சேதி தெரியுமா?

By மிது கார்த்தி

யோகா கொண்டாட்டம்

சர்வதேச முதல் யோகா தினம் ஜூன் 21 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. யோகாவைக் கொண்டாட 192 நாடுகளைச் சேர்ந்த 256 நகரங்களில் ஐ.நா. சபை ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 37 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்தனர். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது.

வங்கதேசம் சாதனை

மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஜூன் 21 அன்று இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்கதேச அணி வென்றது. முதல் முறையாக இந்திய அணியை ஒரு தொடரில் தோற்கடித்தது மூலம் வங்கதேச அணி சாதனையும் படைத்தது.

அது மட்டுல்ல, தரவரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் உள்ள அணி ஒன்றை ஒரு தொடர் வங்கதேசம் தோற்கடித்ததும் இப்போதுதான் முதல்முறை. இந்தத் தோல்வியை அடுத்து இந்திய அணி மீதும் கேப்டன் தோனி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் தோனி அறிவித்தார். இறுதியாக ஜூன் 24 அன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

கர்நாடகம் மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ஜூன் 22 அன்று மேல்முறையீடு செய்தது.

2,367 பக்கங்கள் கொண்ட மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஏராளமான தவறுகளும், கணிதப் பிழைகளும், சட்ட முரண்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வ‌ரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது என்றும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ததற்கான காரணத்தை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் எங்கேயும் விளக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கியது

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளைக் கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 25 அன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் நடந்த இந்த விழாவில் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மோடி வெளியிட்டார். இந்தத் திட்டத்தின்படி நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்துத் தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. அடல் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

சென்னை இடைத்தேர்தல்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு தனி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்ததையடுத்து அவர் மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை அடைவதற்காக சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் ராஜிநாமா செய்தார்.

அதனால் ஜூன் 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 230 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்கள். காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில் 74.4 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (30-ம் தேதி) எண்ணப்படுகின்றன. தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் உள்பட 28 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்