கைக்குள் அடங்கிய ஆயிரம் கிலோ

By த.நீதிராஜன்

டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 1947 டிசம்பர் 23

முப்பது வருடங்களுக்கு முன்பு கூட வால்வு ரேடியோக்களை மக்கள் பயன்படுத்தினார்கள். வானத்தில் மிதக்கும் ரேடியோ அலைகளை ஒரு பல்பு மாதிரி இருக்கும் வால்வு உள்வாங்கும். ரேடியோ அலைகளை பாடல்களாக,இசையாக, பேச்சாக மாற்றி ஒலிபரப்பும். அந்தத் தொழில்நுட்பத்தில் தயாரான ரேடியோக்கள் அளவில் பெரியதாக, கனமானதாக, ஒரு ஆளால் தூக்க முடியாமல் இருக்கும்.

டிரான்சிஸ்டர் புரட்சி

அந்தப் பழைய தொழில்நுட்பத்தை காலாவதி ஆக்கிய புது தொழில்நுட்பம்தான் டிரான்சிஸ்டர்.அரைச் சாண் உயரமுள்ள வால்வு செய்யக்கூடிய வேலையைவிட அதிகமான வேலையை சின்னஞ்சிறிய டிரான்சிஸ்டர் எனும் கருவி செய்தது. அதன் மூலம் தயாரானதை டிரான்சிஸ்டர் ரேடியோ என கையில் தூக்கிக்கொண்டு கவுரவமாக முன்பு நடப்பார்கள்.பொதுவாக ஒரு டிரான்சிஸ்டர் தனது வழியாக செல்லும் ரேடியோ அலைகள் அல்லது மின்சாரத்தை பல மடங்கு பெருக்கும். அதில் பலவகை உண்டு.

டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் எலக்ட்ரானிக் துறையே தலைகீழாக மாறியது. அதை இதே நாளில் அமெரிக்காவில் இருந்த பெல் லேபரட்டரியின் ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், வில்லியம் பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோர் 1947-ல் கண்டுபிடித்தனர். அதற்காக 1956-ல் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரேடியா மட்டும் அல்ல. முதல் கணினி யும் வால்வுகளால்தான் செய்யப்பட்டது. அந்த முதல் கணினியில் 18 ஆயிரம் வால்வுகள் இருந்தன. 36 ஆயிரம் கிலோ எடையில் ஒரு வீடு அளவுக்குப் பெரியதாக அது இருந்தது. அதை விடப் பல மடங்கு பெரிய இன்றைய கணினிகள்தான் இன்று உங்கள் கைக்கு அடக்கமாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள். அவை உங்கள் கைக்குள் அடங்கியதற்கு டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதே காரணம்.

ஐ.சி.யும் புரொசஸரும்

பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்களை உள்ளடக்கி ஐ.சி. எனப்படும் இண்டக்ரட் சர்க்யூட் அடுத்த கட்ட வளர்ச்சியாக பிறந்தது. அதை விட மேம்பட்டவைகளாக இன்றைய புராசஸ்ஸர்கள் வந்து விட்டன.

கணினியில் சி.பி. யூ. என அழைக்கப்படுகிற பெட்டிக்குள்ளே சுகமாக ஒரு மின்விசிறியை தன்மேல் வைத்துக்கொண்டு ஒரு சுகவாசி இருப்பார். அவர்தான் புராசஸ்ஸர். இன்றைய நவீன எலக்ட்ரானிக் கருவிகள் பலவற்றில் பிராசஸ்ஸர்கள் உள்ளன, நவீன செல்போன்களில் உள்ள ஒரு புராசஸ்ஸருக்கு உள்ளே கூட சுமார் 300 கோடி டிரான்சிஸ்டர்கள் உள்ளன. கவனமாய் இருங்கள். பல்லாயிரம் கிலோ எடையில் முன்பு இருந்த பொருள்களை பாக்கெட்டில் வைத்திருக்கிறீர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்