எதிர்ப்புணர்வா,வெறுப்பா? - ஆங்கிலம் அறிவோமே 40

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஆங்கிலத்தில் A, an, the என்பவை articles என்று அழைக்கப்படுகின்றன. A என்றாலும், An என்றாலும் அவை ஒன்று என்பதைத்தான் குறிக்கின்றன. அப்படியென்றால் எதற்காக இரண்டு வார்த்தைகள்?

ஒரு noun A,E,I,O,U ஆகிய எழுத்துகளில் தொடங்கினால், அதற்குமுன் இடம் பெறும் article ‘an’ என்பதாக இருக்கும். பிற எழுத்துகளில் தொடங்கும் nouns-க்கு முன்னால் இடம்பெற வேண்டிய article ‘a’. இதனால்தான் A house, A butterfly, An umbrella, An ink pen.

பல பள்ளிகளில் முந்தைய பாராவில் உள்ளபடிதான் சொல்லித் தரப்படுகின்றன. ஆனால், இதில் ஒரு சின்ன மாற்றம் இருக்கிறது. A,E,I,O,U என்ற ‘எழுத்துகளில்’ தொடங்கும் வார்த்தைகள் என்பதற்குப் பதிலாக ‘அந்த ஐந்து எழுத்துகளில் தொடங்குவதுபோல் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் என்ப​தே உண்மை.

Europe என்ற வார்த்தை ‘e’ என்று தொடங்குகிறது. ஆனால் இதை உச்சரிக்கும்போது ‘இயூரோப்’ என்பதில்லை. ‘யூரோப்’ என்றுதான் சொல்கிறோம். அதாவது ‘Y’ என்ற எழுத்தில் அந்த வார்த்தை தொடங்குவதுபோலத்தான் உச்சரிக்கிறோம்.

எனவே, மேற்படி லாஜிக்கின்படி A European என்கிறோம். An European என்பது தவறு.

இதேபோல் one என்பதை உச்சரிக்கும் போது won என்பதுபோல்தான் உச்சரிக்கிறோம். எனவே, It is a one rupee note.

University என்பதை உச்சரிக்கையில் Yuniversity ஆகிறது. எனவே, There is a University in Chidambaram.

நம்மில் சிலர் Hour என்பதை ‘ஹவர்’ என்றும் Honest என்பதை ‘ஹானஸ்ட்’ என்றும் அழுத்தம்​ திருத்தமாகச் சொல்லிவிட்டு ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தையும் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், மேற்படி வார்த்தைகளை ‘அவர்’, ‘ஆனஸ்ட்’ என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது எழுதும்போது Hour, Honest என்றாலும், உச்சரிக்கும்போது Our, Aanestதான். எனவே, இந்த வார்த்தைகளுக்கு முன் ‘An’ என்ற article-ஐத்தான் பயன்படுத்த வேண்டும். He will be coming in an hour. I will call him in an hour. He is an honest person.

The என்பதை எப்போது பயன்படுத்தலாம், எப்போது பயன்படுத்தக் கூடாது என்பது ‘the most important matter’.

எனக்கு ஒரு பேனா வேண்டும். ரம்யா தன் பேனாவைத் தருகிறாள். அந்தப் பேனா நன்றாக எழுதுகிறது.

இந்த வாக்கியங்களை இப்படிக் கூறலாம். I need a pen. Ramya gives (அல்லது lends) her pen. The pen writes well.

இதில் முதல் வாக்கியத்தில் pen என்ற வார்த்தைக்கு முன்னால் ‘A” பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், எனக்குத் தேவை ஒரு பேனா. அது எந்தப் பேனாவாகவும் இருக்கலாம்.

ஆனால், மூன்றாவது வாக்கியத்தில் pen என்ற வார்த்தைக்கு முன்னால் ‘The’ என்ற article காணப்படுகிறது. காரணம் நன்றாக எழுதும் பேனா என்பது எந்த ஒரு பேனாவையும் குறித்து விடாது. ரம்யா எனக்குக் கொடுத்த பேனாவை மட்டுமே குறிக்கும்.

அதாவது ஏதோ ஒன்று என்றால் ‘a’ அல்லது ‘an’. குறிப்பிட்ட ஒன்று என்றால் ‘the’.

I wanted to buy a notebook. I bought it at a shop. The notebook is torn inside. So, I plan to go to the shop and return it. இந்த வாக்கியங்களில் a, the ஆகியவை எங்கே, எதனால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள்.

Proper nouns (Raman, Sumathi, Pakistan) இடம்பெறும்போது அவற்றுக்கு முன்னால் எந்த article-ம் இடம்பெறக் கூடாது.

Common nouns (Boy, man, girl) பரவலான அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் போது அவற்றுக்கு முன்னால் articles இடம்பெறுவது இல்லை. Men are supposed to be strong.

Abstract nouns-க்கு (தொட்டு உணர முடியாதவை – உணர்வு, தன்மை போன்றவை) முன்னால் articles வருவதில்லை. Beauty is skin deep. Honesty is the best policy.

மொழிகளுக்கு முன்னால் articles இடம்பெறக் கூடாது. Tamil is a very ancient language. English is a very popular language.

ஒன்றை மிகமிக உயர்வாகச் சொல்லப் பொதுவாக –est என்ற விகுதியைப் பயன்படுத்துவோம். Tallest, shortest, longest, highest, widest. சிலவற்றுக்கு அந்த adjectiveக்கு (adjective என்பது noun-ஐ விளக்கும் பகுதி) முன்னால் most என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம்.

Most beautiful, most handsome, most expensive, most viewed என்பதுபோல். இப்படி மிக உயர்வாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு முன்னால் the நிச்சயம் இடம்பெறும். This is the tallest building in Chennai. He is the cleverest student in this class. This is the most important lesson.

Articles தொடர்பான அத்தனை விஷயங்களையும் அலசி விட்டோமா என்ன? இல்லைதான். மீதியை வேறொரு பகுதியில் பார்க்கலாமே.

Adverse - Averse

Verse என்றால் வசனம் என்று பொருள். ஆனால், மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் verse என்பதிலிருந்து பிறந்தவை அல்ல. இரண்டுமே vert என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டவை. லத்தீன் மொழியில் vert என்றால் திரும்புதல் என்று பொருள்.

Adversus என்றால் அந்த மொழியில் வெறுத்தல் என்று பொருள். இதிலிருந்து வந்த ஆங்கில வார்த்தைதான் adverse.

​பொதுவாக adverse என்ற வார்த்தையை நாம் மக்களுக்குப் பயன்படுத்துவதில்லை (Adverse person என்​பதெல்லாம் புழக்கத்தில் இல்லை). உயிரற்ற பொருள்களுக்குத்தான், அவற்றைப் பயன்படுத்துகிறோம். Adverse wind என்றால் பாதிப்புகளை உண்டாக்கும்

காற்று என்று அர்த்தம். Adverse trends என்றால் பாதிப்புகளை உண்டாக்கும் தற்போதைய மாற்றங்கள் என்று பொருள்.

Aversus என்ற ​லத்தீன் வார்த்தைக்கு விலகுதல் என்று பொருள். இதிலிருந்து பிறந்த ஆங்கில வார்த்தை averse.

எதிர்ப்புணர்வு கொள்வது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்ச்சொல் willing என்றால், மேலும் தெளிவாக விளங்கும். He has an aversion to sweets என்றால், அவனுக்கு இனிப்புகள் என்றாலே பிடிக்காது என்ற அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்