ARTIST - ARTISTE
மேலே இருப்பவர்கள் யார்? தெரியாதா என்கிறீர்களா?, முதலில் இருப்பது எம்.எஃப்.ஹுசேன், பிரபல ஓவியர். அடுத்து இருப்பவர் சின்னக்குயில் சித்ரா, மூன்றாவதாக இருப்பவர் நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆனால் கேள்வி இவர்கள் யார் என்பதில்லை. இவர்களில் யாரை “ஆர்டிஸ்ட்” எனக் குறிப்பிடலாம்? இதுதான் கேள்வி.
யோசிக்கிறீர்களா? ஒருவேளை உங்கள் பதில் எம்.எஃப்..ஹுசேனா? அவர் மட்டும்தான் ஆர்டிஸ்ட் என்கிறீர்களா? அப்படி யானால் உங்கள் பதில் தவறு. மீதி இரண்டுபேரும் ஆர்டிஸ்டுகள்தான்.
ஆம் ஓவியரை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் ஆர்டிஸ்ட் என்றுதான் ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம்.
அப்படியானால் பின்வருமாறு குறிப்பிடலாமா?
“M.F.Hussain, A.R.Rahman and Chitra are popular artists’’. இல்லை இது தப்பு. Hussain artist. மற்ற இருவரும் artistes (அதிகப்படியாக ஒரு “E’’ உட்கார்ந்திருப்பதைக் கவனித்தீர்களா?) அதாவது ஓவியரை artist என்று குறிப்பிடுகிறோம். ராஜா ரவிவர்மா, பிகாசோ, எம்.எப்.ஹுசேன் எல்லோரும் artists.
பாடகர், நடனக் கலைஞர் போன்ற performers-ஐ artistes என்று குறிப்பிடுவதுதான் வழக்கம்.
பிரெஞ்சு மொழியில் artist என்பதையே artiste என்றுதான் எழுதுவார்கள். அது வேறு விஷயம்.
சொல்லும்போதுகூட இந்த இரண்டு வார்த்தைகளையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உச்சரிக்க வேண்டும். artist என்பதை ar-tist இரண்டு பகுதிகளையும் சமமான அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும். artiste என்று சொல்லும்போது “Teast’’ என்ற இரண்டாம் பகுதியை அதிக அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி - artiste, வான்கோ artist.
சூர்யாவின் அப்பா சிவகுமார் எப்படி? “E’’ உள்ள ஆர்டிஸ்டா அல்லது “E’’ இல்லாத ஆர்டிஸ்டா? அவர் ஓவியர், நடிகர் ஆகிய இரணடும் என்பதால் இரண்டும்தான்.
இன்னொன்றையும் கூற வேண்டும். இப்போதெல்லாம் சிலர் நடைமுறையில் artiste என்று நான் சொன்னவகையைச் சேர்ந்தவர்களைக்கூட artist என்றே குறிப்பிடுகிறார்கள். Kerosene Oil என்று கூவி விற்றுக் கொண்டு போனால் புரியாது, கிருஷ்ணாயில் என்று சொன்னால்தான் சுலபமாகப் புரியுமல்லவா அந்த மாதிரி ஆகிவிட்டது.
ENQUIRY - INQUIRY
உங்கள் பெயர் என்ன?
உங்கள் ஊர் எது?
திருச்சிக்கு எப்படிப் போக வேண்டும்?
இந்த பஸ் எப்போது கிளம்பும்?
- மேலே உள்ள கேள்விகளை எப்படிக் குறிப்பிடலாம்? Enquiry என்றா? அல்லது Inquiry என்றா?
Enquiry என்றுதான். Enquiry என்றால் தகவலைக் கேட்பது.
அப்படியானால் மற்றொரு வார்த்தையான Inquiry என்பதற்கு என்ன பொருள்?
Inquiry என்றால் ஆழ்ந்த விசாரணை என்று பொருள்.
அதாவது Departmental Inquiry, Police Inquiry என்பது போல.
மனைவி கணவனிடம் இப்படிக் கேட்கிறாள்.
“என்னங்க, பைக்கிலே யாரோ ஒரு பெண்ணை இன்னிக்கு ஏத்திக்கிட்டு வந்தீங்களாமே, அவ யாரு?’’
கணவன் (கலக்கத்துடன் மனதிற்குள் யோசிக்கிறான்) “இது சாதாரண Enquiry -யா? அல்லது ஒரு Inquiry-யின் தொடக்கமா?’’
(இந்தப் பகுதியை எழுதும் ஜி.எஸ். சுப்ரமணியன் மனித வள ஆலோசகர்- எழுத்தாளர்-க்விஸ் மாஸ்டர். ஆங்கில மொழி குறித்த வகுப்புகளை நிறுவன ஊழியர்களுக்கு எடுத்து வருகிறார்.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago