ஆங்கிலம் அறிவோமே 271 : அதிகப்படியா பேசுறியே!

கேட்டாரே ஒரு கேள்வி

“Envy, jealously இரண்டும் பொறாமையைத்தானே குறிக்கும்?”

வாசகரே, இரண்டுமே பொறாமையைக் குறித்தாலும் ஒரு நுட்பமான வேறுபாடு இந்த இரண்டு சொற்களுக்கிடையே உள்ளது. குறிப்பாக உளவியலாளர் கோணத்தில்.

ஒரு பொருளை வாங்கும் நிதிநிலைமையில் நீங்கள் இல்லை என்று வைத்துக்கொள்வோம். பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருக்கும் அந்தப் பொருளைப் பார்க்கும்போது உங்களுக்கு அவர் மீது envy உண்டாகலாம். இதில் அவர் மீது கெட்ட எண்ணம் என்பதைவிட அந்தப் பொருள் மீது உங்களுக்கு ஏற்படும் பேரார்வம்தான் முக்கியமானது. ஆக, Envy என்பது ஒன்று இல்லாததால் உண்டாவது. ஆனால், Jealousy என்பதோ இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற மனநிலையால் உண்டாவது.

English குறித்து இரு வாசகர்கள் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்கள்.

“English என்பது ஒரு மொழி, ஆங்கிலேயர் ஆகிய இரண்டையும் குறிக்கிறதா?”

English என்பது ஆங்கில மொழி. We learn English. Do you know English?

ஆங்கிலேயரைக் குறிக்க அதற்கு முன்னால் ‘the’ என்று சேர்க்க வேண்டும். The English.

அடுத்த கேள்வி. “English என்பதை ஆங்கிலேயர்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் ஆங்கிலேயர்களை பிரிட்டிஷ் என்றும் அழைக்கிறார்கள். இந்த விதத்தில் பிரிட்டிஷ்காரரும் ஆங்கிலேயரும் ஒருவர்தானே?”

நண்பரே, இதற்கு ஆங்கிலக் கோணத்தில் விடையளிப்பதைவிட நிலவியல் கோணத்தில் பதிலளித்தால்தான் விளங்கும்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களை English people (அதாவது the English) என்போம்.

ஆனால், இங்கிலாந்தும் பிரிட்டனும் ஒன்று அல்ல. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்த முடியாது. பிரிட்டனின் ஒரு பகுதி இங்கிலாந்து. அதாவது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய மூன்று பகுதிகளும் சேர்த்து பிரிட்டன் அல்லது கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்படுகின்றன.

எனவே, இந்த மூன்று பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பிரிட்டிஷ்காரர்கள்தாம். ஆக இங்கிலீஷ்காரர், பிரிட்டிஷ் குடிமகன்தான். ஆனால், ஒரு பிரிட்டிஷ்காரர் ஆங்கிலேயராக இருக்க வேண்டிய அவசியமில்லை. (கூடுதல் தகவல் - United Kingdom என்பது பிரிட்டனோடு வட அயர்லாந்தையும் உள்ளடக்கியது).

“Kurta என்பது புரிகிறது. Kurti என்கிறார்கள் அது என்ன? இரண்டும் ஒன்றுதானா?”

Kurta என்பது நீளமாக இருக்கும். கிட்டத்தட்ட முழங்கால் மூட்டைத் தொடும். Kurti என்பது உயரக் குறைவானது. இடுப்போடு நின்றுவிடும். பொதுவாக Kurta என்பதை ஆண்களும், Kurti என்பதைப் பெண்களும் அணிகிறார்கள்.

Verbose என்றால் என்னவென்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துவதைத்தான் verbose என்பார்கள். இது லத்தீன் மொழியில் உள்ள சொல்லான verbum என்ற சொல்லிலிருந்து வந்தது. Verbum என்றால் சொல் என்று பொருள்.

Cloth என்பதற்கும், clothe என்பதற்கும் என்ன வேறுபாடு?

Cloth என்பது துணி. கடைக்குச் சென்று உருளையாக, பண்டலாக உள்ளதிலிருந்து உங்கள் சட்டைக்கு இரண்டு மீட்டர் துணியை வாங்கித் தைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்குவது cloth.

Clothe என்பது பேண்ட், சட்டை, ஸ்கர்ட் என்று தைக்கப்பட்ட உடை.

Cloth என்பதை ‘க்ளாத்’ என்றும், Clothe என்பதை ‘க்ளோத்’ என்றும் உச்சரிக்க வேண்டும்.

போட்டியில் கேட்டுவிட்டால்

____________ purchased ____________ from the neighbouring shop.

இந்த இரண்டு இடங்களிலும் முறையே எந்தச் சொற்கள் இடம்பெற வேண்டும்?

(a) Sundar, furnitures

(b) Sundar, TV

(c) Sundar, furniture

(d) Sundar, TVs

T.V. அல்லது T.V.s-ஐ வாங்க முடியாது. TV sets-ஐ வாங்க முடியும்.

Furnitures என்பது தவறு. பன்மையிலும் furniture-தான். எனவே, Sundar purchased furniture from the neighbouring shop என்பதே சரி.

சிப்ஸ்

# ‘Out of bounds’ என்றால்?

எல்லைக்கு வெளியே என்று பொருள். Bounds என்பது boundaries என்பதன் சுருக்கம். The ball went out of bounds.

# Groceries என்றால்?

பலசரக்கு. Grocery Shop என்றால் மளிகைக்கடை.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்