ஒரு வாசகர் ‘Campus, Premises’ ஆகிய வார்த்தைகளை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாமா? என்கிறார். இந்த சந்தேகம் பலருக்கும் வந்திருக்கக் கூடும்.
Campus, Premises ஆகிய இரண்டு வார்த்தைகளும் மொத்த வளாகத்தையும் குறிக்கின்றன. அதாவது கட்டிடம் (அல்லது கட்டிடங்கள்) மற்றும் அதைச் சுற்றியுள்ள மைதானம் எல்லாமும் அடங்கியது.
ஆனால், Campus என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தொடர்பாகவும், Premises என்பது அலுவலகம் அல்லது வியாபாரத்தலம் தொடர்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன. (Campus என்பதை பள்ளி, கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தினாலும், Premises என்ற வார்த்தையை இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி தொடர்பாகவும் பயன்படுத்துகிறார்கள். School premises, College premises).
I joined the college and was allotted a room on campus. The Company has moved to a new premises.
மேற்படி வாசகர் ஒரு உபரிக் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுவும் கூட முக்கியமானதுதான்.
On 23rd of August our Alumni Meeting will be held .......... the school campus. கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டிய வார்த்தை எது? In ஆ? On ஆ?
On the premises என்பது சரியான பயன்பாடு. இப்படிக் குறிப்பிடும்போது அந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் அல்லது அதைச் சுற்றியுள்ள திறந்தவெளி ஆகிய எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாகிறது.
I have lost my purse on the premises of the office என்றால் அந்த வளாகத்தில் எங்கோ தொலைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
மாறாக, அந்த அலுவலகக் கட்டிடத்துக்குள்தான் தொலைத்தீர்கள் என்றால் (அதாவது, கட்டிடத்துக்கு வெளியே உள்ள நிலப்பகுதியில் நிச்சயம் தொலைக்கவில்லை என்று கருதினால்) I have lost my purse in the office அல்லது in the building என்று குறிப்பிடலாம்.
No tobacco products are allowed on the premises. No tobacco products are allowed in the building.
எதனால் அதற்கு on? எதனால் இதற்கு மட்டும் in? என்று கேட்டுவிடாதீர்கள். அப்படிக் கேட்டால் என் (யூகமான) பதில் இதுதான்.
Premises என்பதில் நிலமும் அடக்கம் என்பதால் on பயன்படுத்தப்படுகிறது எனலாம். கட்டிடத்தை ஒரு பெரிய பெட்டிபோல உருவகப்படுத்திக் கொண்டால், in என்ற வார்த்தை சரியானது என்று படுகிறது.
No tobacco products are allowed in the building என்று அறிவித்தால், அதே வளாகத்தில் அந்தக் கட்டிடத்தின் வெளியில் உள்ள மைதானத்தில் சிகரெட் பிடிக்கலாமா? அது உடல் நலக் கோணத்தில் தவறு. ஆங்கிலக் கோணத்தில் சரி.
நீளமான வார்த்தை
“ஆங்கிலத்தின் மிக நீளமான வார்த்தை smiles என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் நடுவே ஒரு மைல் இருக்கிறது! ஆனால், என் மகன் Typewriter என்பதை மிக நீளமான வார்த்தை என்று எங்கோ படித்ததாக அடித்துச் சொல்கிறான். அது எப்படியிருக்க முடியும்?’’ என்கிறார் ஒரு நண்பர்.
உங்கள் மகனை வன்முறையைக் கைவிடச் சொல்லுங்கள் நண்பரே. மற்றபடி அவர் கூறிய பொருள் இதுவாக இருக்கும். கணினியில் (அல்லது தட்டச்சு இயந்திரத்தில்) ஒரே வரிசையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு மட்டுமே சில வார்த்தைகளை அமைக்க முடியும். Sad, were, you, pour போன்றவை சில எடுத்துக் காட்டுகள். இப்படி அமையக்கூடிய வார்த்தைகளில் மிக அதிகமான எழுத்துகள் கொண்ட வார்த்தை Typewriter என்று தோன்றுகிறது. மேல் வரிசையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு மட்டுமே அமைந்த வார்த்தை.
சவாலுக்கு சளைக்காத நண்பர்களே, இதே போல் கீழ் வரிசையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு மட்டுமே அமைந்த வார்த்தை ஒன்றைக் கண்டறிந்து கூற முடியுமா?
சரியா, தவறா?
“The Prime Minister of India’s speech’’ என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டிருந்தார்கள். ‘S குறியீடு India என்ற வார்த்தைக்குப் பிறகு வந்திருக்கிறதே. சரியா? என்ற சந்தேகத்தை ஒரு வாசகர் எழுப்பிவிட்டார். அதாவது இந்தியாவின் பேச்சு இல்லையே? பிரதமரின் பேச்சுதானே. எனவே Prime Minister-க்குப் பிறகுதானே ‘S வந்திருக்க வேண்டும்? இந்தக் கோணத்தில்தான் சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு Noun அல்லது ஒரு பதவி அல்லது பட்டம் பல வார்த்தைகள் கொண்டதாக இருந்தால் கடைசி வார்த்தைக்குப் பிறகுதான் ‘S போட வேண்டும்.
The President of India’s New Year wishes. The King of Nepal’s visit.
இப்படி எழுத உங்களுக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை என்றால் Speech of the Prime Minister of India, New Year wishes of the President of India, Visit of the King of Nepal என்று மாற்றியமைத்துக் கொள்ளலாமே.
EQUITY - EQUALITY
Equity Shares என்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்? சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் பங்குகளா? ஆனால், நடைமுறையில் அப்படித் தோன்றவில்லையே!இப்படி தன் குழப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு நண்பர். சமம் என்பதைக் குறிக்கும் சொல் Equality. Equity என்பது வேறு.
இங்கிலாந்தில் சில பகுதிகளில் எழுதப்பட்ட சட்டத்தைவிட தொன்று தொட்டு ஏற்கப்பட்ட மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இதை Law என்பதற்கும், Equity என்பதற்கும் உள்ள வேறுபாடாகக் கருதலாம். இந்தியாவில் கூட நீதிபதிகள் Equity-யையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
Equity என்பதை தர்மம், நியாயம் என்று கருதலாம். Fairness, Justice போன்றவற்றை இதற்கு சமமான ஆங்கில வார்த்தைகளாகக் குறிப்பிடலாம்.
“சட்டப்படி நீங்கள் நஷ்டஈடு கொடுக்க வேண்டாம்தான். ஆனால், Equity என்னும் கோணத்தில் அவர்பட்ட சிரமத்துக்கு உரிய பலனை நீங்கள் கொடுக்க வேண்டாமா?’’ என்பதுபோல் நீதிபதிகள் கேட்டதுண்டு.
ஒருவிதத்தில் Morality என்பதையும் Equity என்பதையும் இணைத்துப் பார்க்க முடியும். அம்மாவின் உயிர் காக்க மருந்து வாங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் வண்டி ஓட்டிச் சென்றால் அது சட்டப்படி குற்றம். Equity- படியாக அல்ல. கடை வைத்து நியாயமான லாபம் சம்பாதிக்கும் ஒருவரை அழிப்பதற்காக நீங்களும் அவர் கடைக்கு எதிரே ஒரு பெரிய கடை திறந்து நஷ்டமானாலும் பரவாயில்லை என்று இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறீர்கள். சட்டப்படி நீங்கள் தவறு செய்யவில்லை. ஆனால் Equity- படி?
Equity என்பதை வேறுவிதமாகவும் விளக்கலாம். நீங்கள் ஒரு வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். உங்கள் கையைவிட்டு 2 லட்ச ரூபாயும், வங்கிக் கடன் மூலமாக 8 லட்ச ரூபாயும் கொடுத்து வாங்குகிறீர்கள். அந்த வீட்டைப் பொறுத்தவரை உங்கள் Equity என்பது 2 லட்ச ரூபாய்தான். கடனை முழுமையாக அடைத்த பிறகு உங்கள் Equity 10 லட்ச ரூபாய் ஆகிறது.
இப்போது Equity Shareக்கு வருவோம். நீங்கள் பங்குகள் வாங்கிய நிறுவனம் லாபத்தில் கொழிக்கும்போது அந்த லாபத்தில் உங்களுக்குப் பங்கு கிடைக்கும். ஆனால், நஷ்டம் வரும்போது மட்டும் அதை ஏற்க மாட்டேன் என்று நீங்கள் சொல்லக் கூடாது இல்லையா? அந்த நஷ்டத்திலும் பங்கேற்க வேண்டும் (அதாவது உங்கள் பங்குகளின் மதிப்பு சரியும்). இதுதானே Equity? எனவேதான் இவை Equity Shares.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago