ஆங்கிலம் அறிவோமே 67- ஒலிம்பிக்கா, ஒலிம்பிக்ஸா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

சில வாரங்களுக்கு முன் cliche என்ற வார்த்தை குறித்து குறிப்பிட்டிருந்தேன். இதன் தொடர்ச்சியாக ‘clique’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒருவர். கூடவே அது புகைப்படம் எடுக்கும்போது எழும் ஒலியைத்தானே குறிக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

கேமராவில் எழும் ஒலி, மூளையில் திடீரென்று பல்பு எரிவது போன்றவற்றைக் குறிக்க உதவும் வார்த்தை click.

ஆனால் clique என்றால் ஒரு வட்டம் என்ற அர்த்தம். அதாவது குழு. Some employees have their own clique. They do not mix with others.

POLE

Pole என்றால் துருவம். காந்தத்துக்கு North pole, South pole உண்டு. Polar bear என்றால் துருவக் கரடி. We are poles apart என்றால் நாங்கள் இருவரும் இணக்கமாக இல்லை என்ற அர்த்தம்.

Pole என்றால் அது கம்பத்தையும் குறிக்கிறது. They are in pole position என்றால் அவர்கள் மிகவும் form- ல் இருக்கிறார்கள். அதாவது நிச்சயம் வெற்றிதான் எனும் நிலை. அதாவது வெற்றிக் கம்பம்.

I would not touch it with a ten foot pole என்றால் ‘அதை’ நீங்கள் மிகவும் கேவலமாக நினைக்கிறீர்கள் என்று பொருள். அதாவது, அவ்வளவு நீளமான கம்பத்தைப் பயன்படுத்திக்கூட நீங்கள் அதைத் தொட மாட்டீர்கள்!

Follow me up the greasy pole of enlightenment என்றால் ஞானத்தை அடைந்துவிட்ட அந்த மார்க்கத்தில் பிறரையும் வரச் சொல்கிறீர்கள். அதுமட்டுமல்ல, அந்த வழி மிகவும் கஷ்டமானது என்பதையும் உணர்த்துகிறீர்கள். க்ரீஸ் தடவப்பட்ட கம்பத்தில் ஏறுவது சுலபம் இல்லையே!

மற்றபடி poll என்றால் கருத்துக் கணிப்பு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

HAS, HAVE, HAD

பல வாசகர்களின் வேண்டுகோள் இது. அதாவது, மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வார்த்தைகளின் அர்த்தங்கள் என்ன? அவற்றை எப்படிச் சரியான விதத்தில் பயன்படுத்துவது?

முதலில் Has, Have ஆகிய இரண்டு வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். இவற்றில் I, We, You, They ஆகிய வார்த்தைகளைத் தொடர்ந்து வரவேண்டியது Have.

He, She, It ஆகிய வார்த்தைகளைத் தொடர்ந்து வரவேண்டியது Has.

I have a table. We have this duty. He has a house. Cow has four legs. Ram and Shyam have money. (Ram and Shyam என்பது He அல்ல, They. எனவே Have).

Has, Have ஆகியவை உடைமையைக் குறிக்கின்றன என்று கூறலாம். I have a chocolate, We have credit cards. She has a cycle.

Has, Have ஆகியவை காலத்தையும் குறிக்கக் கூடும். முக்கியமாக Present perfect tense-ல் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

I have a house எனும்போது அந்த have உடைமையைக் குறிக்கிறது. I have built a house எனும்போது have என்பது காலத்தைக் குறிக்கிறது. அதாவது, நான் அந்த வீட்டைக் கட்டி முடித்துவிட்டேன் என்பதுபோல. அதாவது Past tense- ம் இல்லை, Present tense- ம் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். ‘இதோ வந்துட்டேன்’ என்பதைப் போல.

She has lent me her pen. I have borrowed his book ஆகிய வாக்கியங்களில் has, have ஆகியவை காலத்தைக் குறிக்கின்றன.

இப்போது Had என்ற வார்த்தைக்கு வருவோம். Had என்பதும் உடைமையைக் குறிக்கப் பயன்படுகிறது. அதாவது, கடந்த காலத்தில் உடைமையாக இருந்தவற்றைக் குறிக்கிறது.

I have a car என்றால் என்னிடம் ஒரு கார் இருக்கிறது என்று பொருள். I had a car என்றால் என்னிடம் ஒரு கார் இருந்தது என்று பொருள். அதாவது, இப்போது அந்தக் கார் என்னிடம் இல்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. She had the invitation card என்றால் அவள் அழைப்பிதழை வைத்திருந்தாள் என்று பொருள்.

மற்றொரு விதத்திலும் Had என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

I had severe headache என்றால் இன்று காலை கடுமையான தலைவலியை நான் அனுபவித்தேன் என்று அர்த்தம். ஆக had என்பது ஒருவித அனுபவத்தைக் குறிக்கிறது. We had a fabulous time.

Had என்பது past perfect tense- ல் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. We had lived in London. (அதாவது, இப்போது வசிக்கவில்லை).

Has, have, had குறித்த எளிமையான அணுகுமுறை இது. இவை தொடர்பான வேறு சிலவற்றை இந்தத் தொடரின் வேறொரு பகுதியில் பார்ப்போம்.

“Olympic, Olympics இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரியானது?’’ என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு “இரண்டு வார்த்தைகளுமே சரியானவைதான்’’ என்றுதான் பதிலளிக்க முடியும். (தப்பான விதத்தில் நாம் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகள் என்ன செய்யும் பாவம்!)

Olympics என்பது பெயர்ச் சொல். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அந்தப் போட்டிகளின் பெயர் Olympics. Athens hosted the first Olympics.

Olympic என்பது adjective. அதாவது ஒரு noun-ஐ விளக்கும் சொல். எனவே இந்த வார்த்தையை adjective ஆகப் பயன்படுத்தலாம். This is an Olympic year. Olympic grounds are getting ready.

That is a record in Olympics. That is a record in Olympic games.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்