பலவிதமாக பயன்படும் பாதம்- ஆங்கிலம் அறிவோமே 47

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் ‘contemporary என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறார். சம காலத்தில் வாழ்ந்த அல்லது வாழ்கிற என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுவோம். ஜவஹர்லால் நேருவும் மகாத்மா காந்தியும் contemporaries. ஜவஹர்லால் நேருவும் ராகுல் காந்தியும் contemporaries அல்ல.

Contemporary என்பதற்கு நவீன, சமீபத்திய என்றும் அர்த்தம் உண்டு. This is a contemporary artwork.

ஆக contemporary என்பதற்கு இணையான வார்த்தைகளாக co-existent, modern, recent, concurrent ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பலவித பயன்பாடு

Foot என்றால் பாதம் மட்டுமல்ல. 12 அங்குலங்கள் மட்டுமல்ல. ஆங்கிலத்தில் பலவிதங்களில் பயன்படுகிறது இந்த வார்த்தை.

Put your foot down என்றால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது எனும்போது அதை நடக்கவிடாமல் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவது என்று பொருள். She wanted to marry Girish but her father put his foot down.

Getting caught on the wrong foot என்றால் எதிர்பாராமல் ஒன்று நடைபெறு வதால் ஏற்படும் வியப்பைக் குறிக்கிறது.

Get off on the wrong foot என்றால் ஒரு சூழலையோ, உறவையோ தவறாகத் தொடங்குவது என்ற அர்த்தம். Every evening I return home, we seem to get off on the wrong foot. We fight.

Put your best foot forward என்றால் கடும் உழைப்பை அளித்து வெற்றி பெற முயல்வதைக் குறிக்கிறது.

My foot என்பது திட்டு வார்த்தை. “நான் எது சொன்னாலும் நீங்க கேட்பீங்களே’’ என்று யாராவது கூறும்போது நீங்கள் “My foot’’ என்று கூறினால் “அதுக்கு வேற ஆளப் பாருங்க’’ என்று உஷ்ணமான அர்த்தம்.

CONJUNCTIONS

“Conjuctions-ஆல் என்ன பயன்?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். கூடவே அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு வாக்கியத்தையும் அளித்திருக்கிறார்.

“Murali took a bag. He went to bus stand.”இப்படி இரண்டு வாக்கியங்கள் அமைப்பதற்குப் பதிலாக Murali took a bag and went to bus stand என்பதில் என்ன பெரிய வசதி ? என்கிறார்.

NOUNகளைத் தவிர்ப்பதற்காக PRONOUN என்பது போல் இங்கு PRONOUN-ஐயும் தவிர்க்க CONJUNCTION உதவுகிறதே!

FANBOYS

முதலில் CONJUNCTION என்றால் என்ன என்று பார்ப்போம். CONJUNCTIONS என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் இதை விளங்கிக் கொள்வது மேலும் எளிதாக இருக்கும்.

AND, BUT, THAT, WHERE, NOR, BECAUSE போன்றவை CONJUNCTIONS.

முக்கியமான CONJUNCTIONS- ஐ நினைவுகொள்ள FANBOYS என்ற வார்த்தையை நினைவில் கொள்ளலாம்.

அதாவது for, and, nor, but, or, yet, so போன்ற CONJUNCTIONS-ன் முதல் எழுத்துகளை இணைத்தால் FANBOYS.

CONJUNCTIONS என்பவை வாக்கியங்களை இணைக்கும் வார்த்தைகள். சில சமயம் இரண்டு வார்த்தைகளை இணைப்பதாகவும் இருக்கும்.

வாசகர் குறிப்பிட்ட Murali took a bag and went to bus stand என்பதில் and எனும் CONJUNCTION இரண்டு வாக்கியங்களை இணைக்கிறது.

Rama and Lakshmana are brothers என்பதில் உள்ள and இரண்டு வார்த்தைகளை மட்டுமே இணைக்கிறது. Five and five make ten என்பதிலும்தான்.

சில conjunctions இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Either or. அதாவது இரண்டில் ஒன்று. Give me either coffee or tea. Anything is OK.

Neither nor அதாவது இரண்டுமே வேண்டாம். I want neither coffee nor tea. I don’t feel like having anything.

Both - and அதாவது இரண்டுமே. Give me both biscuits and fruits. I am very hungry.

Not only But also, அதுமட்டுமல்ல, இதுவும். I want my son to be not only educated but also disciplined.

Whether or அதுவோ, இதுவோ. I don’t care whether you are happy or not.

இப்படி ஜோடியாகப் பயன்படுத்தப்படும் conjunctionsஐ, correlatives என்பார்கள்.

HABIT - CUSTOM

Habit என்பது தனி நபர் தொடர்பானது. Custom என்பது சமூகம் அல்லது நாடு தொடர்பானது. எனவே Getting up at 6.00 a.m. is my custom என்று சொல்லக் கூடாது. அது Habit தான். Drinking coffee is an Indian custom என்று சொல்லலாம்.

Habit என்பது சமீபக் காலத்தில்கூட உருவாகியிருக்கலாம். ஆனால் Custom என்பது தொன்று தொட்டு வருவதாக இருக்க வேண்டும். நீதிபதிகள்கூடத் தீர்ப்பளிக்கும்போது சட்டத்தோடு Custom என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுண்டு.

It is customary என்றால் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்று என்று பொருள். Customer என்பதற்குக்கூட இந்த அடிப்படை உண்டு. Customer என்றால் வாடிக்கையாளர் அதாவது தொடர்ந்து நம்மிடம் தொடர்பு கொண்டிருப்பவர்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்