“எனக்காக ஒரு உதவி செய்” என்கிறாள் தோழி. “கண்டிப்பா செய்றேன்” என்கிறீர்கள் நீங்கள்.
“நாளைக்கு நாம ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போகலாம். ஆறு மணிக்கு தி யேட்டருக்கு வந்துடு வ இல்ல?’’ என்கிறான் நண்பன்.
“கண்டிப்பாக” என்கிறீர்கள் நீங்கள்.
கண்டிப்பாக என்றால் Strict-ஆக என்றுதான் அர்த்தம். அதிக விஷமக்காரக் குழந்தைகளிடம் பெற்றோர் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிறோமே அதுபோல. ஆனால் ‘நிச்சயமாக’ என்கிற அர்த்தத்திலும் நாம் ‘கண்டிப்பாக’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இப்படி ஆங்கிலத்திலும் சில வார்த்தைகளைச் சரளமாகத் தவறான பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
“நான் எப்பவுமே ரொம்ப plain’’ என்று பெருமை பொங்கச் சிலர் கூறுவதைக் கேட்டிருக் கிறோம். அதாவது அவர் எ தையும் மறைத்துப் பேசாதவராக, வெளிப்படையான வராக இருக்கிறாராம்.
வள்ளலார் ஆலோசனைப்படி ‘இவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்’ எனவே இவருடன் நெருக்கமாகலாமா?
ஆனால் plain என்ற ஆங்கில வார்த்தைக்குப் பொருள் ‘வெளிப்படையான’ என்பது அல்ல. ‘எளிமையான அல்லது சாதாரணமான’ என்றுதான் இதற்கு அர்த்தம். அதாவது ஸ்பெஷலாக எதுவுமில்லாத என்பது போன்ற அர்த்தத்தில், கொஞ்சம் இகழ்வாகக் கூறப்படும் வாக்கியம் இது. (plain தோசை நினைவுக்கு வருகிறதா?)
Plain என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கிட்டத்தட்ட மரங்களே இல்லாத பிரம்மாண்டமான, தட்டையான நிலப்பரப்பை plain என்று கூறுவதுண்டு.
நாம் அடிக்கடி அசால்ட் செய்யும் இன்னொரு வார்த்தை assault என்பதுதான்.
“அவன் அசால்டா பேசினான்” என்று கூறும்போது ‘சரளமாக எந்த விதத் தடங்கலுமின்றிப் பேசினா ன்’என்கிற அர்த்தத்தில் குறிப்பிடுகிறோம்.
“அவன் ரொம்ப assault-டா செய்தான்” என்று உங்கள் நண்பரைப் பற்றி உரத்துச் சொல்லாதீர்கள். காவல் துறையினர் உங்கள் நண்பரைக் கைதுசெய்துவிடலாம்.
Assasult என்றால் தாக்குதல் என்று அர்த்தம். தாக்குதல் என்றால் வார்த்தைகளில் எதிர்க்கருத்தை அழுத்தமாகக் கூறுவது அல்ல. உடலளவில் தாக்க வருவது. சில சமயம் தாக்குதல் பயத்தை உண்டாக்கும்படி கையசைவோடு வார்த்தைகளும் இருந்தால் அதுவும் assualtதான். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 351-வது பிரிவின்படி இது ஒரு குற்றம். இதைப் படித்த பிறகும் “நீங்க சொன்னதை என்னாலே உணர முடியுது. இது assaultஆன விஷயம் இல்லேன்னு தெரியுது” என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் அல்லவா?
உங்களுக்கு காமெடி பிடிக்குமா? என்று கேட்டால் “யாருக்குதான் பிடிக்காது சிரித்து மகிழ்வது அனைவருக்குமே பிடித்ததுதானே” என்று பதில் கூறிவிட்டு, “சார்லி சாப்ளின், என் .எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, வடிவேலு இவங்க எல்லாம் காமெடி கிங்ஸ்” என்ற கூடுதல் வார்த்தைகளைச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறீர்களா?
இப்போதைய வழக்கில் காமெடி என்பது நகைச்சுவையைக் குறிக்கிறது. என்றாலும் காமெடி என்பது மகிழ்ச்சியான முடிவைக் கொண்ட நாடகத்தைக் குறிக்கிறது, அவ்வளவுதான். அதாவது கடைசிக் காட்சிக்கு முன்புவரை அந்த நாடகம் முழுக்க, முழுக்க சோக ரசத்தில் மூழ்கியிருக்கலாம். முடிவு மட்டும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தால் போதும்; அது காமெடியாகிவிடும். (முடிவு சோகமாக இருந்தால், அது tragedy).
ஆங்கிலத்திற்கு அதிக மான வார்த்தைகளைத் தந்தவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும். அவர்களைப் பொறுத்தவரை, காமெடிக்கு மேலே சொன்னதுதான் அர்த்தம். பிறகு போனால் போகிறது என்று மகிழ்ச்சியான முடிவைக் கொண்ட கவிதைகளையும் காமெடி என்று சொன்னார்கள். “ஆகத் திரைப் படங்களுக்கும், காமெடிக்கும் ஆங்கிலத்தில் தொடர்பு இல்லையா? நல்ல காமெடியா இருக்கு” என்கிறீர்களா?
ஆங்கிலத்தில் ‘naive’ என்று ஒரு வார்த்தை உண்டு. இப்படி யாரையாவது நீங்கள் குறிப்பிட்டால் அவர் அதற்காகச் சந்தோஷப்பட மாட்டார். ஏனென்றால் அனுபவமற்ற, அறிவுத் திறனற்ற ஒருவரைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்க ள். ஆனால் இந்த வார்த்தை ஜப்பானில் எப்படியோ சிறப்பான அந்தஸ் தைப் பெற்று விட்டது. Naive என்ற வார்த்தைக்குப் பொருள் ‘மிருது வான, சிறப்பான’என்றுதான் ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால் அங்கே தயாரிக்கப்படும் பல பொருட்களின் பெயர்களில் ‘Naive’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago