ஆங்கிலம் அறிவோமே - 76: வரிசை எனும் வால்

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் Cemetry என்றால் என்ன அர்த்தம்? என்கிறார். அவருக்குப் பதில் சொல்வதற்கு முன், ‘தயவுசெய்து ‘e’-ஐ சேர்த்துக் கொள்ளவும்’ என்று கூற விரும்புகிறேன். அதாவது இந்த வார்த்தையின் சரியான எழுத்துகள் Cemetery. கல்லறை என்பதைக் குறிக்கும் வார்த்தை இது.

ஆனால், உச்சரிப்பில் இதே வார்த்தையைப் போல இருக்கும் மற்றொரு வார்த்தையான Symmetry என்பதில் அந்த அதிகப்படி ‘e’ இல்லை என்பதை கவனித்தீர்களா? Symmetry என்றால் ஓர் ஒழுங்கமைப்பு. சமச்சீர் என்றும் அர்த்தம் கூறலாம்.

இரண்டாக வெட்டினால் இருபாதிகளும் ஒரே மாதிரி இருக்கும் என்றால் அதுவும் symmetryதான்.

Try என்று முடியும் வேறு சில வார்த்தைகளின் அர்த்தங்களையும் புரிந்து கொள்ள ‘Try’ செய்வோமா?

Gentry என்ற வார்த்தைக்கு சமூகத்தில் சக்தி மிகுந்தவர்கள் என்று அர்த்தம். பொருளாதார நிலையிலும் உயர்வாக இருப்பவர்களைத்தான் இப்படிக் குறிப்பிடுவது வழக்கம். உயர்குடி!

Paltry என்றால் மிகச் சிறிய அற்பமான என்று பொருள். He was paid a paltry amount for his work.

நெடுந்தூர ரயில்களில் சென்றிருப்பவர்களுக்கு Pantry என்ற வார்த்தை பழகியதாகத்தான் இருக்கும். சமையல் அறைக்கு அருகில் உள்ள சிறிய அறையை Pantry என்று கூறுவார்கள். சமையலுக்குத் தேவையான பொருள்களை இங்கு வைப்பதுண்டு. உள்ளுக்குள் இணைக்கப்பட்ட ரயில் தொடரில் Pantry Car என்று நாம் அழைக்கப்படும் பெட்டியில்தான் உணவைத் தயாரிக்கிறார்கள்.

Gallantry என்றால் துணிச்சல் என்று அர்த்தம். பொதுவாக போரில் காட்டப் படும் வீரத்தை gallantry என்பதுண்டு. Palmistry என்றால் கைரேகை ஜோதிடம் என்பது உங்களுக்கே உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியிருக்கும்.. Psychiatry என்றால் உளவியல்.

Sentry என்றால் சிப்பாய். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் பிறர் நுழையாமல் காவல் காப்பவர்.

Time

and tide waits for no man என்று ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய சில நண்பர்கள் “Time and tide wait for no man” என்கிறார்கள். எது சரியான விடை? என்கிறார் ஒரு வாசகர்.

மாறுதலின்றி நடைபெறும் பொதுவான விஷயங்களை Present Tense- ல்தான் குறிப்பிடுவது வழக்கம். The sun rises in the east.

Present Tense- ல் third person singular (He, She, It) என்றால் verb உடன் ‘s’ அல்லது ‘es’ சேர்க்க வேண்டும். மற்றபடி (I, You, We, They) verb-உடன் ‘s’ சேர்க்க மாட்டோம். He comes. I come. You come. She comes. We come. It comes. They come.

நீங்கள் குறிப்பிடும் பழமொழிக்கு ‘காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை’ என்று அர்த்தம். இதை Time and tide wait for none என்பார்கள். ஏனென்றால் Time and tide என்பது பன்மை.

மற்றபடி நீங்கள் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். ‘My friend and guide speak’ என்றால் உங்கள் நண்பரும் உங்கள் வழிகாட்டியும் வெவ்வேறு நபர்கள். ‘My friend and guide speaks’ என்றால் ஒருவரேதான் பேசுகிறார். அதாவது உங்கள் நண்பரே உங்கள் வழிகாட்டியும்கூட.

Queue Cue

Q என்ற ஆங்கில எழுத்தை எப்படி உச்சரிப்போமோ அப்படித்தான் மேலே உள்ள இரண்டு வார்த்தைகளையும் உச்சரிக்க வேண்டும்.

Queue என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘வால்’. வரிசையில்கூட நாம் வால் பகுதியில்தானே நிற்க வேண்டும் (தலைப் பகுதியில் அடாவடித்தனமாக நுழைய வேண்டாமே).

Cue என்றால் பிறரது நடத்தையை நமக்கு உதாரணமாகக் கொள்வது. அதாவது take his cue என்பதுபோல். The other children took their cue from Muthu and ignored the new boy.

நாடகங்களில் cue என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. ஒரு நடிகர் பேசும் வசனத்தின் கடைசி வார்த்தையை cue ஆக எடுத்துக் கொண்டு அடுத்தவர் தன் வசனத்தைப் பேசுவது. அதாவது எதிராளியின் நீண்ட வசனத்தை மனதில் கொள்ள வேண்டிய தேவையில்லாமல் அந்த வசனத்தின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வார்த்தைகளை மட்டும் மனதில் கொண்டு நம் அடுத்த வசனத்தைப் பேசத் தொடங்குவது. Cue என்பதற்குச் சமமான வார்த்தைகளாக signal, indication, prompting போன்றவற்றைக் கூறலாம்.

பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போன்றவற்றை விளையாடப் பயன்படுத்தப்படும் நீண்ட தடியை cue stick என்பார்கள். இதைப் பயன்படுத்தி ஆடும் விளையாட்டுகளை cue sports என்பார்கள்.

சென்றமுறை Either குறித்த சில விளக்கங்கள் அளித்திருந்தேன். இது தொடர்பாக ஒரு நண்பர் எழுப்பியிருக்கும் சந்தேகம் இது.

Either he or I ______ mistaken.

கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டியது எது? is? am? are?

are கூடாது. ஏனென்றால் Either he or I என்றால் இருவரில் ஒருவர்தான்.

He, I ஆகிய இரண்டுக்கும் பொதுவான வார்த்தைதான் mistaken. என்றாலும் கோடிட்ட இடத்திற்கு சற்றே முன்பு இருப்பது I தான். எனவே Either he or I am mistaken என்றுதான் எழுத வேண்டும்.

இப்படி எழுதினால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது இல்லையா? எனவே கீழே உள்ளபடி எழுதலாமே.

He is mistaken or else I am.

You are mistaken or else he is.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்