ஆங்கிலம் அறிவோமே 4 - ஒருமை பன்மை குழப்பமா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

“என் சில்ரன்ஸை நான் ரொம்ப ஒழுக்கமா வளர்க்கிறேன்” என்றார் நண்பர் ஒருவர். “அடடா தப்பு பண்றீங்களே!” என்றேன். நண்பருக்கு அதிர்ச்சி. “குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பது தப்பா? தப்பா?” என்றார்.

ஒழுக்கமாக வளர்ப்பதில் தப்பே இல்லை. ஆனால் ‘சில்ரன்ஸ்’ என்ற சொல்தான் தப்பு. child என்ற சொல் ஒருமை. குழந்தையைக் குறிக் கிறது. குழந்தைகள் என்று பன்மையில் குறிப்பிட children என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். கூட ஒரு ‘S’ சேர்த்துக் கொண்டு சில்ரன்ஸ் என்று நீட்டி முழக்கக் கூடாது. அதேபோல் man என்பதன் பன்மை men. Woman என்றால் பெண். women (விமன்)என்றால் பெண்கள். Mens என்றோ womens என்றோ சொற்கள் கிடையாது.

இது பற்றிக் குறிப்பிட்டபோது எனக்குத் தெரிந்த ஒருவர் சிரித்தார். “அது எப்படித்தான் இப்படியெல்லாம் தப்புத் தப்பா சொல்றாங்களோ!” என்றார்.

“நீங்கள் எங்கே படிச்சீங்க?” என்றேன். ரொம்பப் பெருமையாக “நான் ஐ.ஐ.டி.யின் அலம்னி” என்றார். அவர் தவறைச் சுட்டிக்காட்டலாமா வேண்டாமா என்று நான் தயங்கியதைத் தவறாகப் புரிந்துகொண்டார். “அலம்னி என்றால் முன்னாள் மாணவன் என்று பொருள்” என்றார்.

Alumni என்றால் பன்மை. முன்னாள் மாணவர்கள் என்றுதான் அர்த்தம். அதன் ஒருமை alumnus என்பதுதான். இதைச் சுட்டிக்காட்டியதும் அவர் முகத்தில் அதிர்ச்சி. “தெரியும். அவசரமாகப் பேசியதில் தப்பாகி விட்டது” என்று சமாளித்தார்!

இந்த விஷயத்தில் ‘ஊடகங்கள்கள்' செய்யும் ஒரு தவறையும் குறிப்பிட வேண்டும். என்ன இது ஊடகங்கள் என்பதற்குப் பதிலாக ஊடகங்கள்கள் என்று நீட்டி முழக்கித் தப்பாக எழுதிவிட்டேனே என்கிறீர்களா? காரணமாகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். ஏன் என்று பார்ப்பதற்கு முன்பாக வேறு சில சொற்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

பல் என்றால் tooth. பற்கள் என்றால் teeth. ஓஹோ toothனா ஒரே ஒரு பல்தானா? அப்படியானால் toothpasteஐக் கொண்டு ஒரே ஒரு பல்லைத்தான் தேய்க்க வேண்டுமா என்று கேட்கக் கூடாது. ஒவ்வொரு பல்லையும் கவனமாகத் தேய்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம்.

அதேபோல் கால் என்றால் foot. கால்கள் என்றால் feet (பாதம், பாதங்கள் என்ற பொருளிலும் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன). ஆனால் ஆங்கிலத்தில் my foot என்பது எதிர்ப்பைக் காட்டும் சொற்கள்.

நீங்கள் உங்கள் நண்பரிடம் “நம்ம முத்துகிருஷ்ணன் ரொம்ப நாணயமானவர்” என்று சொல்கிறீர்கள். அவர் பதிலுக்கு “முத்துகிருஷ்ணன் நாணயமானவர்! my foot’’ என்றால் அவர் அந்த நபரைக் கொ ஞ்சம்கூட நாணய மில்லாதவர் என்று கருதுகிறார் என்று அர்த்தம்.

பல பத்திரிகைகளும் வார இதழ்களும் “மீடியாக்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. மீடியம் (medium) என்பது ஒருமை. மீடியா (media) என்பது பன்மை. எனவே மீடியாக்கள் என்பது தவறான சொல். ஏனென்றால் medias என்று ஒரு சொல் கிடையாதே!

இது போலவே தவறாகப் பயன் படுத்தப்படும் இன்னொரு சொல் ‘பாக்டீரியாக்கள்’. பாக்டீரியம் (bacterium) என்பது ஒரு கிருமியையும், பாக்டீரியா (bacteria) என்பது பல கிருமிகளையும் குறிக்கின்றன. அப்புறம் எப்படி ‘பாக்டீரியாக்கள்' வரும்?

ஜி.எஸ். சுப்ரமணியன்- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்