சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகச் சிறந்த அம்சங்களாக சுட்டிக்காட்டப்படுபவை நகரமைப்பு, கட்டிடங்கள், சாலை, போக்குவரத்து ஆகியவையே. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்:
நகரமைப்பும் கட்டிடமும்
l ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தில் கிராமங்களும், நகரங்களும் இருந்திருக்கின்றன.
l மொகஞ்சதாரோவில் இருந்த மேல் நகரம் 18 மீட்டர் உயரமாக இருந்துள்ளது. இந்த நகரில் மட்டும் 3,000 வீடுகள் இருந்துள்ளன.
l அந்தக் காலத்திலேயே செங்கல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியது. மண்பாண்டம் மட்டுமில்லாமல், செங்கல் செய்யும் தொழில்நுட்பமும் இந்த நாகரிக மக்களுக்குத் தெரிந்திருந்தது.
l அங்கு கிடைத்த செங்கல்கள், அவற்றின் அகலத்தைப் போல இரண்டு மடங்கு நீளத்தைக் கொண்டிருந்தன.
l சில வீடுகள் மட்டும் செங்கல்லுக்கு பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன.
l அந்தக் காலத்திலேயே மாடி வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. கிணறு, சமையலறை, குளியலறை, மேல்தளத்தில் படுக்கையறை போன்ற அம்சங்களுடன் அவை இருந்திருக்கின்றன.
l சிந்து சமவெளி சத்திரங்களில் அறைகள் வரிசையாகவும், குளியலறைகளுடனும் இருந்துள்ளன.
l சுகாதாரமாக மூடப்பட்ட சாக்கடைகள் வழியே கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளது, இந்த நாகரிகத்தின் சிறப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
சாலையும் போக்குவரத்தும்
l இந்த நாகரிகத்தில் தெருக்கள் வடக்கு - தெற்காகவோ, கிழக்கு மேற்காகவோ இருந்துள்ளன.
l கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டு, சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.
l மாட்டு வண்டியின் இரண்டு சக்கரத் தடங்களுக்கு இடையிலான தொலைவு 1.6 மீட்டர் இருந்துள்ளது. இதிலிருந்து அங்கிருந்த மாட்டு வண்டிகள் எவ்வளவு பெரிதாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
l சிந்து சமவெளி மாட்டு வண்டிகள் சிலவற்றுக்கு 2 சக்கரங்களும், சிலவற்றுக்கு 4 சக்கரங்களும் இருந்துள்ளன.
l பாரத்தை ஏற்றிச் செல்வதற்கு செம்மறியாடுகள், ஆடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
l சிந்து சமவெளி தாமிரச் சிற்பம் ஒன்றில், ஒரு மனிதன் இரண்டு எருதுகள் இழுத்துச் செல்லும் தேரை ஓட்டுகிறான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago