நோபல் பரிசுகளை அள்ளிக்கொண்ட குடும்பம்

By நீதி

ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்- மார்ச் 17

விஞ்ஞானத்தின் காதலர்களுக்கு மேரி கியூரியை தெரியும். மேரி கியூரியைப் போலவே அவரது மகள் ஐரீன் ஜோலியட்-கியூரியும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது தெரியுமா?

விஞ்ஞானி மேரி கியூரி( 1867-1934) அவரது கணவர் கியூரியோடு (1859-1906) இணைந்து 1903- ல் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றார். அதன்பிறகு 1911-ல் அவர் வேதியியலில் சாதனை படைத்ததற்காக இரண்டாவது முறையாக நோபல் பரிசைப் பெற்றார்.

அவருக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார்.

இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர்களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற ஐரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார்.

முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம்பட்ட போர்வீரர்களைக் காப்பாற்றப் பயன்பட்டன.போர்முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன.

அவற்றில் கதிரியக்க ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர்.அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரிகியூரி இறந்தார். அம்மா இறந்ததற்கு அடுத்த வருடத்தில் ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியோடு இணைந்து 1935ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.

இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை இவர்களது குடும்பத்துக்குக் கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள்.

ஐரீன் அவரது அம்மாவைப்போலவே ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 58 வயதிலேயே மறைந்துபோனார்.

அவர் வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்