ஐஸ்கிரீம் குச்சிகள், பாட்டில் மூடிகள், பசைத் துப்பாக்கி, ரப்பர் பேண்ட்களை வைத்து ஒரு காரை உருவாக்கி, அது ஓடும்போது மாணவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் அதைக் கொண்டாடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த பால வித்யா மந்திர் பள்ளியின் அறிவியல் ஆய்வகம் ‘இன்னோ லேப்’-ல்(Inno Lab) கண்ட காட்சி இது. அங்கு மாணவர்கள் பெரும் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கொண்டாட்ட நிகழ்வுகளைப் போல அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
‘கிட்ஸ்ஸ்டார்ட் - இன்டகிரேட்டட் சயின்ஸ் ஃபன்டாட்டம் லேப்’(Kidsstart - Intergrated Science Fundattam Lab) உதவியோடு அவர்களுடைய பள்ளியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அறிவியல் ஆய்வகமே அந்த மாணவர்களின் உற்சாகத்துக்குக் காரணம். 6,7,8-ம் வகுப்பு மாணவர்களை மனதில்வைத்து இந்தப் பள்ளியில் பிரத்யேகமான அறிவியல் பரிசோதனைகளை வடிவமைத்துக்கொடுத்திருக்கிறது ‘கிட்ஸ்ஸ்டார்ட்’.
ஆர்வத்தைத் தூண்டும் பரிசோதனைகளை
மாணவர்களிடம் ஆறாம் வகுப்பிலிருந்தே அறிவியல் மீதான ஆர்வத்தை விதைக்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வகம் செயல்படுகிறது. ரப்பர் பேண்ட்டில் ஓடும் கார்கள், பலூன்களின் உதவியோடு கரிம வாயுவின் இருப்பை நிரூபித்தல், காந்தங்களின் செயல்பாடுகள், மாடி ஸ்விட்ச்களின் இயக்கம், பூச்சி ரோபோட் என இந்த ஆய்வகத்தில் மாணவர்கள் செய்யும் பரிசோதனைகள் அனைத்தும் அவர்களுக்கு அடிப்படை அறிவியலை வேடிக்கையாகக் கற்றுக்கொடுக்கின்றன.
25chgow_Kidsstart3மாணவர்களைத் தேர்வுகளில் மதிப்பெண்கள் வாங்குவதற்கு மட்டும் தயார்படுத்தாமல், அவர்களுக்கு ஆரம்பத்திலேயே வலிமையான அறிவியல் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆய்வகம். பாடத்திட்டத்தில் வரும் கடத்திகள், கடத்தாப்பொருள், பெர்னொலி தத்துவம், மையவிலக்கு இயக்கம், வட்ட இயக்கம் போன்றவற்றையும் இந்த ஆய்வகப் பரிசோதனைகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இயற்பியல், வேதியியல் மட்டுமல்லாமல் கணிதம் சார்ந்த பரிசோதனைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
“ஒரு வாரத்தில் 80 நிமிடங்களை இந்த ஆய்வகத்தில் மாணவர்கள் செலவிடுகின்றனர். ஆசிரியர்களின் பெரிய தலையீடு எதுவும் இல்லாமல், மாணவர்களே குழுக்களாக இந்தப் பரிசோதனைசெய்கின்றனர். அத்துடன், அவர்களுடைய ஆய்வகச் செயல்பாடுகளும் மதிப்பிடப்படுவதில்லை. அதனால் அவர்கள் சுதந்திரமாக எந்த மன அழுத்தத்துக்கும் ஆட்படாமல் முழு ஈடுபாட்டுடன் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
25chgow_Kidsstart6ஒவ்வொரு ஆய்வக வகுப்பு முடிந்தவுடன், மாணவர்கள் அன்று செய்த பரிசோதனைகளைப் பற்றிய கருத்துகளை உடனுக்குடன் எங்களுக்கு எழுதித் தருகிறார்கள். அவர்கள் இந்த அறிவியல் பரிசோதனைகளை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை அந்தக் கருத்துகளைப் படிக்கும்போது தெரிந்துகொள்ளமுடிகிறது” என்கிறார் பாலவித்யா மந்திர் பள்ளியின் துணை முதல்வர் உஷா.
பேராசிரியர்களின் ஆலோசனைகள்
அறிவியலை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்கும் இது போன்ற ஆய்வகங்களைப் பேராசிரியர்களின் ஆலோசனைகளோடு வடிவமைத்துத் தருகிறது ‘கிட்ஸ்ஸ்டார்ட்’. இந்தப் பள்ளியின் அறிவியல் ஆய்வகம், ஐ.ஐ.டி. திருப்பதியின் பதிவாளரும் இயற்பியல் துறை பேராசிரியருமான முனைவர் டி.எஸ். நடராஜனின் ஆலோசனைகளோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் படித்து மட்டுமே அறிவியலைக் கற்றுக்கொள்ள முடியாது.
சைக்கிள் ஒட்டுவதையும், நீச்சல் அடிப்பதையும் புத்தகத்தில் படித்து எப்படிக் கற்றுக்கொள்ளமுடியாதோ, அப்படித்தான் அறிவியலையும் படித்து மட்டும் புரிந்துகொள்ள முடியாது. அறிவியலை வகுப்பறையில் பாடம் எடுப்பதால் மட்டும் மாணவர்களுக்குப் புரியவைக்கமுடியாது. இந்த மாதிரி, மாணவர்களை முழுமையாக அறிவியல் ஆய்வகங்களில் ஈடுபடுத்தும்போதுதான் அவர்களுடைய அறிவியல் ஆர்வம் அதிகரிக்கும்.
அதுவும், ஆறாம் வகுப்பிலேயே ஆய்வகங்களில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கும் இந்த மாணவர்கள் 9-ம் வகுப்புக்குச் செல்லும்போது சர்வதேச அறிவியல் போட்டிகளில் கலந்துகொள்ளும் திறனைப் பெற்றுவிடுவார்கள். அறிவியலை இப்படி மாணவர்களுக்குப் பிடிக்கும்படி விளையாட்டாகக் கற்றுக்கொடுக்கும்போது அது மாணவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டு சேர்க்கும்போது, அது மேம்பட்ட ஓர் அறிவியல் சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்” என்று சொல்கிறார் பேராசிரியர் டி.எஸ். நடராஜன்.
மேலும் தகவல்களுக்கு: www.kidsstart.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago