கேட்டாரே ஒரு கேள்வி
நாம் sun, moon, earth போன்ற சொற்களின் முதல் எழுத்தை capital-ல் எழுதுவதில்லை. ஆனால், கிரகங்களின் பெயர்களை எழுதும்போது அவற்றின் தொடக்க எழுத்தை Jupiter, Saturn என capital எழுத்தில் தொடங்குகிறோம். ஏன்?
************************
Procrastination என்றால் என்ன?
Postponement. அதாவது தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கும் சுபாவம் என்று சொல்லலாம்.
Procrastination is the thief of time என்று ஒரு பழமொழி உண்டு. இதற்குப் பொருள் ஒன்றைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தால் வருங்காலத்தில் அதைச் செய்வதற்கான காலகட்டம் மேலும் அதிகமாகிவிடும்.
************************
கேட்டாரே ஒரு கேள்வி வாசகருக்கான பதில் இது.
கோள்களின் பெயர்கள் ரோமானியக் கடவுளர்களின் பெயர்களில் உள்ளன. தனி நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது (Personal nouns) Capital letter-ஐப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படைதான் இதற்குக் காரணம். (Earth என்பது கடவுளின் பெயர் அல்ல. எனவே, கோளாக இருந்தாலும் earthதான், Earth அல்ல).
நீங்கள் இன்னொன்றையும் கவனித்தீர்களா?
Sun, moon, earth ஆகியவற்றுக்கு முன்னால் the என்பது பயன்படுத்தப்படும். ஆனால், கோள்களின் பெயர்களுக்கு முன்னால் the என்பது பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கும் அதே அடிப்படைக் காரணம்தான். Personal nouns-க்கு முன்னால் the பயன்படுத்துவதில்லை.
************************
Offspring என்பது குழந்தையைக் குறிக்கிறதா குழந்தைகளைக் குறிக்கிறதா?
இரண்டையும்தான். பொதுவாக எந்த விலங்கின் குட்டி அல்லது குட்டிகள் என்றாலும் offspring-ஐக் குறிக்கும். The offspring of animals were kept in a separate enclosure.
ஒருமை, பன்மை இரண்டுமே offspring என்பதால் offsprings என்று குறிப்பிடுவதில்லை.
என்றாலும் வழக்கத்தில் மனிதர்களின் குழந்தைகளை offspring என்று கொஞ்சம் கிண்டலான நோக்கத்தில்தான் குறிப்பிடுகிறார்கள். Her sister came over here with all her offspring. எனவே, மனிதர்களைப் பொறுத்தவரை child அல்லது children என்ற வார்த்தையையே பயன்படுத்துங்கள்.
************************
காக்காய் பிடிப்பதை ஆங்கிலத்தில் crowcatch என்கிறார்களே. அப்படி ஒரு வார்த்தை உண்டா?
இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் kowtow என்று ஒரு வார்த்தை உண்டு. இதற்கு அர்த்தம் ‘ஏதோ லாபமடைவதற்காக மிகப் பணிவாக நடந்துகொள்வது. சீன மொழியிலிருந்து இந்த வார்த்தை உருவானதாக நம்பப்படுகிறது. Ke என்றால் தட்டுவது என்றும், tow என்றால் தலை என்றும் அர்த்தம். அதாவது தலை அளவுக்கு அதிகமாகக் குனிவது (தரையைத் தட்டுமளவுக்கு?).
************************
“பிரேமா, கமலா ஆகியோரின் தாய் நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்பதை எப்படிக் குறிப்பிடுவது? Prema’s and Kamala’s mother is ill என்று குறிப்பிட வேண்டுமா? அல்லது The mother of Prema and Kamala is ill என்று குறிப்பிடலாமா?”
உயிருள்ள ஒருவருடையது என்றால் ’s போட்டுக் குறிப்பிடுவோம். Rama’s sons, David’s chair.
உயிரற்ற பொருளுக்குரிய என்றால் ’s பயன்படுத்துவதில்லை. Legs of table என்றுதான் குறிப்பிடுவோம். Table’s legs அல்ல.
எனவே mother of Prema and Kamala என்று குறிப்பிடக் கூடாது. அதே சமயம் Prema’s and Kamala’s mother என்பதும் கூடாது. இருவருக்கான possessive noun என்றால் இறுதியாக இடம் பெறுபவரின் பெயருக்குப் பிறகு ‘s குறிப்பிட்டால் போதுமானது.
Prema and Kamala’s mother is ill என்பதே சரி.
************************
Detract – Distract
Detract என்றால் ஒன்றின் மதிப்பை அல்லது சிறப்பைக் குறைத்துவிடுதல். ஒரு திரைப்படம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், அதன் நீளம் குறைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று கருதினால் The length of the film detracts from its merit எனலாம். His haircut detracts from his smart appearance என்றால், அவன் நன்கு தோற்றமளிக்கக் கூடியவன். ஆனால், அவன் சிகை அலங்காரம்தான் தாறுமாறாக இருக்கிறது என்று பொருள். All that make-up she wears actually detracts from her beauty. Detract வரும்போதெல்லாம் from என்ற சொல் தொடர்வதைக் கவனித்தீர்களா?
Distract என்றால் கவனத்தைச் சிதறடிப்பது. While attending the class, he was distracted by the voice from outside.
************************
போட்டியில் கேட்டுவிட்டால்?
Someone ________ my house and stole my TV. set
a) Entered
b) Stopped by
c) Entered into
d) Broke into
e ) Come up with
யாரோ ஒருவன் என் வீட்டுக்குள் நுழைந்து என் டி.வி.செட்டைத் திருடிச் சென்று விட்டான் என்பதைத்தான் வாக்கியம் உணர்த்துகிறது.
ஓரிடத்துக்குச் செல்லும்போது வழியில் வேறொரு வீட்டில் நுழைந்தால் அதை stopped by என்பதன் மூலம் குறிப்பிடலாம்.
Entered, entered into, come up with ஆகியவை மென்மையான பயன்பாடுகளாக உள்ளன. தவிர come up with an idea என்பதுபோல்தான் குறிப்பிடுவார்கள்.
Broke into என்றால் ஏதோ ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டுதான் நுழைந்திருக்க வேண்டும் என்பதல்ல. அத்துமீறி நுழைவதையும் இந்த சொற்களால் குறிப்பிடுவதுண்டு. எனவே Someone broke into my house and stole my T.V. set என்பதே சரியானது.
சிப்ஸ்
Pouncing என்றால் என்ன?
தாக்கும் நோக்கத்தில் திடீரெனப் பாய்வது.
Receipient என்றால் பெறுநர் என்றுதானே பொருள்?
அப்படித்தான். ஆனால் கேள்வியில் எழுத்துப் பிழை உள்ளது. Receipt என்போம். ஆனால் recipient-தான். (ஒரு ‘e’ பறந்துவிட்டதைக் கவனியுங்கள்).
Monument என்பதற்கும் building என்பதற்கும் என்ன வேறுபாடு?
Monument என்பது ஒருவரின் அல்லது ஒரு நிகழ்வின் நினைவாக எழுப்பப்படுவது. வெறும் கட்டிடத்தைக் குறிக்கும் சொல் building.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago