துறை அறிமுகம்: நிலையான வேலை தரும் பொறியியல்!

By முகமது ஹுசைன்

இயந்திரவியல் பொறியியல் பிரிவு கடல் போன்றது. கடலை நம்பியவர்கள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். அதுபோல இயந்திரவியல் பொறியியல் படித்தவர்களது வேலைவாய்ப்பும் பிரகாசமானது. வேலையின்மை என்பதன் சாத்தியம் இத்துறையில் மிகவும் குறைவு. அதிலும், நிலையான கலன்களின் வடிவமைப்புப் பொறியியல் (Static Equipment Design and Engineering) படித்தவர்களுக்கு உலகெங்கிலும் நல்ல தேவை உள்ளது.

கலன் இல்லாத ஆலை இல்லை

நிலையான கலன் (Static Equipment) என்பது அதன் பெயர் சுட்டிக்காட்டுவதுபோலவே இயக்கமற்று நிலையாகவே இருக்கும். பம்புகள், கம்பரசர்கள் போல இயங்கும் பாகங்களைக் கொண்டிருக்காது. சேமிப்புத் தொட்டிகள், அழுத்தக் கலன்கள் (pressure vessels), வெப்பப் பரிமாற்றிகள் (heat exchangers), நெடுந்தூண் கலன் (Column), புகைப்போக்கி (chimney), பிக் லாஞ்சர், பிக் ரிசீவர் போன்ற கலன்கள் இவற்றில் அடங்கும்.

இந்தக் கலன்களை உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய ரசாயன ஆலை, எரிவாயு உற்பத்தி ஆலை, மருந்துப்பொருட்கள் உற்பத்தி ஆலை, உணவு பதப்படுத்தும் ஆலை போன்ற எல்லா வகை பெரிய தொழிற்சாலைகளிலும் காணலாம். இன்னும் சொல்லப்போனால் கலன்கள் இல்லாத ஆலைகளே இல்லை எனலாம்.

கலன்களின் வடிவும் அளவும்

கலன்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு அளவுகளில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் உயரம் 54 மீட்டர். ஆனால், இந்த வகைத் தொழிற்சாலைகளில் 30 மீட்டர் உயரமும், 100 மீட்டர் விட்டமும் கொண்ட கலன்கள் முதல் நமது வீடு தேடி வரும் எரிவாயு சிலிண்டர்வரை வெகு சாதாரணமாகக் காணலாம்.

பயன்பாட்டுக்கு ஏற்ப இவை செவ்வக வடிவமாகவோ கிடைமட்ட உருளை வடிவத்திலோ (Horizontal cylinders), செங்குத்து உருளை வடிவத்திலோ (vertical cylinders), அல்லது கோள வடிவத்திலோ (spherical in shape) தயாரிக்கப்படுகின்றன. கிடைமட்ட உருளைகள் மற்றும் கோளங்கள் பொதுவாக ஹைட்ரோகார்பன் அல்லது ரசாயனப் பொருட்களின் முழு அழுத்த சேமிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

கலன்களின் தேவை

திரவ மற்றும் வாயு வடிவிலுள்ள பொருட்களைக் கலன்களில்தான் சேமித்து வைக்க முடியும். தொழிற்சாலைகள் தங்களது மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களைச் சேமித்துவைப்பதற்கு பிரம்மாண்டமான அளவிலான கலன்களைப் பயன்படுத்துகின்றன.

என்னென்ன வேலை?

கலன் வடிவமைப்புப் பொறியாளர் (Static Equipment Engineer), கலன் பகுப்பாய்வுப் பொறியாளர் Static Equipment Analyzer), மற்றும் கலன் வரைவாளர் (draughtsman) உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.

கலன் வடிவமைப்புப் பொறியாளரின் பணி கலன் அளவு மற்றும் தடிமனை, கலனில் சேமிக்கப்படும் திரவம் அல்லது வாயு, அதன் வெப்பம், அழுத்தம், சூழலின் தட்பவெட்பம் ஆகியவற்றைப் பொறுத்து வடிவமைப்பதாகும். கலன் பகுப்பாய்வுப் பொறியாளரின் பணி கலனின் திறனை மென்பொருள் மூலம் பகுத்தாய்வதாகும்.

கலன் வரைவாளரின் பணி, மேலே சொல்லப்பட்ட மற்றப் பொறியாளர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் கலன் வரைபடம் (Equipment Drawing) வரைந்து, அதைக் கட்டுமானப் பணிக்குக் கொடுப்பதாகும்.

அனுபவமே சிறந்த தகுதி

இத்துறையைப் பொறுத்தவரை படிப்பு, தகுதியைவிட, அனுபவ அறிவுக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிறார் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் கலன் வடிவமைப்புத் துறையின் தலைவரான செல்லசாமி: “பட்டதாரிகள் சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் சென்று ஓரிரு வருடங்கள் இத்துறையில் அனுபவம் பெற்றால் பிறகு கைநிறையச் சம்பளத்துடன் நிரந்தர வேலையில் இருக்கலாம். ஏனென்றால், இத்துறையைப் பொறுத்தவரை அனுபவத்துக்கே முதலிடம். இதை என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்.

இயந்திரவியல் பொறியியலில் பட்டயப் படிப்பை முடித்து, பின் ஒரு சிறிய நிறுவனத்தில் வரைவாளராக (Draftsman) 36 ஆண்டுகளுக்கு முன்பு வேலைசெய்யத் தொடங்கினேன். அதன் பின்னர் பகுதிநேரப் படிப்பாகப் பொறியியலில் பட்டம் பெற்றேன். பல்வேறு பெரும் நிறுவனங்களில், பல்வேறு நாடுகளில் பணியாற்றினேன். இப்போது கலன் வடிவமைப்புத் துறையின் தலைவராக வளர்ந்திருக்கிறேன்” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்