துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசியாக இருக்க எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக நடந்துமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடச் சற்று நிதானமாகவே அனைத்தும் நடக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.
பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து மோதல்கள் அகலும். பெண்களுக்கு, மனக்குழப்பம் நீங்கும். கலைத் துறையினருக்கு, வீணான குழப்பங்கள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. உடல் நிலையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: லட்சுமியை வெள்ளிக்கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். பயணத்தால் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பேச்சில் இனிமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்குப் புதிய வர்த்தக ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சால் மேலதிகாரிகளைக் கவர்ந்து விடுவார்கள்.
குடும்பத்தில் இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும். உறவினர்களின் உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு, புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, உங்கள் பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு, மற்றவர்கள் பேச்சைக் கேட்கும்போது, தீர ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனைச் செவ்வாய்க் கிழமையன்று எலுமிச்சைத் தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். பயணத்தால் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பேச்சில் இனிமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்குப் புதிய வர்த்தக ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சால் மேலதிகாரிகளைக் கவர்ந்து விடுவார்கள்.
குடும்பத்தில் இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும். உறவினர்களின் உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு, புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, உங்கள் பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு, மற்றவர்கள் பேச்சைக் கேட்கும்போது, தீர ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனைச் செவ்வாய்க் கிழமையன்று எலுமிச்சைத் தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிக்குச் செவ்வாய் வருவதால் சுணக்க நிலை மாறும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகும். உத்தியோகத்தில் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாழ்க்கைத் துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
வழக்கு, விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்களுக்கு, கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு, எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது தொடர்பில் கவலை நீங்கும். மனத்தில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: திங்கள்கிழமையன்று விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வரக் கடன் தொல்லை குறையும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் நண்பர்கள் வகையில் இருந்துவந்த மனத்தாங்கல் மறையும். பூமி தொடர்பான பிரச்சினைகளில் இழுபறியான நிலை காணப்படும். வழக்குகளில் சாதகமான நிலையைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை மாறும். போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.
குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கிருந்த தடைகள் அகலும். பெண்களுக்கு, மனதைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத் துறையினருக்கு, ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்குத் துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கக் குடும்பக் கஷ்டங்கள் நீங்கும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுவீர்கள். எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மன வருத்தம் நீங்கும்.
உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, நிதானமாகச் சிந்தித்துச் செய்யும் காரியங்கள் வெற்றிபெறும். கலைத் துறையினருக்கு, பொறுமையுடன் செயல்பட வேண்டும். பயணங்களின் போதும், வாகனங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடத் துன்பங்கள் விலகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago