அந்த நாள் ஞாபகம்: இந்தியாவில் இணைய சிக்கிமில் வாக்கெடுப்பு நடந்த நாள்

1975, ஏப்ரல் 14

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு நாடு இந்தியாவை விட்டு வெளியேறும்போது ஆங்கிலேயர்கள் சிக்கிம் என்ற தனி நாட்டையும் நமது பொறுப்பில் விட்டுச்சென்றார்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சிக்கிமுக்கு தனிச் சிறப்பு அந்தஸ்தை தந்து இந்தியாவோடு இணைக்க விரும்பினார். இந்தியாவோடு இணைவதற்கான ஒரு வாக்கெடுப்பை சிக்கிம் மக்களிடம் நேரு காலத்தில் நடத்த முடியவில்லை. காலப்போக்கில் நேருவும் மன்னரும் இறந்தனர். புதிய மன்னரும் இந்திரா காந்தியும் அதிகாரத்துக்கு வந்தனர்.

சிக்கிமில் 1953 முதல் 1973 வரை ஒரு சட்டசபை இயங்கியது. ஒரு பிரதமரும் இருந்தார். புதிய மன்னர் பால்டன் தொண்டப் நாம்கியாலுக்கும் சிக்கிம் பிரதமருக்கும் இடையே பிரச்சினை உருவாகியது. அதன் தொடர்ச்சியாக இந்திய சிக்கிம் உறவுகள் சிக்கல் அடைந்தன. வீட்டுச்சிறையில் மன்னர் வைக்கப்பட்டார். இதற்கு இடையே இந்தியாவோடு இணைவதற்கான ஒரு வாக்கெடுப்பு 1975ல் மக்களிடையே நடத்தப்பட்ட நாள் இன்று. 59 சதவீத மக்கள் கலந்து கொண்டனர். வாக்களித்தவர்களில் 97.5 சதவீதம் பேர் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்தனர்.

இந்தியாவின் 22 வது மாநிலமாக ஏப்ரல் 26ல் சிக்கிம் ஆனது.மன்னர் அமெரிக்காவுக்கு போக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் 1982ல் புற்று நோயால் இறந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE