ஆங்கில மொழி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்ற சூழல்தான் இன்றைய நிதர்சனம். ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்தச் சூழலைச் சமாளித்து வேலைவாய்ப்பிற்குத் தகுதியுடையவர்களாகத் தங்களை மாற்றிக்கொள் கிறார்கள். ஆனால், தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த முக்கியமான சமூக-கல்விப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுத்துவருகிறது சென்னையில் இயங்கிவரும் ‘சக்ஸஸ் மந்த்ரா’ அமைப்பு.
சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
இந்த அமைப்பு, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்குத் தனியாக ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை எடுத்துவருகிறது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு இந்த அமைப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான லீனா, ‘சக்ஸஸ் மந்த்ரா’ சார்பில் 2012-ல் காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களின் கல்லூரி மாணவர்களிடம் நடத்திய ஆய்விலிருந்து ஆங்கிலத்தை எதிர்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொண்டோம். அதற்குப் பிறகு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மாணவர்கள் குழு ஒன்றை அமைத்துக் கலந்து பேசி பயிற்சி வகுப்பிற்கான 40 மணிநேர ஆங்கில அடிப்படைப் பாடத்திட்டத்தை உருவாக்கினோம்” என்கிறார்.
சமூக ஏற்றத்தாழ்வு
கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் சமூகம் கடைப் பிடிக்கும் ஏற்றத்தாழ்வுகளே இந்தப் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம். தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் கேம்பஸ் இன்டர்வியூகளில் பெரும்பாலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதை ஆமோதிக்கும் லீனா, “பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய சூழல் மனதளவில் பெரிய நெருக்கடியை உருவாக்குகிறது. இவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொறியியல் அல்லது பிற படிப்புகள் படிக்க வரும்போது ஆங்கிலம் பெரிய சவாலாகவே இருக்கிறது. அந்த மாணவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று ஊக்கம் அளிப்பதற்கு எந்த விதமான சிறப்பு முயற்சிகளும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று கூறுகிறார்.
மணி டாக்ஸ்
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ‘மணி டாக்ஸ்’ என்ற 80 மணிநேரப் பாடத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் ‘சக்ஸஸ் மந்தரா’ அமைப்பினர். “சக மாணவனாக இருக்கும் மணி என்ற கதாபாத்திரம் வழியாக ஆங்கிலத்தின் எட்டு அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். மணியுடன் மாணவர்களால் தங்களை எளிமையாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இதனால் மாணவர்கள் எந்தச் சிரமும் இல்லாமல் ஆங்கிலத்தைச் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கிறார் லீனா.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ‘மணி டாக்ஸ்’ என்ற 80 மணிநேரப் பாடத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் ‘சக்ஸஸ் மந்தரா’ அமைப்பினர். “சக மாணவனாக இருக்கும் மணி என்ற கதாபாத்திரம் வழியாக ஆங்கிலத்தின் எட்டு அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். மணியுடன் மாணவர்களால் தங்களை எளிமையாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இதனால் மாணவர்கள் எந்தச் சிரமும் இல்லாமல் ஆங்கிலத்தைச் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கிறார் லீனா.
முதல் நாள் கல்லூரியில் தொடங்கும் பாடம் மணியின் நண்பர்கள் கார்த்திக், ராதாவுடன் இணைந்து அவர்கள் வழக்கமாகச் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்கிறது. ஸ்டைல் மணி, டைம்பாஸ், பாப்கார்ன் vs சுண்டல், ஸ்மார்ட் மணி என்ற மாணவர்கள் பேச்சு வழக்கு பாணியிலேயே பாடங்களை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
தொடர்புக்கு: 8754595057, info@successmanthra.com, www.successmanthra.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago