ஜூ
னியர் டென்னிஸ் வீரராக, 1998-ல் விளையாட்டுத் துறைக்கு அறிமுகமானார் ஃபெடரர். அவரின் தொடக்க காலத்தில், அதிகம் கோபப்படுபவராக அறியப்பட்டார். போட்டிகளில் தோல்வியடைந்தால் மைதானத்திலேயே தன்னுடைய டென்னிஸ் ராக்கெட்டை உடைப்பவராகவும், விளையாடும்போது ‘ஆ.. ஊ..’ என்று கத்திக்கொண்டு ஆக்ரோஷம் கொண்டவராகவும் இருந்தார்.
கோபம் தணிந்தது!
ரோஜரின் திறமை மீது நம்பிக்கை கொண்ட பலரும், “ஃபெடரருக்கு இந்தக் கோபம் ஆகாது. தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், ஃபெடரர் கேட்பதாக இல்லை.
இந்நிலையில், சிறுவயது முதல் அவருக்குப் பயிற்சியளித்து வந்த பீட்டர் கார்ட்டர் என்பவர், எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தார். அதுவரை, ஃபெடரர் எந்த ஒரு இரங்கல் நிகழ்வுக்கும் சென்றதில்லை. அவர் கலந்துகொண்ட முதல் இரங்கல் நிகழ்வு, பீட்டர் கார்ட்டருடையது.
அவரின் மரணம், ஃபெடரரை ஆழமாகத் தாக்கியது. ஃபெடரரின் போக்கில் விளையாட விட்ட கார்ட்டர், ஒருபோதும் ஃபெடரரின் கோப குணத்துக்காகக் கடிந்துகொண்டதில்லை. எனவே, கார்ட்டரின் இறப்பு, ஃபெடரரின் நடத்தையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாளடைவில் கோபத்தைக் குறைத்துக் கொண்டார்.
வெற்றியோ தோல்வியோ மைதானத்தில் தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல், அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டார். இன்றைய அவரின் பக்குவப்பட்ட ஆட்டத்துக்கு இதுதான் காரணம் என்கிறது ‘ஃபெடகிராஃபிகா’!
கிராஃபிக் பயோகிராஃபி
டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலம் இருக்கும். அந்தக் காலத்தில் மட்டுமே அவர் போற்றப்படுவார். சிலர் மட்டுமே எக்காலத்துக்கும் போற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். ரோஜர் ஃபெடரர், இனி வரும் எல்லாக் காலத்துக்குமான நாயகனாக இருப்பார்.
டென்னிஸ் வரலாற்றில் அதிக அளவு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற ஆடவர், அதிகமாகச் சம்பாதிக்கும் வீரர், தரவரிசைப் பட்டியலில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர், அதிக அளவு விம்பிள்டன் பட்டங்களை வென்றவர், தொடர்ச்சியாக ஐந்து முறை யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என ஃபெடரரின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
2jpgஅத்தகைய பெருமைகளுக்குரிய ஃபெடரரைப் பற்றி, அவரின் வாழ்க்கை பற்றி ஒன்றிரண்டு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது ‘ஃபெடகிராஃபிகா’ எனும் புத்தகம்.
பிரபல டென்னிஸ் எழுத்தாளர் மார்க் ஹாட்கின்ஸன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில், ரோஜர் ஃபெடரரின் வாழ்க்கை, அவரின் சாதனைகளின் வழியாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சாதனைகள், புள்ளிவிவரங்கள், வரைபடங்கள் ஆகியவற்றின் மூலம் ‘இன்ஃபோ கிராஃபிக்ஸ்’ ஆகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதனால், இந்தப் புத்தகம், ஃபெடரரைப் பற்றிய ‘கிராஃபிக் பயோகிராஃபி’யாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்று, ஃபெடரர் தனது 36-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.
அவரின் பிறந்தநாளில், இந்தப் புத்தகம் பற்றி நாம் அறிந்துகொள்வது, ஃபெடரரை அறிந்துகொள்வதாகும்!
கோப்பைகள்
ஆஸ்திரேலிய ஓபன்: 5
பிரெஞ்சு ஓபன்: 1
விம்பிள்டன்: 8
அமெரிக்க ஓபன்: 5
ஒலிம்பிக் (இரட்டையர் பிரிவு): தங்கம் (2008)
ஒலிம்பிக் (ஒற்றையர் பிரிவு) : வெள்ளி (2012)
# ஏ.டி.பி. தரவரிசையில் முதலிடம்: 302 வாரங்கள் (அதில் 237 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்தார்)
# மொத்த ‘ஏஸ்’கள்: 10,004
மைதான வகை வெற்றிகள்
கடினத் தரை - 621 வெற்றிகள்
களிமண் தரை - 198 வெற்றிகள்
புல் தரை - 131 வெற்றிகள்
கார்பெட் தரை - 50 வெற்றிகள்
ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளையின் கீழ் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை:
சாம்பியா – 70 ஆயிரம்
ஜிம்பாவே – 70 ஆயிரம்
மலாவி – 37 ஆயிரம்
தென்னாப்பிரிக்கா – 35 ஆயிரம்
போட்ஸ்வானா – 1,800
நமீபியா – 1,000
சுவிட்சர்லாந்து - 350
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago