ஆங்கிலம் அறிவோமே- 57: அக்கறையா, நிறுவனமா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

நடு விரலையும் ஆள்காட்டி விரலையும் குறுக்குவாட்டில் செலுத்த வைப்பது என்றால் “Keeping fingers crossed” என்று அர்த்தம். “My team is not favoured to win. But I hope to win. I better keep my fingers crossed” என்றால் அர்த்தம் புரிகிறதல்லவா? “நினைப்பது நடக்கும் என்பது நிச்சயம் அல்ல. ஆனாலும் அப்படி நடக்க கடவுளை வேண்டுகிறேன்”. இதுதான் அர்த்தம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு நிலவிய காலத்தில் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டு கொள்ளவும் இந்த விரல் வித்தை உதவியது. பொய் சொல்லும்போது குழந்தைகள் இப்படி விரல்களைக் குறுக்காக வைத்துக் கொள்ளும் போக்கும் இருந்தது.

அதாவது, சொல்வது பொய் என்றாலும் கடவுள் அவர்களைத் தண்டிக்க மாட்டாராம் ( இங்கு சிலர் ‘அ’ என்ற வார்த்தையை மனதுக்குள் சொல்லிக்கொண்டு ‘சத்தியமாக’ என்பதை மட்டும் வாய்விட்டு சொல்வதுபோல)

எது சரி?

ஒரு வாசகர் கீழ்க்கண்டவற்றில் எது சரி என்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

(A) TO WHOEVER IT MAY CONCERN

(B) TO WHOM IT MAY CONCERN

(C) TO WHOMEVER IT MAY CONCERN

(D) TO WHOMSOEVER IT MAY CONCERN

பெரும்பாலான கடிதங்களில், யாருக்கு அதை அனுப்புகிறோமோ அவரது பெயரும், முகவரியும் இருக்கும். ஆனால், சில சமயம் இன்னாருக்கு என்று குறிப்பிட முடியாத கடிதங்களும் தேவைப்படும்.

ஒரு சமூகசேவை நிறுவனம் பலரிடமிருந்து நன்கொடைகளைப் பெற விரும்புகிறது. குறிப்பிட்ட இன்னாருக்கு என்றில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வேண்டுகோள் உரியது என்ற வகையில் கடிதம் எழுதும்போது வாசகர் குறிப்பிட்ட தொடர்கள் இடம்பெறும்.

இன்னொரு உதாரணம். நீங்கள் ஒரு பத்திரிகையின் சார்பாக வெளிநாடு போகிறீர்கள். அங்கு யார் யாரைப் பார்க்கப்போகிறீர்கள் என்பது முடிவாகவில்லை. அப்போது அந்தப் பத்திரிகை உங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுகோள் வைக்கும் வகையிலும் ஒரு கடிதத்தை உங்களிடம் கொடுக்கலாம். இப்படிப்பட்ட கடிதங்களின் மேற்பகுதியில் வாசகர் சுட்டிக்காட்டியது போன்ற வார்த்தைகள் இடம் பெறும்.

TO WHOM IT MAY CONCERN என்பது சரியானது. TO WHOMSOEVER IT MAY CONCERN தவறில்லை. என்றாலும் ஏதோ ஒரு எள்ளல் தொனி இதில் தென்படுவதுபோல எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் CONCERN என்ற வார்த்தை குறித்து மேலும் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.

ஒன்றில் ஆர்வமோ முனைப்போ காட்டப்படுவதை concern என்ற வார்த்தை உணர்த்துகிறது. It is not necessary for me to concern myself with this point.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என்பதைக் குறிக்கவும் concern பயன்படுகிறது. My heartfelt thanks to all concerned.

Concerned என்பதற்கு (பதற்றத்துடன் கூடிய) அக்கறை என்றும் ஒரு பொருள் உண்டு. The doctor listened to her with concern.

ஒரு வணிக நிறுவனத்தையும் concern என்ற சொல் குறிக்கிறது. It is a profit earning concern. She switched over the concern to earn better salary.

PIECE PEACE - PEAS

Pea என்றால் பட்டாணி. எனினும் Peanut எனும்போது வேர்க்கடலையைக் குறிக்கிறார்கள். Working for peanuts என்று குறிப்பிடுகையில் peanuts என்பதை அற்பமான (சம்பளத்துக்கு) எனும் அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வட்டத்தின் நடுப்பகுதியிலிருந்து இரண்டு வெவ்வேறு கோடுகள் போட்டால் அந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவில் உள்ள பகுதி Pie. கேக்குகளின் இதுபோன்ற சிறு பகுதிகளையும் Pie என்பது வழக்கம்.

A piece of the action அல்லது a slice of the action என்றால் உற்சாகமளிக்கும் லாபகரமான ஒரு செயலில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்வது என்று அர்த்தம்.

Go to pieces என்றால் இடிந்து போய்விடுவது என்ற அர்த்தம் (சுக்குநூறாகிப் போவது!).

Pick up the pieces என்றால் தாறுமாறாக நடந்துவிட்ட ஒரு விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்வது.

இவையெல்லாம் pieces. ஆனால் peace என்பது சமாதானம். புறா மற்றும் ஆலிவ் இலை சம்பந்தப்பட்டது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்