சிலர் பாவம் நீட்டி, முழக்கித் தேவைக்கு அதிகமான வார்த்தைகளை மிகவும் அனாவசியமாகப் புகுத்தி வாக்கியங்களை முழ நீளமாக்கினால்தான் அது சிறந்த மொழி ஆளுமை என்று நினைத்து, சிந்தித்து, எண்ணிக் கொள்கிறார்கள். (மேற்படி வாக்கியத்திலேயே தேவையற்ற வார்த்தைகள் எத்தனை உண்டு என்பதைக் கணக்கிடுங்கள்!).
‘During the year of 2013’ என்பது எதற்கு? ‘During 2013’ போதுமே.
I am not attending the classes today for the reason that என்று தொடங்குவானேன்? For the reason that என்பதை because என்ற ஒரு வார்த்தையில் கூறிவிட முடியுமே. அதேபோல் ‘In view of the fact that’ என்பதற்கும் because என்ற ஒரே வார்த்தை மாற்றாக விளங்கும்.
‘In accordance with your request’ என்பதற்குப் பதிலாக ‘As requested by you’ போதும். இன்னும் சுருக்கமாக ‘As you requested’ என்பது மேலும் போதும்.
திருக்குறளுக்கு இருக்கும் மதிப்பே தனிதானே.
கீழே உள்ள வாக்கியங்களில் உள்ள வார்த்தைகளைக் குறையுங்கள் பார்க்கலாம்.
Inspite of the fact that vegetables cost very high today, I purchased cabbage for a price of Rs.20 per kilo.
இதில் inspite of the fact that என்பதை although என்ற ஒற்றை வார்த்தையிலும், for a price of என்பதை for என்ற ஒரு வார்த்தையிலும் அடக்க முடியுமே.
இப்படி மாற்றியமைக்கக் கூடிய வேறு சில எடுத்துக்காட்டுகள் இதோ.
In the City of Chennai. (In Chennai), In the event of (if), For the purpose of (for), consensus of opinion (consensus), during the time that (while)
சென்ற இதழில் Prounouns பற்றி எழுதியிருந்தது தொடர்பாக ஒரு நண்பர் எழுப்பிய சந்தேகம் இது.
“These apples are fresh என்கிற வாக்கியம் திடீரென்றுதானே ஆரம்பிக்கிறது. அப்படியும் these என்பது pronounஆ?’’.
அதாவது, ஏற்கனவே ஒரு noun குறிப்பிடப்பட்டிருந்து அதை மறுபடியும் குறிப்பிடும்போதுதானே pronoun பயன்படவேண்டும் என்பது அவர் கேள்வி.
These apples are fresh என்கிற வாக்கியத்தில் these என்பது pronoun-ஆகப் பயன்படுத்தப்படவில்லை. அது adjective-ஆகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (Nounஐ விளக்கும் வார்த்தைதான் adjective)
அதாவது these என்பது apples என்ற noun-ஐ (எந்த மாதிரி ஆப்பிள் என்று) விளக்குகிறது.
Apples have arrived. These are very fresh. இந்த வாக்கியங்களில் these என்பது ‘the apples’ என்பதற்கு மாற்றாக (விளக்க அல்ல) பயன்படுத்தப்படுவதால் அப்போது pronoun ஆகும்.
(Love is everywhere என்பதில் love என்ற வார்த்தை noun ஆகவும், I love you என்பதில் love என்ற வார்த்தை verbஆகவும் பயன்படுத்தப்படுகிறது இல்லையா? அதுபோலத்தான்).
இந்த இடத்தில் pronouns குறித்து வேறொன்றையும் குறிப்பிடுவது அவசியமாகிறது.
Pronouns மீண்டும் மீண்டும் noun-ஐப் பயன்படுத்தும் சலிப்பைப் போக்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் அதற்காகக் குழப்பத்தை அளிக்கிற விதத்தில் அவை இருந்துவிடக் கூடாது.
எடுத்துக்காட்டாகக் கீழே உள்ள வாக்கியத்தைப் படியுங்கள்.
Our department recommends Mr.Swamy’s article on banking, but it says that in it he makes it seem funnier than it is.
சில இடங்களில் pronoun-ஐ பயன்படுத்தாமல் இருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேற்படி வாக்கியத்தில் nouns குறைக்கப்பட்டு pronouns அதிகமாவது உண்மைதான். ஆனால் குழப்பம் அதிகமாகிறதே, அதைக் களைவதுதானே முக்கியம்?
Our department recommends Mr.Swamy’s article on banking but says that in the article he makes banking seem funnier than it is.
RIGOROUS VIGOROUS
Rigorous என்பதற்கு உடலையும் மனதையும் வருத்தக் கூடிய என்று அர்த்தம். Rigorous punishment என்றால் கடுங்காவல் தண்டனை என்பது தெரிந்திருக்கும்.
Rigorous என்றால் முழுமையான என்றும் அர்த்தம் உண்டு. Rigorous search.
ரொம்ப Strict ஆன என்கிற பொருள் rigorous என்பதில் மறைந்திருக்கிறது.
Vigorous என்றாலும் அது தீவிரமான என்கிற அர்த்தத்தைத் தருகிறது. என்றாலும் அதில் உறுதியான, சக்திமிக்க என்பது போன்ற ஆக்கபூர்வமான பொருள் மறைந்திருக்கிறது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago