டாக்டருக்கும் இன்ஜினீயருக்கும் அப்பால்...

By யுகன்

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பார்கள். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடனான தோழமையை, தங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் படிப்பை அவர்களுக்குக் கொடுப்பதிலிருந்தே தொடங்கலாம்.

இழுத்துப் பிடிக்காதீர்கள்

வங்கி அதிகாரியாக வேண்டும் என்னும் உங்களுடைய கனவை, தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் உங்கள் குழந்தையின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்காதீர்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைப் போலவே, அதற்கான படிப்புகளும் அது சார்ந்த பணி வாய்ப்புகளும் பெருகி வருகின்றன.

டாக்டர் ஆகப்போகிறாயா, இன்ஜினீயர் ஆகப்போகிறாயா என்ற கேள்விதான் முன்பெல்லாம் ஒரு மாணவரிடம் முன்வைக்கப்படும். இந்த இரண்டு படிப்புகள் மட்டும்தான் ஒரு மாணவன் அல்லது மாணவியின் லட்சியம் என்னும் மாயை உருவாக்கப் பட்டிருந்தது. இன்றைக்கு அந்த நிலைமை மாறிவிட்டது. வாய்ப்புகளை உங்களுடைய குழந்தைகளுக்கு உருவாக்கித் தாருங்கள். அதிலிருந்து அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வார்கள்.

மருத்துவம், பொறியியலையும் சார்ந்த பல புதிய படிப்புகளும் இன்றைக்கு மாணவர்களின் தேர்வுகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சில படிப்புகளைப் பற்றியும், கலை சார்ந்த சில படிப்புகளைப் பற்றியும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கிரிமினாலஜி

குற்றம் ஏன் நிகழ்கிறது? அதன் பின்னணி என்ன? எத்தகையச் சூழ்நிலைகளில் குற்றம் நடக்கிறது? குற்றவாளிகளுக்குத் தண்டனை தருவதன்மூலம் குற்றங்கள் குறையுமா? இளம் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? அவர்களின் மனநிலை என்ன? என்னும் வகையிலான, குற்றம் சார்ந்த பல அம்சங்களை கிரிமினாலஜி படிப்பு அலசும். தமிழகத்தில் சில கல்லூரிகளில் கிரிமினாலஜி இளங்கலைப் பிரிவில் கற்றுத் தரப்படுகிறது.

கல்லூரி வளாகக் கல்வி மட்டுமின்றி, கடைசி ஆண்டில் சிறை, காவல்நிலையம், ஆவணங்கள் பாதுகாப்புப் பிரிவு, தடயவியல் துறைகளிலும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

விஞ்ஞானத்தின் துணையுடன் குற்றத்தைப் புரிந்துகொள்வது, குற்றவாளிகளின் நடத்தை ஆய்வு, குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்வது, துப்பறிவது போன்றவற்றை இந்தப் படிப்பு உங்களுக்குச் சொல்லித் தருகிறது.

இத்துடன் நின்றுவிடாமல் தண்டனை எந்த விதத்தில் இருக்கலாம் என்பது பற்றிய ஆய்வு, தண்டனை அனுபவித்து, வெளியே வரும் கைதிகளுக்குப் புனர்வாழ்வு, குற்றச் செயல்களிலிருந்து எப்படிச் சிறுவர்களை வெளிக்கொண்டு வரலாம் என்பது பற்றிய விஷயங்களும், இந்த கிரிமினாலஜி படிப்பு சொல்லித் தரும்.

இசையால் வசப்படுத்தலாம்

12-ஆம் வகுப்பை முடித்துவிட்டேன். ஆனால், எனக்கு இசையில்தான் விருப்பம் என்று சொல்லும் மாணவர்கள் இசைக் கல்லூரிகளில் வாய்ப்பாட்டு, கருவி இசை, பரதநாட்டியம் போன்ற கலை சார்ந்த படிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அதன்மூலம் புகழடையலாம்.

பயோ இன்ஃபர்மெட்டிக்ஸ் எனப்படும் உயிர்த் தகவலியல் படிப்புக்கு உள்நாட்டிலும் சரி, பல வெளிநாடுகளிலும் சரி பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள். இதேபோல், மாலிகுலர் பயாலஜி படிப்புக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மருத்துவப் பொறியியல்

மருத்துவத் துறையில் பயன்படும் தொழில்நுட்பங்களைக் குறித்தும் படிப்பு இருக்கிறது. நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல் நோயைக் கண்டறியும் கருவிகளும் இன்றைக்கு அதிகம் உள்ளன. இந்தக் கருவிகள் எல்லாமே மின்னணு மற்றும் இயந்திரக் கருவிகள். இத்தகைய கருவிகளை இயக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கானப் படிப்புதான் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங். இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு மருத்துவத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மருத்துவ வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள, மருத்துவ ஆராய்ச்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட பயோ மெடிக்கல் இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இது மட்டுமின்றி மெடிக்கல் இமேஜிங், பயோ இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற படிப்புகள் உள்ளன. பயோ டெக்னாலஜி மூலம், பல முக்கியமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. பயோ அக்ரி படிப்புகளும் உள்ளன.

ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் ஏரோநாட்டிக்ஸ், ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. மாணவர்களிடம் வெளிப்படும் திறன்களுக்கேற்ப இந்தக் கல்வி நிலையங்களில் படிப்பதன் மூலம், எதிர்காலத்தில் சிறந்த ஆராய்ச்சி மாணவர்களாகவும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் மிளிர முடியும்.

பொறியியலுக்கு இணையாக புள்ளியியல் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டட் துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

வற்றாத நதி

தகவல் தொழில்நுட்பத் துறையில் படித்தவர்களுக்கு வேலை பறிபோகிறது என்ற பதற்றம் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. ஒருசில நகரங்களில், சில நிறுவனங்களின் சறுக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டாலும், இன்னும் தகவல் தொழில்நுட்பத்துக்கான தேவை குறைந்துவிடவில்லை என்கிறது சமீபத்திய ‘நாஸ்காம்' ஆய்வு. அதன்படி, நம் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல்மயமாக்க நான்கு ஆண்டுகளில், இந்தத் துறைக்கு 15 லட்சம் பேர் தேவை என்கிறது நாஸ்காம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் படித்தவர்களுக்கு வேலை பறிபோகிறது என்ற பதற்றம் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. ஒருசில நகரங்களில், சில நிறுவனங்களின் சறுக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டாலும், இன்னும் தகவல் தொழில்நுட்பத்துக்கான தேவை குறைந்துவிடவில்லை என்கிறது சமீபத்திய ‘நாஸ்காம்' ஆய்வு. அதன்படி, நம் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல்மயமாக்க நான்கு ஆண்டுகளில், இந்தத் துறைக்கு 15 லட்சம் பேர் தேவை என்கிறது நாஸ்காம்.

தகவல் தொழில்நுட்பத் துறை, கட்டுமானத் துறை, தொழிற்சாலைகள், வணிகம் சார்ந்த துறைகள், கல்வி நிலையங்கள், ஆடை வடிவமைப்புத் தொழில், பல்நோக்கு மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள், ஊடகம் சார்ந்த தொழில்கள் போன்ற எல்லாத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவை இருக்கிறது.

நியூக்ளியர் இன்ஜினீயரிங்

பாதிப்பு ஏற்படாமல் அணுசக்தியைக் கையாள முடியுமா?’ என்று உலகில் பல பரிசோதனைகள் நடக்கின்றன. அவை தொடர்பான படிப்பை மாணவர்களுக்கு அளிப்பதுதான் நியூக்ளியர் இன்ஜினீயரிங். இந்தப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் ஆங்கிலப் பாடத்தையும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இதில் மேற்படிப்பு படித்து ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்