மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனம் அவசியம். குடும்பாதிபதி சுக்கிரன் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்களால் உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, நிலுவையிலிருந்த பணத்தொகை கைக்குக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பெயர், புகழ், கவுரவம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 9
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரயஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். செலவு அதிகரிக்கும். மனத்தில் கலக்கம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். வீண்பேச்சைத் தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மன நிறைவுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடமும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை தலை தூக்கலாம். அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, மனக்கவலை நீங்கும். கலைத் துறையினருக்கு, பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன், ராசிக்கு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் பார்வையால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். பொருள்வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டிச் செயல்பட வேண்டி இருக்கும். சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலிடத்துடன் மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் சுகம், சந்தோஷம் உண்டு. பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துத் திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு, வழக்கத்தைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு, தடைகளைத் தாண்டிப் படிக்க வேண்டி இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: பெருமாளைப் பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரவு கூடும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பதவி, பொறுப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சால் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகங்களைக் களைவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்துப் பூஜித்து வணங்கத் துன்பங்கள் நீங்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் திட்டமிட்டபடி பணிகளைச் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெறுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு, தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, அதீத கவனத்துடன் செயல்படுவது பதவி உயர்வு, வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக முடியும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது பல வகைகளிலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்துவிடும். உத்தியோகத்தில் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். புதிய வேலைக்குச் செய்யும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். சுக்கிரன் சஞ்சாரம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு, எந்த முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசியுங்கள். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago