காக்காவின் வாயில் வடை இருந்ததா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

வாசகி ஒருவர் ஆலோசனை ஒன்றைக் கேட்டிருக்கிறார். ‘’என் அலுவலகத்தில் வேலை செய்யும் வயதில் மூத்த ஒருவர் என்னிடம் மிகப் பாசமாகப் பழகுவார். அவரைப் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது “He is like my father” என்பேன். ஆனால் நான் சொல்ல வந்ததும், நான் வெளிப்படுத்தியதும் வேறாக இருப்பது போலப் படுகிறது. இந்த வாக்கியத்தை வேறு எப்படிச் சொல்லலாம்?’’ என்று கேட்டிருக்கிறார். புரிகிறது. ஒரு சிறிய மாறுதலைச் செய்தால் போதுமே! (கொஞ்சம் யோசியுங்கள். பின்னர் சொல்கிறேன்).

சவால்கள்

அது என்னவோ, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்கிறார்கள் - சிலர் அப்பாவித்தனத்துடன். சிலர் சவால் விடும் தொனியில்! ஒருவர் “உதவுங்கள். இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பைச் சொல்லி என் தோழியின் மூக்கை உடைக்க வேண்டும்” என்று கூடுதல் விருப்பத்தைக் கூறி என்னை வன்முறைக்கு உடந்தையாக்கப் பார்க்கிறார்.

“உன் அப்பாவுக்கு நீ எத்தனையாவது குழந்தை?’’ - இதுதான் அந்தச் சவால் வாக்கியம்.

எனக்கு ஒன்று புரியவில்லை. “In what rank have you born as a child to your father?’’, “You are of what order among your dad's children?” என்றெல்லாம் எதற்காக மொழிபெயர்த்து எதிராளியைக் குதற வேண்டும்?

“Are you the first child in your family?’’ என்பதுபோல் கேட்டால் போதாதா? வேண்டுமானால் first என்பதற்குப் பதிலாக only என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

ஓகே போதுமே!

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் (“Thanks’’ என்று யாராவது சொன்னால் நாம் பதிலுக்குச் சொல்லும்) No mention என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார்.

“குறிப்பிடாதீர்கள்’’ என்றா ‘பெயர்க்க’ முடியும்? “நவிலற்க” என்ற வார்த்தை பொருத்தமானதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போது எதிராளி நம்மை விசித்திரமாகப் பார்க்கமாட்டாரா? சொல்லப்போனால் ஆங்கிலத்திலேயேகூட மேற்படி சூழலில் “No mention’’ என்று கூறுவதற்குப் பதிலாக “It is OK’’ என்றோ, “Pleasure is mine’’ என்றோ சொல்வது அதிகப் பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது.

காக்காவின் வாய்

சரியான வார்த்தையைச் சரியான இடத்தில் பயன்படுத்துவதுதான் முறை.

பயிற்சிக்கு வந்த ஒருவரிடம் நமக்கு மிகவும் பழக்கமான ‘பாட்டி- காக்கா – நரி” கதையை ஆங்கிலத்தில் கூறச் சொன்னேன்.

அப்படிச் சொல்லும்போது “The crow had a vada in its mouth’’ என்றார் ஒருவர். தப்பு என்பது போன்ற என் முகக் குறிப்பைப் பார்த்துவிட்டு, அவசரமாக ‘’The crow had a vada on its mouth’’ என்று மாற்றிக்கொண்டார். மீண்டும் என் தலையை இடம்வலமாக அசைக்க, “The crow had a samosa on its mouth’’ என்றார்!

நான் விரும்பிய மாற்றம் வேறொரு noun தொடர்பானது. நமக்குதான் mouth. பறவைகளுக்கு இருப்பது வாய் அல்ல, அலகு. அதாவது beak.

இவ்வளவு கூறிய பிறகும் ‘’உன் அப்பாவுக்கு நீ எத்தனையாவது குழந்தை?’’ என்ற கேள்வியை மொழிபெயர்க்கக் கோரி கடிதம் அனுப்புபவர்கள் கூடவே ‘’மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சம் இல்லையோ?’’ என்ற பாடல் வரியின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைக் கூடவே அனுப்ப வேண்டுமென்பது நிபந்தனை!

de facto – de jure

De facto என்பதற்கும் De jure என்பதற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இரண்டுமே லத்தீன் மொழியிலிருந்து வந்தவை. De facto என்றால் ‘’நடைமுறையில் இப்படித்தான். ஆனால் சட்டப்படி அல்ல’’ என்று பொருள் கொள்ளலாம். De jure என்றால் சட்டத்தின்படி எனலாம். ஆக, ஒருவிதத்தில் இந்த இரண்டும் எதிரெதிர் பொருள்களைத் தரக்கூடியவை. சட்டம் சொல்வது de jure. நடைமுறையில் (வேறாக) நடப்பது de facto.

1950க்களில் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்து விட்டது. ஆக, de jure அடிப்படையில் நிறவெறி இல்லை. ஆனால் நிஜத்தில் ‘தனித்தனியான, ஆனால் சம வசதிகள் கொண்ட’ என்ற நடைமுறை வந்தது. அதாவது பேருந்துகளில் கறுப்பர்கள் பின்னால் ஏறுவது, கறுப்பர்களுக்கென்று சம வசதிகள் கொண்ட தனிப் பள்ளிகள் என்றாயின (அதாவது de facto அடிப்படையில் நிறவெறி மாறிவிடவில்லை).

கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கு சோனியா காந்தி de facto தலைவர் என்றும் மன்மோகன் சிங் de jure தலைவர் என்றும் பலர் கருதினார்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் de facto தலைவராக ராணுவத் தலைவரும், de jure தலைவராக பிரதமர் இருப்பதும் அடிக்கடி நடப்பதுதான். தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட வாசகிக்கான என் ஆலோசனை இதுதான். “He is like a father to me” எனலாம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்