ஆங்கிலம் அறிவோமே 70 - கலாம் பயன்படுகிறார்

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஓர் ஆங்கில நாளிதழில்

“Abdul Kalam had special fondness for Alma Mater’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். Alma Mater என்றால் என்ன?”

“He passed away after collapsing during a lecture என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். Collapse என்றால் இறந்துவிடுதல் என்று அர்த்தமா? அல்லது மயக்கம் போடுதல் என்று அர்த்தமா?”

“Memorabilia of former President at his Rameswaram house attracts visitors’ என்ற வாக்கியத்தின் முதல் வார்த்தைக்கு என்ன பொருள்?”

டாக்டர் அப்துல் கலாம் மறைவு குறித்த செய்திகள் தொடர்பாகவே மூன்று வாசகர்கள் இப்படி மூன்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

Alma Mater (அல்மா மேடர்) என்றால் ஒருவர் படித்த பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி எனலாம். லத்தீன் மொழியில் Alma Mater என்றால் உணவளிக்கும் அன்னை என்று பொருள். அதாவது அறிவுப் பசியைத் தீர்க்கும் கல்வி அன்னை.

Collapse என்பதை இறந்து விடுதல் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதன் நேரடி அர்த்தம் தடாலெனக் கீழே விழுவதுதான். Buildings collapsed in the earthquake. The chair collapsed under his weight.

He collapsed due to heart attack என்று மாரடைப்பால் ஒருவர் இறந்ததைக் குறிப்பிடக் கூடாது. He collapsed and died of heart attack எனலாம்.

சில சமயம் ஓர் உருவகம் போலவும், இலக்கிய அழகு உத்தியாகவும்கூட collapse பயன்படுத்தப்படுகிறது. Her husband died and she felt her whole world had collapsed.

Collapsible chair என்றால் கீழே சட்சட்டென்று விழுந்துவிடும் நாற்காலி என்று அர்த்தமில்லை. மடித்து வைக்கக்கூடிய குறைவான இடம் மட்டுமே அப்போது தேவைப்படுகிற நாற்காலி என்று அர்த்தம்.

Collapsible gate என்பதையும் நீங்கள் சில கடை வாசல்களில் பார்த்திருக்கலாம். மடக்குக் கதவு என்பார்களே, அதுதான். Folding door. சில கடைகளில் பூட்டைத் திறந்துவிட்டு மேலே தள்ளினால் அந்தக் கதவு தன்னை மடித்துக் கொண்டபடி சுருக்கிக் கொண்டு மேலெழும்பும். Rolling Shutter எனப்படும் இதையும் கூட collapsible gate என்று கூறலாம் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் எதற்காக ‘collapsible’ என்று கூற வேண்டும் என்று யோசியுங்கள். சுவையான கோணம் கிடைக்கும்.

Share market collapsed என்றால் பங்குகளின் மதிப்பில் திடீரென ஒரு பெரும் சரிவு என்று அர்த்தம். Talks between the Government and the workers collapsed என்றால் பேச்சு வார்த்தை முறிந்துவிட்டது என்று அர்த்தம்.

அடுத்ததாக Memorabiliaவுக்கு வருவோம். நினைவில் கொள்ளத்தக்க சிறு சிறு பொருள்கள் மற்றும் ஆவணங்கள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

அப்துல் கலாம் தொடர்பான செய்திகளில் வேறு சில வார்த்தைகளுக்குக்கூட விளக்கம் கொடுக்கலாமென்று தோன்றுகிறது.

“Pall of gloom at House of Kalam’’ என்கிறது ஒரு செய்தித் தலைப்பு. Gloom என்றால் ஒருவித சோகம் அல்லது மனச்சோர்வு எனலாம். Pall என்றால் (Pal என்றால் நண்பன். ஆனால் இந்த வார்த்தையில் இன்னொரு ‘L’ இருக்கிறது) சில சமயம் கல்லறைப் பெட்டியையும், சில சமயம் அதன் மூடியையும் குறிக்கிறார்கள். மேற்படி எடுத்துக் காட்டை ‘கலாமின் வீட்டில் கவியும் சோகம்’ எனலாம்.

Kalam’s death has left a void. இந்த வாக்கியத்தில் void என்பதை வெற்றிடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் சட்டத்தைப் பொருத்தவரை void என்பதற்கு அர்த்தம் வேறு. Void என்றால் சட்டப்படி செல்லாத என்று அர்த்தம். அதாவது social agreements எல்லாம் contracts அல்ல என்பார்கள். (Contract is an agreement accepted by law). நீங்களும் உங்கள் நண்பரும் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக ஒப்புக் கொள்கிறீர்கள். பல வேலைகளை விட்டுவிட்டு (இதனால் உங்களுக்கு நஷ்டம்கூட ஏற்பட்டிருக்கலாம்) நீங்கள் அந்த இடத்துக்குச் சென்று காத்திருந்தால் நண்பர் வரவில்லை.

இதற்காக நீங்கள் வழக்கு தொடுக்க முடியாது. இது ஒரு void contract. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது valid என்பதற்கு எதிர்ச்சொல்லாக void பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்ற இதழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள்

1. மிக விறுவிறுப்பான இறுதிக் கட்டம் - Nail biting finish

2. மிகக் கடுமையான போட்டி - Cut-throat competition

3. திடீர் சரிவு - Nosedive

4. உண்மையைப் புரிய வைத்த நிகழ்வு - Eye opener

5. “யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை” என்பது போன்ற சவால்கள் - Tongue twisters

6. நாம் அணியும் காலம்காட்டி - Wrist watch

7. இடுப்பையும், வயிறையும் சுற்றி சீரான அசைவுகள் கொண்ட நடனம் - Belly dance

8. தீவிரமாகப் போராடுதல் - Fighting tooth and nail

9. எச்சரிக்கை மணிகள் - Alarm signals

10.வேகத்தைத் தடை செய்யும் இடையூறு - Bottleneck

11.கோழைத்தனமான - Chicken hearted

12.முடிவு எப்படியும் இருக்கலாம் எனும் நிலையை உணர்த்துவது – Keeping fingers crossed

13.லஞ்சம் கொடுப்பது - Greasing the palm

APPOSITE – OPPOSITE

Opposite என்றால் உங்களுக்குத் தெரி யும். எதிரான அல்லது எதிரில் உள்ள.

Apposite என்றால் தொடர்புடைய என்று அர்த்தம். அதாவது appropriate அல்லது relevant. The points raised by you are apposite to the goal of the debate.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்