ஒரு நண்பர் Beautiful, handsome, pretty போன்றவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று ஒரு ‘அழகான’ கேள்வியை எழுப்பினார்.
நவீன அமெரிக்க ஆங்கிலத்தில் beautiful என்ற வார்த்தையைப் பெண் களுக்கும், handsome என்ற வார்த்தையை ஆண்களுக்கும் பயன்படுத்துகிறோம்.
உயிரற்ற, அழகான பொருள்களை விவரிக்கவும் beautiful என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. Beautiful room, beautiful flowers.
அந்தக் கால ஆங்கில நூல்களில் அழகான குதிரைகளை (ஆணோ, பெண்ணோ) குறிப்பதற்கு handsome என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
Handsome என்பது பெரும்பாலும் வெளிப்புற அழகைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. Beautiful என்பது வேறு அர்த்தங்களையும் உள்ளடக்கியது. It is a beautiful idea எனும்போது excellent, wonderful என்ற அர்த்தத்திலும் அதைப் பயன்படுத்துகிறோம்.
Pretty என்றாலும் அழகான என்ற அர்த்தம்தான். சில சமயம் ‘வழக்கமான அழகு’ இல்லையென்றாலும் வேறு விதத்தில் கவரக்கூடியவற்றை உணர்த்தவும் pretty என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. She is a pretty little girl.
Pretty என்பதை அதன் plural-ல் noun ஆகவும் பயன்படுத்துவதுண்டு. சின்னச் சின்னப் பொருள்கள் என்று அர்த்தம். He buys her lot of pretties.
ஆனால் யாரையாவது பாராட்டி எழுதும்போது ‘r’ என்ற எழுத்தை விட்டுவிடாதீர்கள். Petty என்றால் அற்பத்தனமான அல்லது மிகச் சிறிய என்று அர்த்தம்.
Handsome என்ற வார்த்தையில் Hand என்ற உடல் பாகத்தின் பெயர் இருப்பதைப் பார்த்ததும் எனக்கு வேறொரு எண்ணம் தோன்றியது. கீழே உள்ள வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அந்த ஒவ்வொரு ஆங்கில வார்த்தையிலும் நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் காணப்படும். அவற்றைக் கண்டுபிடியுங்கள். எடுத்துக்காட்டு ஐந்தாவது குறிப்புக்கான விடை FOOT
1. குற்றச்சாட்டு
2. தோற்றம்
3. நோய் அறிதல்
4. மண்டியிடுதல்
5. கால்பந்து
6. (தண்ணீருக்குள்) அமிழ்தல் அல்லது நுழைத்தல்.
7. வெண்டைக்காய்
8. அவைத்தலைவர்
9. பனைமரங்கள்
10. கையால் எழுதப்பட்ட நூல் அல்லது ஆவணம்.
OUGHT TO
Should என்பதற்கும் Ought to என்பதற்கும் என்ன வித்தியாசம்? இது ஒரு வாசகரின் கேள்வி. ‘கட்டாயமாக’ என்ற தொனி ஒலிக்கும் அர்த்தத்தில் இரண்டும் ஒன்றுதான். ஆனால் வேறு கோணங்களில் மெல்லிய வேறுபாடுகள் உண்டு.
Should என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.
பிறருக்கு ஆலோசனையோ அறிவுரையோ அளிக்கும்போது ought to பயன்படுத்தப்படுகிறது. You ought to ask for legal advice. You ought to be a bit more careful.
Ought to என்பதன் பின்னால் have என்பதையும் சேர்த்தால் அதன் அர்த்தம் வேறு. அதாவது, சரியான செயல் எதுவோ அதை சம்பந்தப்பட்டவர் செய்யாமல் விட்டுவிட்டார் என்று அர்த்தம். She ought to have insured her life.
ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் ought to பயன்படுத்தப்படலாம். He ought to be here in ten minutes.
நீங்கள் எதையோ செய்தே ஆக வேண்டும் என்கிற அர்த்தத்திலும் ought to-வைப் பயன்படுத்தலாம். I ought to leave. It is late night.
இந்தப் பகுதியின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கான மொழிபெயர்ப்பு வார்த்தைகள் இதோ.
1. Allegation
2. Appearance
3. Diagnose
4. Kneeling
5. Football
6. Plunge
7. Ladies finger
8. Chairman
9. Palmyras
10. Manuscript
மேலே உள்ள இரு புகைப்படங்களில் உள்ள நீல் ஆம்ஸ்ட்ராங், திலிப் குமார் ஆங்கிலப் பெயர்களில் கூட உடல் பாகங்களின் பெயர்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள்.
இப்போது இன்னும் கொஞ்சம் சிரமமான வார்த்தைகள். இவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அவற்றுக்கான ஒவ்வொரு விடையிலும் கூட நம் உடலின் ஒரு பாகத்தின் பெயர் இருக்க வேண்டும். ஒவ்வொரு விடையும் ஒன்றிலிருந்து மூன்று வார்த்தைகள் கொண்டது. இவற்றுக்கான விடைகளை அடுத்த இதழில் பார்க்கலாம்.
1.மிக விறுவிறுப்பான இறுதிக் கட்டம்
2. மிகக் கடுமையான போட்டி
3. திடீர் சரிவு
4. உண்மையைப் புரிய வைத்த நிகழ்வு
5. “யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை” என்பது போன்ற சவால்கள்
6. நாம் அணியும் காலம்காட்டி
7.இடுப்பையும், வயிறையும் சுற்றி சீரான அசைவுகள் கொண்ட நடனம்
8. தீவிரமாகப் போராடுதல்
9.எச்சரிக்கை மணிகள்
10.வேகத்தைத் தடை செய்யும் இடையூறு அல்லது இடைஞ்சல்
11.கோழைத்தனமான
12.முடிவு எப்படியும் இருக்கலாம் எனும் நிலையை உணர்த்துவது
13.லஞ்சம் கொடுப்பது
விடைகள் அடுத்த வாரம் இதே பகுதியில்
வேண்டுமா other ?
பலரும் செய்யும் ஒரு தவறை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ‘No other alternative’ என்கிறார்கள். Alternative என்பதே மாற்று என்பதுதான். எனவே other என்ற வார்த்தை அவசியம் இல்லை. The criminal has no alternative but to accept the crime.
அதே சமயம் choice என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது அதற்கு முன்னால் other இருக்கலாம். I have no other choice but to invite him.
METRE METER
பலவித கருவிகளின் பெயர்களில் மீட்டர் என்கிற வார்த்தை இணைக்கப் பட்டிருக்கும். அப்போதெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டிய வார்த்தை meter.
Ammeter, Galvanometer, Thermometer.
Metre என்றால் அது ஒரு மெட்ரிக் அளவையைக் குறிக்கிறது. அதாவது 100 சென்டிமீட்டர் கொண்ட அளவை. The snake was three metres long.
ஆனால், அமெரிக்கர்கள் எல்லாவற்றுக்குமே meter என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago