ஆங்கிலம் அறிவோமே: சுருங்கச் சொல்லுதல்

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

Abbreviation – Acronym

இது சுருங்கிப் போய்விட்ட உலகம். அதாவது சொற்கள் சுருங்கிப் போய்விட்ட உலகம். “போன வாரம் நம்ம ​எஸ்.கே. ஒரு 2BHK ஃப்ளாட் வாங்கினார். ஆர்.எல். பில்டர்ஸ் கட்டியதாம். இன்னிக்கு எப்படியும் நமக்கெல்லாம் எஸ்.கே.சி. கொடுக்கச் சொல்லணும்”. ஒரு குழப்பமும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே ​புரியும்.

பள்ளி ஆசிரியர்கள் “கட்டுரைகளில் abbreviation களைப் பயன்படுத்தக் கூடாது” என்பதுண்டு. ஆனால் இன்றைய இன்டர்நெட் மற்றும் குறுஞ்செய்தி உலகில் வார்த்தைச் சுருக்கங்களை அறியாதவர்களும், பயன்படுத்தாதவர்களும் அன்டார்ட்டிகாவில் அரைகுறை உடையோடும், சகாரா பாலை வனத்தில் கோட்​சூட்டோடும் நிற்பவர்களுக்குச் சமம்.

Abbreviation என்றால் ஆங்கிலத்தில் சுருக்கம் என்பது நமக்குத் தெரியும். இப்படிச் சுருக்கப்பட்ட சொற்களுக்குப் பின்னால் கட்டாயம் ஒரு புள்ளியை வைத்தாக வேண்டும். (திருமண அழைப்பிதழில் செளபாக்யவதி என்பதை ஆங்கிலத்தில் Sow. என்றும், சிரஞ்சீவி என்பதை ஆங்கிலத்தில் Chi. என்றும் சுருக்கிக் குறிப்பிடுவார்கள். இவற்றிற்குப் புள்ளி வைக்காவிட்டால், மணமகளை நன்கு வளர்ந்த பெண் பன்றி என்று குறிப்பிட்டதுபோல் ஆகிவிடும். ஏனென்றால் sow என்ற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம். அதேபோல chi என்றால் சீ என்று மணமகனை அலட்சியப் படுத்துவதுபோல் ஆகிவிடும். இது ஓர் உதாரணம்தான். எனவே புள்ளி அவசியம்).

ஆனால் சிலர் abbreviation என்பதையும் acronym என்பதை யும் குழப்பிக் கொள்கிறார்கள்.

Examination என்பதை exam. என்றோ et cetera என்பதை etc. என்றோ சுருக்கிக் குறிப்பிடும்போது அவை abbreviations. (et cetera என்பது ஒரு லத்தீன் வார்​த்தை. அதற்குப் பொருள் ‘மற்றும் பிற’ என்பதாகும்).

ஆனால் World Health Organisation என்பதைச் சுருக்கி WHO என்கிறோம் (இந்த எழுத்துகளுக்கு நடுவே புள்ளி வைப்பதில்லை). அதேபோல Acquired Immuno Deficiency Syndrome என்பதை AIDS என்கிறோம். இவையெல்லாம் abbreviations அல்ல acronyms. அதாவது சொற்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்து ஒரு சொல்போலக் குறிப்பிட்டால் அது acronym.

Abbreviationsஐப் பொறுத்தவரை எழுதும்போது அவற்றைச் சுருக்கினாலும் அவற்றைப் படிக்கும்போது முழுமையாகத்தான் படிப்போம். அதாவது Mister என்று எழுதினாலும் Mr. என்று எழுதினாலும் படிக்கும்போது மிஸ்டர் என்றுதான் படிக்க வேண்டும். ஆனால் acronyms -களைப் பொறுத்தவரை அவை புதிய சொற்களைப் போல.

Profile

வேலை தேடும்போது உங்கள் profileஐ அனுப்புங்கள் என்று யாராவது சொன்னால் உங்களைப் பற்றிய – வேலைவாய்ப்புக்குத் தொடர்புள்ள விவரங்கள் என்று பொருள். ​Profile என்பதைச் சிறு வாழ்க்கைக் குறிப்பு என்றும் குறிப்பிடலாம்.

ஆனால் புகைப்படம் எடுப்பவர்கள் யாராவது “உங்களை profileலில் ஒரு photo எடுக்கணும்” என்று சொன்னால், உங்க பயோ-டேடாவை நீட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டக் கூடாது. அதே சமயம் அர்த்தம் புரியாமல் கேமெராவுக்கு நேரே முகத்தைக் காட்டிக்கொண்டு அதிகமாகச் சிரிக்கவும் கூடாது. பக்கவாட்டிலே எடுக்கப்படும் புகைப்படம்தான் profile.

Keep a low profile என்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்ய வேண்டாம், கட்டுப்பாடு தேவை என்று பொருள். நாகரிகமின்றிச் சொன்னால் வாயைப் பொத்திக்கொண்டு கையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமென்று அர்த்தம்.

Her high profile – என்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஏதோ ஆற்றலோ தன்மையோ அந்தப் பெண்ணிடம் இருக்கிறது என்று பொருள்.

(தொடர்புக்கு: aruncharanya@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்