கொஞ்சம் குறுக்கெழுத்து: ஆங்கிலம் அறிவோமே- 50

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பவர்களுக்கு Anagram என்பதன் அர்த்தம் நன்றாகவே தெரியும்.

ராதா என்பதன் anagram தாரா. குடிமகன் என்பதன் anagram மடிகுகன். அதாவது முதல் வார்த்தையிலுள்ள எழுத்துகளே இடம் மாறி மற்றொரு வார்த்தையாக உருவாகின்றன. அதே சமயம் எந்த எழுத்தும் நீக்கப்படவில்லை. அதிகமாக எந்த எழுத்தும் சேர்க்கப்படவும் இல்லை. சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் உள்ள எழுத்துகளைச் சீரமைத்தும் anagram உருவாக்க முடியும்.

இப்போது கீழே உள்ளவற்றின் anagramகளைக் கண்டுபிடியுங்கள்.

1) OH, LET

2) RATS

3) PIT CURE

4) LOW LIP

5) TEA

வாசகர் ஒருவர் தனது சந்தேகப் பட்டியலையே அனுப்பியிருக்கிறார். ஆனால் இப்போது உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ளப் போவது அந்தப் பட்டியலைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள ஒரு வாக்கியம். அல்லது கேட்டிருக்கும் ஒரு கேள்வி.

“Can you please clarify my above doubts?” என்று தன் கடிதத்தை முடித்திருக்கிறார்.

Above என்ற வார்த்தை இங்கே தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது நண்பரே. Above என்பது (nounஐ விளக்க உதவும்) adjective அல்ல.

அப்படியானால் அந்த வாக்கியத்தை எப்படி எழுதலாம் என்று கேட்டால் இரண்டு options உண்டு.

(1) The doubts mentioned above என்று குறிப்பிடலாம். அல்லது

(2) The preceding doubts என்று குறிப்பிடலாம்.

Preceding என்றால் முன்பு குறிப்பிட்ட அல்லது முந்தைய என்று அர்த்தம். Preceding என்பதற்கு எதிர்ச்சொல் succeeding. Succeeding என்றால் பின்னால் வருகிற அல்லது தொடர்கிற என்று பொருள். இதன் அடிப்படையில்தான் successor எனப்படும் வார்த்தை வாரிசு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Presiding என்றால் தலைமை தாங்குகிற என்ற அர்த்தம். Please do not follow the instructions mentioned in my preceding letter. He is the presiding officer.

Proceed என்றால் தொடர்ந்து முன்னேறுவது என்று அர்த்தம். Please proceed with your journey.

சட்டபூர்வமான செயல்பாடு என்ற பொருளிலும் proceeding என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு.

Proceedings என்பவை ஒரு மாநாடு அல்லது நிகழ்ச்சியில் கூறப்பட்டவை அல்லது நடத்தப்பட்டவை. இவை குறித்த பதிவுகளையும் proceedings என்பதுண்டு.

இந்தப் பகுதியில் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகளின் anagrams இவைதான்.

1) HOTEL

2) STAR

3) PICTURE

4) PILLOW

5) EAT அல்லது ATE

சில anagramகள் மிகவும் வேடிக்கையாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வார்த்தையின் அ ர்த்தமே இன்னொன்று என்பதுபோல் இருக்கும்.

எடுத்துக்காட்டாக LIFE’S AIM என்பதன் anagram FAMILIES. SEA TERM என்பதன் anagram STEAMER.

இந்த வகையில் கிட்டத்தட்ட அதே அர்த்தம் வருவதுபோன்ற anagram வார்த்தைகளைக் கீழ்க்கண்டவற்றுக்குக் கண்டுபிடியுங்கள்.

1) A ROPE ENDS IT

2) OFTEN SHEDS TEARS

3) GOT A CLUE

4) MADE SURE

ஒவ்வொன்றிலும் நிறைய எழுத்துகள் இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருக்கும். உங்களுக்கு உதவ anagram விடைகளின் பொருளையும் கீழே கொடுத்து விடுகிறேன்.

1) பெரும் விரக்தி

2) மெல்லிய இதயம்

3) விளக்கக் கையேடுகள்

4) அளந்து பார்த்தாகி விட்டது

Ask - Tell

“I asked him to bring me a cup of tea” என்று படித்ததிலிருந்து என் மண்டையில் ஒரு குறுகுறுப்பு. கேள்வி கேட்கும்போதுதானே ask என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்?’’

இப்படி askக்கி இருக்கிறார் ஒரு நண்பர். Ask எனும்போது கேள்விகள் தொடர்வது உண்மைதான். ஆனால் ஒன்றை யோசித்துப் பார்க்கிறீர்களா? Ask என்பதிலேயே கேள்வி என்பது புதைந்திருந்தால் ask a question என்ற விவரிப்பே தேவையில்லையே. எனவே நடைமுறையில் ask, tell ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொண்டவையாகவே இருக்கின்றன.

இப்போது கீ ழே உள்ள இரண்டு வாக்கியங்களையும் படியுங்கள்.

1) I asked him to bring me a cup of tea.

2) I told him to bring me a cup of tea.

இரண்டும் ஒரே அர்த்தம் கொண்டவை. என்றாலும் பயன்படுத்தும்போது ஒரு வித்தியாசத்தை நினைவில் கொள்ளுங்கள். தேநீர் கொ ண்டு வா என்று யாரிடம் நீங்கள் உரிமையாகவோ, அதிகாரமாகவோ கேட்க முடியுமோ அப்போது பயன்படுத்த வேண்டியது இரண்டாவது வாக்கியத்தை. ஒரு வேண்டுதல் போலக் கேட்கும்போது நீங்கள் பயன்படுத்த வேண்டியது முதல் வாக்கியத்தை.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்