பழங்காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்துதான் காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர்கள் காலண்டரை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவநிலை மாற்றங்களை வைத்தும் சந்திர, சூரியனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.
‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் எனும் ஆங்கிலச் சொல். கலண்டே என்றால் கணக்குக் கூட்டுவது என்று பொருள். இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது கிரிகோரியன் காலண்டர், ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டர்தான் இந்த காலண்டருக்கு அடிப்படை. கி.மு.45 - ல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப்படி ஜூலியஸ் சீசர் இந்த காலண்டரை நடைமுறைப்படுத்தினார்.
எங்கே அந்தக் கால் நாள்?
சூரியனைப் பூமி முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு ஆகும் நாட்களின் அடிப்படையில்தான் ஆண்டு என்னும் கணக்கு தொடங்கியது. சூரியனை பூமி ஒரு முறை சுற்ற 365 நாட்களுடன் கூடுதலாகக் கால் நாளும் ஆகிறது. இந்தக் கால் நாளை ஆண்டுதோறும் சேர்ப்பதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளாக அது சேர்க்கப்பட்டது. லீப் ஆண்டுக்கு மட்டும் 366 நாட்கள் இருப்பது இதனால்தான். இதுவும் ஜூலியன் காலண்டர் தந்த கொடையே.
அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவர் 1582-ம் ஆண்டு, ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்தார். 13–ம் போப்பாண்டவராக இருந்த கிரிகோரியின் ஆணைப்படி இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டன். இதனால் இந்த காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்னும் பெயர் பெற்றது.
1582 அக்டோபர் முதல் சில ஐரோப்பிய நாடுகள் கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டுகளுக்குப் பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இது புழக்கத்துக்கு வந்தது. இந்த காலண்டரை 1923 பிப்ரவரி 15-ல் கிரீஸ் நாடு கடைசியாக அங்கீகரித்தது.
ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் ‘தொடக்கங்களின் கடவுளாக’க் கருதப்படுகிறார் ஜானஸ்லானுயாரியஸ். இந்தக் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரி. ‘சுத்தப்படுத்தல்’ எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி.
புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டதே இந்தப் பிப்ரவரி.மார்ச்: ரோமர்களின் போர்க் கடவுள் ‘மார்ஸி’. இதிலிருந்து உருவானதே மார்ச். கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றிணைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.
ஏப்ரல்: ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே தொடங்குகின்றன. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கின்றனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்துக்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’வின் பெயரே மே மாதத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாகப் புராதன ரோமர்கள் கருதிய ‘ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது.
ஜூலை: ரோம காலண்டரின் ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்ட மாதம் இது. இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என ரோமர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இந்த மாதத்துக்கு ஜூலை எனப் புதுப் பெயர் சூட்டப்பட்டது.
ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோம காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே தொடக்கக்கால ரோம காலண்டரில் இம்மாதத்தின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு. 8-ம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு’ எனப்பொருள் வரும் ‘செப்டம்’ என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்துக்கு வழங்கப்பட்டது. அதையொட்டிக் கிரிகோரிய காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.
நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.
டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் ‘டிசம்பர்’ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.
இந்த மாதங்களில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்களைக் குறிக்கும் பெயர்கள் பிறகு முறையே ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு ஆகிய மாதங்களைக் குறிப்பவையாக மாறியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அதற்குக் காரணம் இடையில் சேர்க்கப்பட்ட ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான்.
இந்த இரு மாதங்களின் சேர்ப்புக்குப் பிறகு ஏழு முதல் பத்து வரையிலான மாதங்களின் பெயர்கள் பின்னுக்குப் போய்விட்டன. ஒரு ஆண்டுக்குப் பத்து மாதங்கள் என்பது 12 ஆக மாறியது. அதுவே இன்றும் நீடிக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 mins ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago