மீட்கப்படும் மனிதம்

By பிரம்மி

அடிமைத்தனத்துக்கு எதிரான நாள் - டிசம்பர் 2

சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிப்பவர்களுக்கு அடிமைத்தனத்தை கற்பனை செய்து பார்ப்பதும் கடினமானது. மனதில் நினைப்பதை வெளியிடும் உரிமைகூட இல்லாமலும் , குறுகலான இடத்தில் அடைக்கப்பட்டும், நினைத்த இடத்துக்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்ட நிலையிலும் கோடிக்கணக்கான மனிதர்கள் இன்னமும் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களின் மனிதத் தன்மை மதிக்கப்பட வேண்டும். அவர்களும் மற்ற மனிதர்கள் போல வாழ வேண்டும் என்பதற்கான இயக்கம்தான் எவ்வளவு சிறப்பானது!

அடிமைகளாய்..

அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள மனிதர்களில் பலல் கடத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்கள் கட்டாய உழைப்பு,பாலியல் தொழில், ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகள் குழந்தைகளுக்கும் நடக்கின்றன. கட்டாயத் திருமணம், ஆயுத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆகியவையும் அடிமைத்தனத்தின் வடிவங்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொடுமைகளை ஒழிப்பதில் உலகமக்களின் கவனத்தை இழுப்பதற்காக ஒரு சர்வதேச தினத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 1949 ஆம் ஆண்டில் தீர்மானம் (எண்-317 (IV)) இயற்றியது.

அடிமைத்தனம் ஒழிப்பு

இன்றைய உலகில் இரண்டு கோடியே 10 லட்சம் பேர்கள் இத்தகைய அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இந்தியாவிலும் இத்தகைய அடிமைத்தனத்தில் இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. ஐநாவின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் கழகம் “அடிமைத்தனத்தை இப்போதே ஒழிப்போம்” என்ற முழக்கத்தோடு ஒரு பிரச்சார இயக்கத்தை உலக அளவில் நடத்தி வருகிறது.

மனிதரை மனிதர் விலை பேசி விற்பனை செய்த வியாபாரமுறை ஒழிக்கப்பட்ட 200 வது வருடமாக கடந்த 2007 ஆம் ஆண்டை ஐநா சபை கொண்டாடியது. அடிமை முறையால் பாதிக்கப்பட்டோர்களின் நினைவு ஆண்டாக 2008 ஆம் ஆண்டை கடைபிடித்தது. இந்த ஆண்டிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்