டவுன் சிண்ட்ரோமை ஜெயித்த செல்சியா!

By சுஜாதா

வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கிணைந்த இயக்கம் தேவைப்படும் ஒரு விளையாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் . அதில் செல்சியா வெர்னர். நான்கு முறை சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தேசியச் சாம்பியன் பட்டங்களை வென்றார். டவுன் சிண்ட்ரோம் என்ற மனவளர்ச்சிக் குறைபாட்டை மீறி அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கிறார் 22 வயது செல்சியா . அவர் பிறந்தபோதே டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருந்தார். மன வளர்ச்சி பாதிப்பு உள்ளவர்களுக்கு இருக்கும் முக அமைப்பு, வித்தியாசமான நடவடிக்கைகள் இருந்தும் அவரது பெற்றோர் நான்கு வயதில்தான் பாதிப்பைக் கண்டறிந்தனர். குழந்தையால் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

செல்சியாவின் அம்மாவும் அப்பாவும் நம்பிக்கை இழக்கவில்லை. எட்டு வயதில் செல்சியாவின் துறுதுறுப்பைக் கண்டு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். டான் பாம்போ என்ற பயிற்சியாளரிடம் செல்சியாவை அழைத்துச் சென்றனர். செல்சியா பற்றி அனைத்து விஷயங்களையும் கேட்டுக்கொண்டவர், பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார்.

முதல் மூன்று ஆண்டுகள் பயிற்சியாளர் பாம்போவுக்கும் செல்சியாவுக்கும் கடினமான காலகட்டங்கள். விஷயத்தைப் புரிய வைத்து, பயிற்சியளிப்பதற்குள் திணறிப் போனார் பாம்போ. ஆனாலும் செல்சியா மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. மற்றக் குழந்தைகளையும் செல்சியாவையும் ஒரேவிதத்தில் நடத்தினார்.

# மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செல்சியாவின் பெற்றோரும் பயிற்சியாளரும் எதிர்பார்த்த மேஜிக் நிகழ ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டைப் புரிந்துகொண்டார் செல்சியா. சிறப்பாகச் செய்தால்தான் தானும் மற்றவர்களைப் போலப் பதக்கம் வாங்க முடியும் என்று நினைத்த நொடியில், செல்சியாவின் கவனம் தீவிரமாகப் பயிற்சியில் திரும்பியது.

தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்தார். ஒரு கட்டத்தில் பாம்போவின் எதிர்பார்ப்பை விடப் பத்து மடங்கு திறமையைக் காட்ட ஆரம்பித்தார் செல்சியா.

# பயிற்சிக்கூடத்தில் எந்த நேரமும் புன்னகையோடும் சுறுசுறுப்போடும் இருந்த ஒரே குழந்தை செல்சியாதான். 11 வயதில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். முதல் மூன்று ஆண்டுகள் கலந்துகொண்ட எல்லாப் போட்டிகளிலும் செல்சியா கடைசி இடத்தைப் பெற்றார். இந்தத் தோல்விகளில் இருந்து செல்சியா துவண்டு விடவில்லை. தனக்கு இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, பயிற்சி செய்ய ஆரம்பித்தார்.

செல்சியாவின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் பலன் கிடைக்கத் தொடங்கியது. பதக்கங்களும் வந்து சேர்ந்தன. உள்ளூர்ப் போட்டிகளில் இருந்து தேசியப் போட்டிகள் வரை கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

சிறப்புக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்ந்து நான்கு முறை தேசியச் சாம்பியன் பட்டங்களை வென்றார் செல்சியா! டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் இதுவரை செல்சியா அளவுக்குச் சாதனை செய்ததில்லை.

# கடந்த 30 ஆண்டுகளில் 100 குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறேன். அதில் செல்சியா ஒருவர்தான் டவுன் சிண்ட்ரோமைக் கீழே தள்ளி, சாதனையின் உச்சத்தைத் தொட்டவர் என்கிறார் செல்சியாவின் மருத்துவர்.

# செல்சியாவின் மருத்துவத்துக்கும் பயிற்சிக்கும் போட்டி களில் பங்கேற்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்படுவதால், ஓர் அமைப்பை ஏற்படுத்தி நிதி திரட்டிச் சமாளிக்கிறார்கள்.

# ஓரளவு பிரபலமாக இருந்த செல்சியாவை, ‘ஐ ஆம் அன்புரோக்கன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

# ஜிம்னாஸ்டிக்ஸில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டும். வால்ட், பேலன்ஸ் பீம், ஃப்ளோர் எக்ஸர்சைஸ், பேக் ஃப்லிப்ஸ் என்று ஜிம்னாஸ்டிக்ஸில் உள்ள சகல விளையாட்டுகளையும் அநாயாசமாகச் செய்து அசத்துகிறார் செல்சியா.

# மனம் தளராத பெற்றோராலும் பொறுமையான பயிற்சியாளராலும் டவுன் சிண்ட்ரோம் செல்சியா சாதனையாளர் செல்சியாவாக மாறியிருக்கிறார்! ஆனாலும் செல்சியாவின் பெற்றோரும் பயிற்சியாளரும் ‘எங்கள் கடமையைத்தான் செய்தோம். சாதனை செல்சியாவுக்கு மட்டுமே உரியது’ என்கிறார்கள். பயிற்சியில் இருந்தாலும் பதக்கங்களை வென்றாலும் ஒரே மாதிரிப் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தி, அடுத்த இலக்கு நோக்கி செல்சியா பயணிக்கிறார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்