறன் கொண்ட என்று அர்த்தம். Alexander defeated his enemies with his ingenious plans. இதற்கு இணையாக clever, brilliant, imaginative போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
Ingenuous (இன்ஜென்யுவஸ்) என்றால் வெளிப்படையான மற்றும் கொஞ்சம் அப்பாவித்தனமான என்று அர்த்தம். Frank என்பதை இதற்கு இணையாகக் கூறலாம். We generally prefer ingenuous persons. வேறொரு விதத்தில் கலைத்தன்மை இல்லாத என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது சிறிதும் சாமர்த்தியமில்லாத வெளிப்படைத்தனம்! Innocent, naive, unsophisticated போன்றவற்றையும் இந்த வார்த்தைக்கு இணையாகக் கூறலாம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago