ஒரே வார்த்தை பல அர்த்தங்களைத் தருவதுண்டு. Book எனும் வார்த்தையும் அவற்றில் ஒன்று. அதை புத்தகம் என்றும் Book me a ticket என்றும் சொல்லலாம். அதாவது கட்டணம் செலுத்தி அனுமதியை உறுதி செய்து கொள்ளலாம். கைது செய்வது என்ற அர்த்தத்தில்கூட இது பயன்படுத்தப்படுகிறது. He was booked for murder.
இப்படி ஒரே வார்த்தை பல்வேறு அர்த்தங்களைத் தருவது இயல்புதான். ஆனால் அந்த இரண்டு அர்த்தங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றால் அது பல சிக்கல்களைக் கொடுக்கும் இல்லையா?
எதிர் அர்த்தமும்
“அவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார்’’ என்று ஒருவரைப்பற்றிக் கூறினால் “நியாயம்தானே. மனைவியின் பெற்றோர் வீட்டுக்குப் போவதில் என்ன தப்பு இருக்கிறது” என்று நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். அல்லது “அடப்பாவி, என்ன தப்பு செய்தானோ!’’ என்று ஆதங்கப்படலாம்.
மாமியார் வீடு என்ற வார்த்தைகள் மரியாதை அளிக்கும் இடம், மரியாதையை நீக்கும் இடம் ஆகிய இரண்டையுமே குறிக்கிறது.
ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட நேரெதிர் பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டு. இவற்றை contronym என்பார்கள்.
Buckle என்றால் இணை என்றும் அர்த்தம் உண்டு. பிரிதல் அல்லது உருவிழத்தல் என்றும் அர்த்தம் உண்டு. Buckle the shoes. He buckled under pressure.
Custom என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றையும் குறிக்கும். ஸ்பெஷலான ஒன்றையும் குறிக்கும். This is an ancient custom. This is a customized shoe.
Dust என்பது தூசியைக் குறிக்கிறது. ஆனால் ஒருவரைப் பார்த்து “Dust’’ என்று வேலை ஏவினால் அந்த dust தூசியை நீக்குதலைக் குறிக்கிறது.
சாதகமும், பாதகமும்
First Degree என்றால் அது மிக லகுவானதா? அல்லது மிகக் கடுமையானதா? இரண்டும்தான்! First Degree murder என்றால் அது மிகக் கடுமையான விதத்தில் செய்யப்பட்ட கொலை. First Degree burns என்றால் அவை மேம்போக்கான தீக்காயங்கள். சிகிச்சையில் சரி செய்து விடலாம்.
Overlook என்றால் மேற்பார்வையிடுவது என்றும் அர்த்தம். மேற்பார்வையிடாமல் கவனிக்கத் தவறுவது என்றும் அர்த்தம்.
Fast என்றால் என்ன பொருள்? (விரதம் என்கிற அர்த்தத்தை விட்டுவிடவும்). வேகமாக என்பதுதானே அர்த்தம் என்கிறீர்களா? அப்படியானால் ‘Holding fast’ என்ற வார்த்தைகள் அசையாமல் இருப்பதையல்லவா குறிக்கிறது?
Off என்றால் என்ன பொருள் என்று கேட்டால் நீங்கள் Off ஆகிவிடமாட்டீர்கள். Deactivated என்பதுதான் இதற்கான அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ‘The alarm went off’ எனும்போது அந்த அலாரம் செயல்படுகிறது (Activate ஆகிறது) என்றுதான் அர்த்தம்.
Handicap என்பதை சாதகம், பாதகம் ஆகிய இரண்டையுமே குறிக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.
“அவர் வயதானவர் என்பதால் Handicap அளிக்கப்பட்டது’’ எனும்போது சமத்துவத்தை நிலைநாட்ட அவருக்குச் சாதகமான ஒரு விஷயம் செயல்படுத்தப்பட்டது என்று அர்த்தம். “தனது Handicap காரணமாகவே அவரால் வெற்றியடைய முடியவில்லை’’ எனும்போது Handicap என்பது ஒரு பாதகமாக விவரிக்கப்படுகிறது.
Quantum என்பதற்குப் பொருள் கணிசமாகப் பெரிய அளவில் இருப்பதுதான். ஆனால் அறிவியல் அறிஞர்களைக் கேட்டால் அது மிகமிகச் சிறிய பகுதியைக் குறிக்கும் ஒரு சொல் என்றும் சொல்வார்கள்.
Left என்றால் பாக்கி இருப்பதா அல்லது வெளியேறிவிட்டதா? அடுத்து வரும் வாக்கியத்தில் எந்த Left எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பாருங்கள். Pakistanis have left and Indians are left.
PSEUDO
வாசகர் ஒருவர் “Faux populi’’ என்று அவ்வப்போது நாளிதழ்களில் படிக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்?
அது “Vox populi”. இதன் பொருள் மக்களின் குரல் (voice of people).
“Vox pop” என்றால் சாதாரண மனிதன் (R.K.லக்ஷ்மணனின் கார்ட்டூன் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறதா?).நண்பர் faux என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
“Vox populiக்கு’’ மட்டுமே மிக மதிப்பளிப்பதாகப் பல அரசியல் வாதிகள் கூறுவதே ஒரு faux செயல்தான்.
Faux மற்றும் pseudo ஆகிய இரண்டு வார்த்கைளுக்குமே “பொய்யான’’ என்ற பொதுவான அர்த்தமும் உண்டு. Faux என்பது பிரெஞ்ச் வார்த்தை.
Faux pearls என்றால் செயற்கை முத்துகள். Faux concern என்றால் செயற்கை அக்கறை.
Pseudo என்றால் உண்மையற்ற என்று அர்த்தம்.
Pseudo என்பது கிரேக்க வார்த்தை. ஆங்கிலம் இதை அப்படியே எடுத்துக் கொண்டிருக்கிறது.
Pseudonym என்றால் புனை பெயர்.Pseudonym என்ற வார்த்தைக்கு நேர்மையற்ற என்ற அர்த்தமும் உண்டு. Bogus, insincere என்று சொல்லலாம். ஒருவர் அப்படியொன்றும் அறிவாளியாக இல்லாதபோதும்தான் ஒரு பெரும் அறிவாளி என்பதுபோல் எண்ணி நடந்துகொண்டால் அவரை pseudo intellectual என்பதுண்டு.
Bona fide Certificate என்று கேள்விப்பட்டிருப்போம். Bona fide என்பது pseudo அல்லது Faux ஆகியவற்றுக்கு எதிர் பொருளைத் தரக்கூடியது. Bona fide என்றால் நேர்மையான அல்லது நன்னம்பிக்கையில் என்று பொருள். In spite of her simplicity, it is clear that she is a bona fide expert in her field. The Judge assumed that he has acted bona fide.
பெற்றால்தான் பிள்ளையா - இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை “Should one be a biological Parent?” என்று சரியாகவே (அதாவது எனக்குத் தோன்றியபடியே!) மொழி பெயர்த்திருக்கிறார் ஒரு வாசகர். அதன் முழுஅர்த்தமும் வெளிப்பட வேண்டுமென்றால் “Should one be a biological parent to provide parental care?” எனலாம்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago